Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு கணவன்-மனைவி உறவு பலப்படும்... (ஏப்ரல் 21, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு கணவன்-மனைவி உறவு பலப்படும்... (ஏப்ரல் 21, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | இன்று நீங்கள் பல பணிகளை முடிக்க வேண்டியிருக்கலாம். பல பணிகள் இருந்தாலும் நீங்கள் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்து முடிக்க வேண்டும்.

மேஷம்:

இன்று நீங்கள் உங்கள் உண்மையான திறமையை வெளிப்படுத்த விரும்பினால், அதை வெறும் வார்த்தைகளால் செய்யாமல் செயல்களால் செய்து நிரூபியுங்கள். ஒரு சிலர் உங்களை பற்றி தவறாக பேச கூடும். ஆனால் அவற்றை புறக்கணித்து விட்டு உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு டேஞ்சரின் துணி

ரிஷபம்:

இன்று சில வீட்டு பிரச்சனைகள் உங்களை எரிச்சலடைய செய்யலாம். மனைவியிடம் சமீபகாலமாக நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தால் கணவன் - மனைவி உறவு சில மாற்றங்களுக்கு உள்ளாகலாம். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் இருந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்ள நினைக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு குருவி

மிதுனம்:

இன்று உங்களுக்கு கிடைக்கும் எதிர்பாராத வாய்ப்பு உங்களை உற்சாகப்படுத்த கூடும். இன்று உங்களிடம் ஒப்படைக்கப்படும் அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தேரை

கடகம்:

எதிர்பாராத விருந்தினர் ஒருவர் உங்களை தேடி இன்று வரலாம். இன்று உங்கள் உணர்ச்சி வெடிப்புகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் உறவில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். நெருக்கடியை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மயில்

சிம்மம்:

சில புதிய நபர்களின் நட்பு உங்களை தேடி வரலாம். ஆனால் அவர்களிடம் அதிகம் பழகாமல் ஒரு தூரத்திலேயே வைப்பது தான் உங்களுக்கு நல்லது. உங்களது நாள் நிம்மதியாக செல்ல வேண்டும் என்றால் உங்கள் வாழ்விற்கு மிகவும் புதிதாக இருக்கும் விஷயங்களை ஒதுக்கி வையுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - லில்லி மலர்கள்

கன்னி:

நீங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதால் உங்களை நீங்களே சந்தேகிக்க தேவை இல்லை. இன்று புதிய யோசனைகளை அவசரமாக செயல்படுத்த தேவை ஏற்படலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் குறுகிய பயணம் வெற்றிகரமாக நிறைவேறும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சாக்லேட் பாக்ஸ்

துலாம்:

நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒருவரை மீண்டும் இன்று சந்திக்க வேண்டிய நிர்பந்தம் உங்களக்கு ஏற்படலாம். உங்களுக்கு தேவைப்படும் விஷயங்களில் எதிர்பாக்கும் முடிவுகளை அடைய நீங்கள் இன்று கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வெள்ளி மோதிரம்

விருச்சிகம்:

இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நிலையை அடைய கூடும். அந்த நிலை உங்களது மன உறுதி மற்றும் கடின முயற்சிகளுக்கு பலனாக கிடைக்க கூடும். உங்களது நிலையை கண்டு சுற்றி இருப்பவர்கள் மகிழ்வார்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தங்க வளையல்கள்

தனுசு:

இத்தனை நாள் உங்கள் மனதை அழுத்தி கொண்டிருந்த பெரிய பாரம் ஒன்று இன்று நீங்ககூடும். உங்களுக்கு தேவையான நிவாரணம் இன்று கிடைக்கும். புதிய விஷயங்களை தேடி செல்ல அல்லது கற்று கொள்ள இன்று நல்ல நாள். உங்களுக்கு பிள்ளைகள் ஏதேனும் அறிவுரைகளை கூறினால் அலட்சியப்படுத்தாமல் கண்டிப்பாக கேட்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தெளிவான குவார்ட்ஸ்

மகரம்:

இன்று நீங்கள் பல பணிகளை முடிக்க வேண்டியிருக்கலாம். பல பணிகள் இருந்தாலும் நீங்கள் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்து முடிக்க வேண்டும். வேலைப்பளு சற்று அதிக இருந்தாலும் மாலை பொழுது உற்சகமானதாக அமையும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கால் மெட்டி

கும்பம்:

எந்த வேலையையும் பிறகு பார்க்கலாம் என தள்ளி போடாதீர்கள். . தள்ளிப்போடும் உங்கள் பழக்கம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். அது போல பல வேலைகள் இருந்தாலும் உங்கள் உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செலினைட் கிரிஸ்டல்

மீனம்:

நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்ட ஒருவரைச் சந்திப்பதன் மூலம் இன்று நீங்கள் மகிழ்ச்சியாக மற்றும் உற்சகமாக இருப்பீர்கள். இந்த சந்திப்பு உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செம்பருத்திப் பூ
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி