Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு மாயஜாலங்கள் நிறைந்த நாளாக இருக்கும்... (மே 08, 2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு மாயஜாலங்கள் நிறைந்த நாளாக இருக்கும்... (மே 08, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | கடந்த ஆண்டில் கனவு போல தோன்றிய ஒன்றை, இப்போது நனவாக மாற்ற தொடங்குவீர்கள்...

மேஷம்:

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எடுத்த முடிவுகளுக்கு இப்போது நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு அருகாமையில் இருக்கும் சிலர் உங்களை பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் தவறானதாக இருக்கும். இருப்பினும், கோபத்தை கட்டுப்படுத்தி வாதங்களை தவிர்க்கவும். பல் சார்ந்த பிரச்சனைகள் வரக் கூடும். முன்னெச்சரிக்கை தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பேப்பர் படகு

ரிஷபம்:

நீங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கக் கூடும். குறிப்பாக, பணி சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். உங்கள் தேவைகளை உணரக் கூடிய, நல்ல ஒத்துழைப்பு அளிக்கக் கூடிய நல்லெண்ணம் கொண்டவர்களுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவி

மிதுனம்:

கடந்த ஆண்டில் கனவு போல தோன்றிய ஒன்றை, இப்போது நனவாக மாற்ற தொடங்குவீர்கள். நம்பிக்கைக்கு உரிய தொழில் கூட்டாளிகளை நீங்கள் தேடிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், தொடர்ந்து சந்தேகம் கொண்டிருப்பதால் உங்கள் பணிகள் பாதிக்கக் கூடும். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கட்டடம்

கடகம்:

பணிகளில் நீங்கள் ஏற்கனவே காட்டியே அதே வேகத்துடன் இப்போதும் பணி செய்ய வேண்டும். ஆழ்மனதை ஒருங்கிணைக்கும் பயிற்சிகள் பலன் தரக் கூடும். தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள் உங்களை குழப்பம் அடையச் செய்யும். இருப்பினும், அனைத்து இடத்தில் இருந்தும் நீங்கள் உதவி மற்றும் ஆதரவை நாடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்

சிம்மம்:

உங்கள் லாபங்களை அதிகரிப்பதற்கு நீங்கள் பணி மற்றும் முதலீடுகளில் உறுதியுடன் செயல்பட வேண்டும். செயலில் இறங்குவதற்கு முன்பாக வரைபடம் தயாரித்துக் கொள்வது உண்மையிலேயே பலன் அளிக்கும். பல்வேறு தரப்புகளில் இருந்து உங்களுக்கு எண்ணற்ற லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவர் உங்கள் வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ ரே

கன்னி:

வெறும் புத்தியைக் காட்டிலும் யதார்த்த அறிவு மற்றும் செயல்திட்டம் ஆகியவை தேவைப்படுகிறது. எதையேனும் புதிதாக செய்ய வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் அதை உடனடியாக தொடங்கிவிட வேண்டும். குடும்பத்தில் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்களுக்கு சிறகுகளை கொடுக்க வேண்டுமெனில் அவற்றை வெளிநபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பித்தளை பாத்திரம்

துலாம்:

மற்ற நாட்களைப் போல அல்லாமல் இந்த நாளில் அனைத்தும் கனக்கச்சிதமாக இருக்கும். உங்கள் செயல்திட்டங்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஆகவே, நேரத்தை வீணடிக்காமல் அவற்றை செய்து முடிக்கவும். உங்கள் நண்பரை சந்திப்பதன் மூலமாக இழந்த உற்சாகம் திரும்பக் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கட்டு

விருச்சிகம்:

முக்கியமான ஏதோ ஒரு விஷயம் குறித்து முடிவு செய்வதற்கு முன்பாக நீங்கள் குழப்பம் அடைவீர்கள். நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் விஷயத்தை தற்போதைக்கு ஒத்திவைக்க வேண்டும். அடுத்தவர்களின் விஷயங்களில் தேவையின்றி தலையிடாதீர்கள். இப்போது எடுக்கும் கடினமான முடிவுகளால் பின்னர் வருத்தம் அடையக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வயலெட் பூக்கள்

தனுசு:

இன்றைய நாள் மாயஜாலங்கள் நிறைந்ததைப் போல இருக்கும். திருமண யோகம் கூடி வரும். பிரிவு ஏற்பட்ட உறவுகளில் கூட நல்ல மாற்றம் தென்படும். இனி வரும் நாட்களில் மிகவும் பயன் தரக் கூடிய செல்வாக்கு மிகுந்த நபரை சந்திக்க இருக்கிறீர்கள். உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணத்துப்பூச்சி

மகரம்:

உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரையும் உங்கள் நேர்மை மற்றும் அக்கறை மூலமாக ஈர்ப்பதற்கான நேரம் இது. நட்பு ரீதியாக பழகும் உங்கள் குணம், உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். குடும்பத்தில் உங்களை விட வயதில் மூத்த ஒருவர் உங்கள் உதவிக்காக காத்திருப்பார். இன்று சமையலறையில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்

கும்பம்:

உங்கள் திறன்களை மேம்படுத்தவும், அறிவை விரிவுபடுத்தவும் சரியான தருணம் இது. உங்கள் பயோடேட்டாவைக் கூட நீங்கள் மேம்படுத்தலாம். எழுத்தின் மீது நீங்கள் ஆர்வம் கொண்டவர் என்றால், அதற்கான தகவல்களை திரட்டி, முறைப்படி வெளியிடலாம். கற்பனைத் திறன் வாய்ந்த நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அமைதியான இசை

மீனம்:

உங்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், பணிவான குணமே தற்போதைய தேவை. சில சமயங்களில் நீங்கள் அமைதியை மறந்துவிட்டு, சுற்றத்தாரை தவறான முறையில் தொந்தரவு செய்வீர்கள். உங்களை யார் என்று நிரூபிப்பதற்கான எண்ணற்ற முயற்சிகளை செய்ய இருக்கிறீர்கள். இருப்பினும் யதார்த்தை உணருவது மற்றும் ஆழ்மன உறுதி ஆகியவை தேவையாகும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நாவல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி