Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு திருமணம் பேசி முடிக்கப்படும்... (பிப்ரவரி 27,2022))

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு திருமணம் பேசி முடிக்கப்படும்... (பிப்ரவரி 27,2022))

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரை உங்கள் ராசிப்படி இன்றைய நாள் எப்படி இருக்கும்.

மேஷம்:

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எடுத்த சில முடிவுகள் இப்போது சாதகமான பலனைத் தரத் தொடங்கும். அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் உங்களைப் பற்றி தவறான கருத்தை பரப்பலாம். அதை எதிர்த்து நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதேபோல, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் பரிசு உங்களை உணர்ச்சி ரீதியாக சந்தோஷப்படுத்தும். பல் பிரச்சனைகள் விரைவில் வரலாம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படகு

ரிஷபம்:

பணியிடத்தில் உங்களின் பல பிரச்சனைகளுக்கு நல்ல வழிகாட்டுதலை நீங்கள் பெறுவீர்கள். உங்களின் தேவைகளுக்கு ஒத்துழைக்கும் எண்ணம் கொண்ட நல்ல மனிதர்களின் குழுவுடன் பணிபுரிவதால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். தாம்பத்தியம் அல்லது காதல் உறவில் இருப்பவர்களின் வாழ்க்கை மெதுவான ஓட்டத்துடன் செல்லும். நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், அதற்கான முன்பதிவு செயலமுறைகள் உடனடியாக நடைபெறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகளின் குழு

மிதுனம்:

கடந்த ஆண்டு கனவாகத் தோன்றிய ஒன்று இப்போது நிஜமாக நடக்க போவதை உணர்வீர்கள். அலுவலகத்தில் நம்பகமான சக ஊழியர்களை நீங்கள் காண்பீர்கள். சந்தேக எண்ணம் உங்கள் வேலையின் வேகத்தை அழிக்கக்கூடும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் ஆன்மீக பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறிய தாமதங்கள் உங்களை வருத்தப்படுத்தலாம். ஆனால் அதற்காக வருந்த வேண்டாம், உறுதியாக இருங்கள், விஷயங்கள் சீராக நடக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உயரமான கட்டிடம்

கடகம்:

நீங்கள் முன்பு வேலை செய்த அதே உற்சாகத்துடன் இப்போதும் வேலை செய்ய வேண்டும். உள்ளார்ந்த பிரதிபலிப்பு பயிற்சி உண்மையில் உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் எல்லா இடங்களிலிருந்தும் உதவி மற்றும் ஆதரவைத் தொடர்ந்து சேகரிக்க வேண்டும். புத்துணர்ச்சியூட்டும் வெளியூர் பயணம் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முத்து

சிம்மம்:

உங்கள் வருமானத்தை அதிகரிக்க, நீங்கள் வேலை மற்றும் முதலீடுகளில் சரிசமமான கவனத்தை செலுத்த வேண்டும். எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன்னதாக பிளானிங் மிக அவசியம். ஆலோசனைக்காக மற்றவர்கள் உங்களைத் தேடலாம். உங்கள் ராசி நட்சத்திரங்கள் வெவ்வேறு மூலங்களிலிருந்து பல ஆதாயங்களைப் உங்களுக்கு கொடுக்கும். உங்கள் கருத்தை குடும்பத்தில் யாராவது எதிர்க்கலாம். இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். மேலும் இன்றைய நாளில் பொறுமையாக இருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல கதிர்

கன்னி:

எளிமையான ஞானத்திற்குப் பதிலாக அதிக நடைமுறை அறிவும் செயல் சார்ந்த திட்டமும் தேவைப்படும். புதிதாக ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்திருந்தால், அதற்கான வேலைகளை இப்போதே தொடங்க வேண்டும். நீங்கள் அதிகமான நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஒரு பழைய சக ஊழியர் உங்களுக்கு உதவியாக இருப்பார். குடும்பத்தினர் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் திட்டம் சார்ந்த யோசனைகளை வெளியாட்களுடன் பகிர வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பித்தளை சிலை

துலாம்:

மற்ற நாட்களைப் போலல்லாமல், இந்த நாள் உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும். இன்றைய ஆற்றல்கள் உங்கள் திட்டங்களை செயலாக்க ஆதரிக்கின்றன. நேரத்தை வீணாக்காமல், நீங்கள் செயலில் ஈடுபட வேண்டும். ஷாப்பிங் செய்யும் போதும் அல்லது ஏதேனும் காகிதத்தைச் சமர்ப்பிக்கும்போதும் கவனமாக இருங்கள். நண்பருடன் பேசிய பிறகு இழந்த சுறுசுறுப்பினை மீண்டும் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வில் டை

விருச்சிகம்:

முக்கியமான விஷயத்தில் இறுதி முடிவெடுப்பது பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். ஆனால் நிலைமைகள் சாதகமாக இருக்காது. பிறரது விஷயங்களில் தலையிடாதீர்கள். இப்போது எடுக்கப்படும் சில கடுமையான முடிவுகள் பின்னர் உங்களை வருத்தப்படச்செய்யலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல்நலக் குறைகளை போக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உலர்ந்த பூக்கள்

தனுசு:

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும். பிரிந்த உறவுகளும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. செல்வாக்குமிக்க நபர்களை சந்திப்பீர்கள். இது வரவிருக்கும் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கருத்தை வெளிப்படுத்த தயங்காதீர்கள். அது உங்களுக்கு பாராட்டுகளை பெற்றுத்தரும். ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பைப் பெறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

மகரம்:

உங்களின் நேர்மையான நோக்கத்தாலும், உண்மையான அக்கறையாலும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். சில சமயங்களில் காரணமின்றி மக்களை நீங்களே அழைப்பது நல்லது. உங்களின் நட்பு மனப்பான்மை உங்களுக்கு நல்ல மதிப்பை பெற்றுத்தரும். நேரமின்மை மற்றும் தாமதம் ஆகியவை இருக்கும் என்பதால், எந்த ஒரு செயலையும் வீணடிக்காமல் முயற்சி செய்யுங்கள். உங்களது குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவர் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்பலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி நிலைப்பாடு

கும்பம்:

சமூகமயமாக்கல் உங்கள் முதன்மையான அக்கறை என்றால். நீங்கள் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியே செல்ல விரும்புகிறீர்கள், அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உங்கள் உண்மையான பிம்பத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறீகள். அது உங்கள் வேலையை பாதிக்கும். உங்கள் திறன்களை மேம்படுத்தி, அறிவை விரிவுபடுத்தி முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். உங்கள் CV ஐப் புதுப்பிக்கவும். ஒரு இளையவர் உங்களிடமிருந்து உத்வேகம் பெறலாம். ஆக்கப்பூர்வமான திறமையானவர்களை தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் செரிமான அமைப்பு சற்று பாதிப்படையலாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அமைதியான இசை

மேலும் படிக்க...Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 27)

மீனம்:

நீங்கள் இப்போது பல நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருக்கலாம், ஆனால் உங்களுக்கு இன்னும் தேவைப்படுவது பணிவான அணுகுமுறை. சில சமயங்களில் நீங்கள் பணிவோடு இல்லாமல், உங்களை சுற்றியுள்ளவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் உங்களை நிரூபிக்க நிறைய முயற்சிகள் செய்வீர்கள். ஆனால் அதற்கு உணர்தல் மற்றும் உள் பிரதிபலிப்பு இன்னும் தேவைப்படுகிறது. பொருள் செல்வத்தை குவிப்பதன் மூலமும், உங்கள் குழந்தைப் பருவத்தை விட சிறந்த வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலமும், நீங்கள் எல்லாவற்றையும் அடைந்துவிடீர்கள் என்று எண்ணுவது தவறு. சமநிலையான வாழ்க்கையை உருவாக்க நீங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்குத் உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர்ம நாவல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி