முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஆகஸ்ட் 8, 2022) எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்

Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஆகஸ்ட் 8, 2022) எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்

ராசி பலன்

ராசி பலன்

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்

இன்றைய நாளில் பல முக்கிய விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே நம்பிக்கையுடன் இந்த நாளை தொடங்குங்கள். காதல் உறவு அல்லது திருமண உறவில் உள்ளவர்கள் உங்களைப் பற்றி தேவையற்ற அனுமானங்களை கொண்டு இருக்கலாம். உங்களை மகிழ்வாக வைக்க இந்த நாளை நண்பர்களுடன் செலவிடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஜோடி சூட்கேஸ்கள்

ரிஷபம்

உங்களை பற்றி நிரூபிக்க அசாதாரண வாய்ப்புகள் உங்களை தேடிவரும். உங்கள் நாள் சாதகமாக அமைய இறைவனை வழிபடுங்கள். இன்றைய நாளை எளிமையாக தொடங்குங்கள். இன்று உங்களை தேடி ஏராளமான வெகுமதிகள் வரக்கூடும். உங்கள் பண விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டிய நேரம் இது.உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: முழு நிலவு - ஒரு பூக்கடை

மிதுனம்

ஒவ்வொரு வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது இன்று சவாலாக இருக்கலாம். இன்றைய ஆற்றலை சமநிலைப்படுத்த, அதிகாலை நேரத்தில் தியானம் செய்யுங்கள். ஏற்கனவே சிக்கலில் இருக்கும் ஒருவரை கிண்டல் செய்யாமல் இருங்கள். ஏனென்றால் உங்களுக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சூரிய அஸ்தமனம்

கடகம்

நீங்கள் படிப்படியாக மக்களை நம்பத் தொடங்க வேண்டும். அது உங்கள் அன்றாட வாழ்க்கையை முன்னேற்ற செய்யும். கடந்த கால சம்பவம் மீண்டும் உங்கள் நினைவுக்கு வந்து உங்களை தொந்தரவு செய்யலாம். உங்கள் நாள் திருப்தியாக இருக்க பிறருக்கு உதவி செய்யுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்:ஒரு புதிய நாற்காலி

சிம்மம்

உங்களை பற்றிய கட்டுக்கதை விரைவில் முறியடிக்கப்படும், மேலும் இதன் மூலம் நீங்கள் யதார்த்தத்தைப் பார்க்க முடியும். உங்கள் வேலையில் உறுதியுடன் இருப்பது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும். வழக்கத்திற்கு மாறாக பிஸியான நாளாக இன்று இருக்கலாம். முக்கிய விஷயங்களை ஒத்திவைக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: - ரப்பர் ஆலை

கன்னி

பழைய காலத்தில் அறிமுகமானவருக்கு பண உதவி தேவைப்படலாம். அவருக்கு உதவ முயற்சி செய்யுங்கள். உங்கள் சேமிப்பிற்கு மேலும் ஊக்கம் தேவைப்படலாம். உடல்நலப் பிரச்சினைகளை ஒத்திவைக்க முடியாது, குறிப்பாக பல் சார்ந்த பாதிப்புகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையேல் பாதிப்பு அதிகமாகும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: - ஒரு வெள்ளி ஸ்பூன்

துலாம்

உங்கள் உள்ளுணர்வு உங்கள் நாளை நிர்வகிக்க உங்களை வழிநடத்தும். ஒரு முக்கியமான சந்திப்பு எதிர்காலத்திற்கான தெளிவான அடையாளத்தைக் கொடுக்கும். இன்று தொண்டு செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை நீங்கள் உணரலாம். அதை தொடர்ந்தும் செய்து வரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: - ஒரு நீல விளையாட்டு பை

விருச்சிகம்

இன்றைய நாள் சுமை மிக்கதாக இருக்க வாய்ப்புண்டு. இந்த நாளின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும், தவறான புரிதல்களைத் தவிர்க்க உங்கள் எல்லா தகவல் தொடர்புகளையும் தெளிவாக வைத்திருக்க முயற்சிக்கவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளமாக மாறும்

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: - ஒரு கறை படிந்த கண்ணாடி

தனுசு

நீங்கள் விரும்பிய வழியில் இந்த நாளை அழகாக தொடங்கலாம். நீங்கள் புதிதாக ஏதாவது ஒரு பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. சிறிய திருட்டு சார்ந்த ஆபத்து இருப்பதால் உங்கள் பொருட்களை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு புதிய பந்து

மகரம்

உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் பெரும்பாலும் நல்லதே நினைத்தாலும் மற்றவர்கள் அப்படி இருப்பதில்லை. எனவே ஜாக்கிரதையாக செயல்படுங்கள். இன்று ஆவணங்களை சரி செய்ய ஒரு சிறந்த நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: ஒரு சிவப்பு செங்கல் சுவர்

கும்பம்

நேசிப்பவருடன் நல்ல உரையாடல் இந்த நாளின் உங்கள் சிறப்பம்சமாக இருக்கலாம். சூழ்ச்சி செய்யும் நபர்களிடம் இருந்து நீங்கள் தூரமாக இருப்பது நல்லது. இந்த நாள் பல வாய்ப்புகளை கொண்டதாக இருக்கும். எனவே நீங்கள் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று கொண்டு முன்னேற முயற்சியுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்: முழு நிலவு - ஒரு பிரகாசமான ஒளி

மீனம்

புதிய நடைமுறையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது உங்களுக்கு நல்லது தான் என்பதை உணருங்கள். இன்று புதிதாக முதலீடு செய்து தேவையில்லாத ரிஸ்க் எடுக்காதீர்கள். பழைய நண்பரின் திடீர் வருகை உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கலாம்.

மேலே இருந்து அதிர்ஷ்ட அடையாளம் - தங்க நட்சத்திரம்

First published:

Tags: Rasi Palan