இன்று உங்கள் மனதிற்கு அமைதி தேவைப்படலாம் மற்றும் எதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கு தேவை. யாரிடமாவது நீங்கள் மன்னிப்பு கேட்பதாக இருந்தால் காத்திருக்காமல் உடனடியாக கேட்டு விடுங்கள். இல்லையென்றால் அதற்கான வாய்ப்பை இழப்பீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்டில் இமேஜ்
ரிஷபம்:
இன்று உங்களுக்கு ஒரு பரபரப்பான நாள். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் பணி பட்டியலின் பெரும்பகுதியை நீங்கள் முடித்து நலன் பெயர் எடுக்கலாம். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. உங்களது நெருங்கிய நண்பரை பற்றிய நேர்மறையான செய்தி ஆறுதல் அளிக்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்வர் வயர்
மிதுனம்:
ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் இன்று நிலையான வளர்ச்சியை சந்திக்கலாம். அடுத்து வரும் சில மாதங்களுக்கான புதிய திட்டங்கள் மற்றும் யோசனைகளை இன்று நீங்கள் உருவாக்க வேண்டியிருக்கும். பல ப்ராஜக்டுகள் இருந்தாலும், வரையறுக்கப்பட்டவற்றில் கவனம் செலுத்தி பணிபுரிய இன்று உங்களுக்கு நல்ல நாள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - 2 பட்டங்கள்
கடகம்:
இன்று உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் திறமையை வெளிப்படுத்த நலன் வாய்ப்புகள் அமையும். உங்கள் நம்பிக்கை மற்றும் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமை ஏற்படுத்த கூடும். சுற்றியுள்ள சிலர் உங்கள் திறமைக்கு எதிராக உங்களை பற்றி கிசுகிசுக்கலாம். எனவே எச்சரிக்கை தேவை.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிடார்
சிம்மம்:
இன்றைய நாளின் தொடக்கம் கவலையாக இருந்தாலும், சிக்கல்களை தீர்த்து முன்னேறுவதில் இன்று உங்காளுக்கு சிறப்பான நாள் தான். வழக்கத்திற்கு மாறான ஒன்று உங்கள் மனதில் இடம் பிடிக்கலாம். உங்கள் அலுவலகத்தில் முன்பு வேலை பார்த்த சக ஊழியரை எதிர்பாராமல் சந்திக்க நேரிடலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு விலங்கின் நிழல்
கன்னி:
நீங்கள் நீண்ட காலமாக தேடி கொண்டிருக்கும் கேள்விகளுக்கான பதில்கள் இன்று உங்களுக்கு கிடைக்க கூடும். பொழுதுபோக்கு, மதிய உணவிற்கு வெளியே செல்வது அல்லது நண்பர்களுடன் வெளியூர் செல்வது என்று உங்களுக்கு இன்று உற்சாகமான பொழுதாக அமையும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கார்ட்டூன்
துலாம்:
நீங்கள் எதிர்பார்த்த வேலையில் காணப்படும் முன்னேற்றத்திற்கான சில அறிகுறிகள் உங்களுக்கு இன்று நிம்மதி தரும். எதிர்பாராத அல்லது திட்டமிடப்படாத பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை தரும். யாரேனும் உங்கள் உறவை மீண்டும் பழைய மாதிரி புதுப்பிக்க நினைத்தால் அவர்களை மீண்டும் ஏற்று கொள்வது குறித்து இன்று நீங்கள் பரிசீலிக்கலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு கல்
விருச்சிகம்:
நீங்கள் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருக்கும் உங்களின் ஒரு ரகசியம் இப்போது வேறு ஒருவருக்கு தெரிய வரலாம். நீங்கள் மறந்து போன ஒரு சில கடமைகளை கொண்டிருக்கலாம். அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். உங்களின் உதவி தேவைப்படுவோருக்கு உடனடி கவனம் செலுத்துங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பெட்டி
தனுசு:
நீங்கள் வழக்கத்தை விட இன்று அமைதியாக இருக்க விருப்புவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு புதிய வேலையை சிறப்பாக முடிப்பது எப்படி என்பது பற்றிய வியூகத்தை வகுப்பதில் இன்றைய நாளின் பெரும்பகுதியை செலவிடுவீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நட்சத்திரக் கூட்டம்
மகரம்:
சில நாட்களாக உங்களை பாடாய் படுத்தி கொண்டிருக்கும் சில விஷயங்களுக்கு மத்தியில், இன்று நீங்கள் மேற்கொள்ளும் அலுவலக பயணம் ஓய்வெடுக்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். நீங்கள் மிகவும் நம்பும் நண்பர் இப்போது உங்காளுக்கு உதவியாக இருப்பார். நீங்கள் பயணம் செல்லும் இடத்தில உள்ள உறவினரும் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஆறு
கும்பம்:
பல விஷயங்களுக்கு தீர்வு காண உங்கள் மனசாட்சியிடம் கேள்வி கேட்டு பதிலை பெறுவது நல்ல தீர்வாக இருக்கும். சிறியளவிலான சந்தோஷங்கள் இன்று உங்களை உற்சாகமாக வைக்க போதுமானதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இன்று ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பெரிய பதுங்குகுழி
மீனம்:
பல நாட்களாக விட்டுவிட வேண்டும் என்ற ஒரு பழக்கத்தை இன்று நீங்கள் விடுவீர்கள். யாராவது உங்கள் வேலையை பாராட்டி பேசி இருந்தால், அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், உங்கள் வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். உங்கள் திறனை வளர்த்து கொள்வதில் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இன்று இருக்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.