Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு புதிய பணிக்கான வாய்ப்பு உருவாகும்... (ஏப்ரல் 19, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு புதிய பணிக்கான வாய்ப்பு உருவாகும்... (ஏப்ரல் 19, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | உங்களால் தீர்வு காண முடியாத பிரச்சினையை மறந்து விடுவது நல்லது. உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ள ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கக் கூடும்.

மேஷம்:

உண்மையை வெளிப்படுத்த இன்று அழகான நாள் ஆகும். இதற்கு முன்பே இதுபோன்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருந்தாலும், அது இந்த அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருந்திருக்காது. மனதில் அடக்கி வைத்திருப்பதை கொட்டி விடுங்க. இனி புதியதொரு தொடக்கம் வர இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கழுகு

ரிஷபம்:

நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்வது அரிதான ஒன்றுதான். ஆனால், இப்போது மறு யோசனை செய்வதை நீங்கள் உணர்வீர்கள். பிறர் நலனுக்காக உடனடி முடிவு எடுக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு பலன் கிடைக்க இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மிளகு

மிதுனம்:

நீங்கள் மாபெரும் காரியத்தை செய்து முடித்திருந்தாலும் அதற்கு உடனடி அங்கீகாரம் எளிதாக கிடைக்காது. பணியிடத்தில் நேர்மறையான போக்கு தென்படலாம். ஆனால், அது வழக்கத்தை விட மெதுவானது தான். உங்கள் பதிலடிக்காக சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய சைக்கிள்

கடகம்:

மிகுந்த சிக்கலான விஷயங்களுக்கும் கூட உங்கள் அனுபவத்தால் தீர்வு காண்பீர்கள். உங்களுக்கான நல்ல காலம் பெருகி வருவதை நீங்களே உணர முடியும். இந்த வாரத்தில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெரிய கப்

சிம்மம்:

உங்கள் பழைய தவறுகளால் சில வடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அனைத்தையும் மன்னிக்க வேண்டிய நேரமிது. இன்றைக்கு திடீர் ஆச்சரியம் ஏற்படலாம். பெரும்பாலும் பழைய நண்பர் அந்த ஆச்சரியத்தை தர கூடும். நீண்ட காலமாக மனதில் நீடித்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு

கன்னி:

மிக ஆழமான, அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவதற்கு உகந்த நாள் இதுவாகும். அதனை பயனுள்ளதாக மாற்றி கொள்ள உங்கள் பங்களிப்பை சரியாக வழங்க வேண்டும். ஒருமுக மனதுடன் செயல்பட்டீர்கள் என்றால் அதற்குரிய பலன் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி

துலாம்:

வாழ்வில் தற்போதைய சிக்கலுக்கு மத்தியில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது. உங்கள் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கலாம். குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உங்களுடன் காதலில் உள்ள நபருடன் கூடுதல் நேரம் செலவழிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமிடு

விருச்சிகம்:

உங்களைப் பற்றிய செய்தி ஒன்று வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. உங்களை இதுவரையில் சந்திக்காத ஒருவர் இப்போது சந்திக்க நேரிடலாம். டூல்ஸ் அல்லது ஸ்பேர் பார்ட்ஸ் சார்ந்த தொழில் செய்து வருகிறீர்கள் என்றால், பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகத கல்

தனுசு:

நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மனதிற்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம். புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் உருவாக இருக்கிறது. அதை என்னவென்று கவனியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு நிதி சார்ந்த நெருக்கடி ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாத்து

மகரம்:

உங்களால் தீர்வு காண முடியாத பிரச்சினையை மறந்து விடுவது நல்லது. உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ள ஒருவரை நீங்கள் சந்திக்கக் கூடும். உங்கள் மனதில் இப்போது புத்தாக்க சிந்தனைகள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு நூல்

கும்பம்:

மிக எளிமையான கண்ணோட்டம் கொண்டிருப்பதால் உங்கள் பணியும் எளிமையாக நிறைவு பெறலாம். மிகுந்த எதிர்பார்ப்பு தான் சில சமயங்களில் தேவையற்ற சிரமங்களை கொண்டு வரும். சின்ன கொண்டாட்ட நிகழ்வு ஒன்று நடைபெற இருக்கிறது. அதில், அனைவரின் கவனத்தையும் பெறுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டிசைனர் கடிகாரம்

மீனம்:

புதிய பணி வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. அதை கவனமுடன் பரிசீலனை செய்யுங்கள். உங்களிடம் சில விஷயங்களை பேசுவதற்கு சரியான தருணம் எதிர்ப்பார்த்து உங்கள் பெற்றோர் காத்திருக்கின்றனர். வீட்டிற்கு விருந்தினர்கள் வர கூடும். பண வரவு அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புறா
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி