Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சந்தோஷம் மிகுந்த நாளாக இருக்கும்... (ஏப்ரல் 26, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சந்தோஷம் மிகுந்த நாளாக இருக்கும்... (ஏப்ரல் 26, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்குவது போல் உங்களுக்கு தோன்றும். இன்று முக்கியமான ஒன்றை மீண்டும் பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருக்கலாம். உங்களின் இரையை கண்ணோட்டங்களை மாற்ற முயற்சி செய்யலாம்.

மேஷம்

இன்று தொழில்ரீதியாக செல்வாக்கு மிக்கவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவீர்கள். உங்களின் மனம் மிகவும் குழப்பமாக இருந்தால் வீட்டில் உள்ளவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் இன்று உங்களுக்கு நடைபெற வாய்ப்புள்ளது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: முழு நிலவு

ரிஷபம்

இன்று நீங்கள் மிகவும் நெகிழ்வாகவும் வசதியாகவும் உணர்வீர்கள். உங்கள் மனைவியுடன் அன்பாக நேரம் செலவிடுங்கள். இன்று உங்களுக்கு கவனச்சிதறல்கள் ஏற்படக்கூடும் என்பதால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதில் இருந்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு புதிய இலை

மிதுனம்

இன்றைய நாளில் உங்களுக்கான அடுத்தடுத்த பயணங்கள் குறித்து திட்டமிடலாம். உங்கள் பழைய நண்பர்களை சந்திக்கலாம். இது உங்களுக்கு மனநிறைவை தரும். இன்றைய நாளில் நீங்கள் பிஸியாக இருப்பது போல உணர்வீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: இறகு

கடகம்

உங்கள் கடந்தகால செயல்கள் இன்று உங்களை வழி நடத்தும். உங்கள் வேலையில் முழுமை பெற, சிறிது நேரத்தை ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் ஒரு முக்கிய பணியிடத்தை உருவாக்க விரும்பினால், அதை இப்போது செய்யலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: சூரியகாந்தி பூ

சிம்மம்

இன்று பிறருக்கு உணவை தானமாக வழங்கினால் நல்லதே நடக்கும். மேலும் உங்கள் வீட்டில் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டால், அதை சுமூகமாக கையாள முயற்சியுங்கள். நீங்கள் உங்களின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக சிலவற்றை இன்று திட்டமிடலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு ஜோடி செருப்புகள்

கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு சிக்கல் மிகுந்ததாக இருக்கும். மேலும் உங்கள் அணுகுமுறையால் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் பாதிக்கப்படலாம். புதிய வேலை அட்டவணையை உருவாக்க இது ஒரு நல்ல நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: பீங்கான் கிண்ணம்

துலாம்

உங்கள் மனதில் உள்ள பயத்தை போக்கினால், இந்த நாள் சிறப்பானதாக மாறும். நீங்கள் தவிர்க்கும் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளது. எனவே அதை சரியாக செய்யுங்கள். இன்று சிறிய சொறி அல்லது தோல் ஒவ்வாமை உங்களை எரிச்சலடையச் செய்யலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: மெழுகுவர்த்தி

விருச்சிகம்

உங்களைப் பற்றிய சில வதந்திகள் பரவ கூடும். ஆனால், அதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாமல் இருப்பது நல்லது. நீங்கள் தவற விட்ட கடந்த கால வாய்ப்பு மீண்டும் உங்களை தேடி வரலாம். குழந்தைகளுக்கு வழக்கத்தை விட அதிக கவனம் தேவைப்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: தோட்டம்

தனுசு

பழைய விஷயங்களை பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், இன்றே அதைச் செய்து முடித்திடுங்கள். இன்று நீங்கள் புதிய உற்சாகத்தை பெறுவீர்கள். ஆரோக்கியம் முதன்மையானது என்பதை எப்போதும் மறக்காதீர்கள். எனவே அதற்காக சரியான நேரத்தை செலவிடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: மஞ்சள்

மகரம்

ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்குவது போல் உங்களுக்கு தோன்றும். இன்று முக்கியமான ஒன்றை மீண்டும் பார்க்கும் மனநிலையில் நீங்கள் இருக்கலாம். உங்களின் இரையை கண்ணோட்டங்களை மாற்ற முயற்சி செய்யலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: கருப்பு கல்

கும்பம்

நீங்கள் நிதானமாக இருப்பது போல் உணர்வீர்கள், உங்கள் ஆரோக்கியம் குறித்து யோசிக்க இது ஒரு நல்ல நாள். இன்று மற்றவர்களிடம் கடன் கேட்பது நல்ல யோசனையல்ல.அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு சிவப்பு ரோஜா

மீனம்

நீங்கள் ஒரு முக்கியமான பதிலுக்காக காத்திருந்தால் இன்று அதற்கான விடை கிடைக்கும். எந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் பல முறை யோசித்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பாராத தொலைபேசி அழைப்பு உங்கள் நாளை பிரகாசமாக்கக்கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: இரண்டு வாத்துகள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி