ஹோம் /நியூஸ் /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (18-04-2022) பணவரவு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும் நாள்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (18-04-2022) பணவரவு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும் நாள்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஏதோ குறை இருப்பது போலவே உணர்வீர்கள். உங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராகலாம். உங்கள் திறமைகள் வெளிவரும் நாளாக இன்று இருக்கலாம். உங்களின் கனவு வாழ்க்கை நிஜமாக முயற்சி எடுக்க வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களிடம் சரியாக, தெளிவாக வெளிப்படுத்துங்கள். ஏனெனில் உங்களிடம் தெளிவு இல்லையென்றால் உங்கள் பணி அல்லது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்படும் அபாயம் உள்ளது. வெளியூரில் வசிக்கும் ஒருவர் உங்களுக்கு கஷ்டம் தர முயற்சி செய்யலாம். ஆனால் உங்களால் அதை சமாளிக்க முடியும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு குருவி

ரிஷபம்:

நிதி ஆதாயங்களுக்காக இதுவரை உங்கள் கொள்கையில் இல்லாத ஒன்றை நோக்கி செல்ல கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனினும் நீங்கள் முடிந்தவரை தவிர்ப்பது நலம். உங்கள் வாழ்வில் இதுவரை நடக்காத பல நிகழ்வுகள் நடக்க கூடும். அவை உங்கள் திறமைக்கு சவால் விட கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு வாத்துகள்

மிதுனம்:

அலுவலக ஊழியர்கள் என்றால் உங்களின் செயல்திறன் மீதான மதிப்பாய்வு விரைவில் முடியகூடும் என்பதால், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க பாருங்கள். விளையாட்டுகள் மற்றும் உடல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது உங்களுக்கு எதிர்காலத்தில் உதவும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அரச மரம்

கடகம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற உங்களது நீண்டநாள் விருப்பம் இன்று நடக்கலாம். கடந்த காலத்து நேர்மறையான நினைவுகளை அசைபோடுவீர்கள். மாலை நேரம் இனிமையாக மாறும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு களிமண் பாத்திரம்

சிம்மம்:

வேறு யாராவது உங்கள் விஷயங்களை உங்களுக்குச் சரியாக அமைத்து கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்களுக்கு வேண்டிய விஷயங்களை சுதந்திரமாக நீங்களே செய்வது தான் உங்களுக்கு நல்லது. புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கேளிக்கை பூங்கா

கன்னி:

இன்று உங்களுக்கு ஓய்வான நாளாக இருக்கலாம். பணவரவு மற்றும் பாராட்டுகள் கிடைக்க கூடும். இத்தகைய நாட்கள் அரிதானவை என்பதால் முழுமையாக அனுபவிக்க பாருங்கள். அதோடு உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வதில் உறுதியாக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு அருங்காட்சியகம்

துலாம்:

பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பயனுள்ள நாளாக இருக்கும். சவால்களை எதிர் கொண்டால் விடா முயற்சியுடன் முன்னேற நினைப்பீர்கள். இது உங்கள் நாளை சிறப்பானதாக மாற்றும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பைரைட் கிறிஸ்டல்

விருச்சிகம்:

இன்று நீங்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனதளவில் நிறைய கவலைகள் இருந்தாலும் முடங்கி விடாமல் எந்த அளவு செயப்படுகிறீர்களோ அந்த அளவு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். எனவே எந்த விஷயங்களையும் தள்ளி போடாமல் உடனுக்குடன் முடிக்க பாருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிரிஸ்டல் கிளாஸ்

தனுசு:

ஒரே நேரத்தில் நடக்கும் பல விஷயங்களால் இன்று உங்களுக்கு கொஞ்சம் மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் பெற்றோருக்கு இப்போது உங்களிடமிருந்து ஒரு நல்ல உறுதிப்பாடு தேவை. எனவே இடர்பாடுகளை சந்தித்தாலும் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரத்தின் தடிப்பான மையப்பகுதி

மகரம்:

உங்களது வேண்டுதல்களுக்கு பதில் கிடைக்கும் ஆனால் மெதுவாக தான் கிடைக்கும். நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் நீங்கள் மற்றவரை குறை கூற வேண்டாம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் நீங்கள் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஆலமரம்

கும்பம்:

நீங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஏதோ குறை இருப்பது போலவே உணர்வீர்கள். உங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராகலாம். உங்கள் திறமைகள் வெளிவரும் நாளாக இன்று இருக்கலாம். உங்களின் கனவு வாழ்க்கை நிஜமாக முயற்சி எடுக்க வேண்டிய நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வயல்

மீனம்:

காலை நேரம் கொஞ்சம் பதற்றமாக சென்றாலும் நேரம் ஆக ஆக பதற்றம் மறைந்துவிடும். ஏராளமான வேலைகள் இருந்தாலும் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் வெளியே சென்று உற்சகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இன்று உங்களுக்கு சந்தோஷமான நாள் தான்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி வேலைப்பாடு

Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan