Home /News /spiritual /

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 5, 2022) தொழிலில் அதிக லாபம் இருக்கும்..!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 5, 2022) தொழிலில் அதிக லாபம் இருக்கும்..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 5) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று உங்கள் தொழிலில் அதிக லாபம் இருக்கும். அன்றாட வீட்டு வேலைகளை சமாளிக்க இன்று உங்களுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. இது மட்டுமின்றி, இன்று உங்கள் குழந்தை தொடர்பாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். எனவே நிதானத்துடன் இருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: டர்க்கைஸ் நிறம்
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு லட்டு படைக்கவும்.

ரிஷபம்:

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வானிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. வியாபார ரீதியாக இன்றைய நாள் இனிமையாக இருக்கும். இன்று வேலையில் அவசரத்தைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
பரிகாரம்: மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்

மிதுனம்:

இன்றைய நாள் அனுகூலமானது. தொழிலில் ரிஸ்க் எடுப்பது இன்று நல்ல லாபம் தரும். பொறுமை மற்றும் உங்கள் மென்மையான குணம் மூலம் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். துன்பத்தில் இருப்பவருக்கு உதவி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்:7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: அம்மனுக்கு இனிப்பு வைத்து படையுங்கள்.

கடகம்:

நிலுவையில் உள்ள முடிவுகளை இன்று முடிக்க பாருங்கள். நலம் விரும்பிகளின் ஆலோசனைகளை மதித்து நடப்பது நல்லது. பொருளாதார விஷயங்களில் சுறுசுறுப்பு தேவை. இன்று ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உங்கள் பட்ஜெட்டுக்குள் வேலைகளை முடிக்க பாருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டையை படையலாக போடவும்.

சிம்மம்:

இன்று அதிர்ஷ்டம் உங்க பக்கம் வலுவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபமும் செல்வாக்கும் இன்று அதிகரிக்கும். சிறந்த சமநிலையை வைக்க மனநிலையை அமைதியாக வையுங்கள். சிறந்த தலைமை பண்பு உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு இன்று உதவியாக இருப்பார்கள். இன்று பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அது நன்மையாகவே முடியும்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
பரிகாரம்: காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

கன்னி:

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் இன்றைய நாளை தொடங்குங்கள். பணியிடத்தில் உங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும், இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இன்று உருவாகும்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
பரிகாரம்: அனுமனுக்கு தேங்காய் பிரசாதம் வையுங்கள்

துலாம்:

எந்தவொரு முக்கியமான வேலையையும் செய்வதற்கு முன் உங்கள் அன்புக்குரியவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். சீக்கிரம் யாரையும் நம்பாதீர்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். பொருளாதார பரிவர்த்தனைகளில் தெளிவு இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது. ஆரோக்கியத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: துர்கைக்கு சிவப்பு புடவையை வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.

விருச்சிகம்:

பெரிய முயற்சியால் தொழில், வியாபாரம் வலுவடையும். அன்புக்குரியவர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சந்திப்பு ஏற்படலாம். குடும்பத்தாரின் ஆதரவு வீட்டில் நிலைத்திருக்கும். இன்று உங்களுக்கான வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல காரியங்கள் பல இன்று நடக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பரிகாரம்: சிறுமிகளுக்கு உணவை தானமாக தரலாம்.

தனுசு:

பரஸ்பர உறவுகள் வலுப்பெறும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும், இது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அன்றாட வாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இன்று அதிகம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 0
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
பரிகாரம்: வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.

மகரம்:

புத்திசாலித்தனமாக இருந்து முடிவுகளை எடுங்கள். இன்று நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தி உங்களை தேடி வரும். நீங்கள் ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்தவராக இருப்பீர்கள். பெரிதாக நினையுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்
பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனுக்கு நீரைக் கொடுக்கவும்.

கும்பம்:

பொருள் விஷயங்களில் கவனம் தேவை. அதிகப்படியான ஆசை உங்களை கடனாளியாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும் முழு நம்பிக்கையுடனும் செய்யுங்கள். குடும்ப விஷயங்களில் கண்ணியம் தேவை. இல்லையேல் சிக்கல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
பரிகாரம்: தாமரை மலரை மஹாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மீனம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைவருடனும் இணக்கம் அதிகரிப்பது நன்மை தரும். இன்று தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும், இது பணம் பெற புதிய வாய்ப்புகளை கொடுக்கும். இன்று உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சகோதர சகோதரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். இன்றைய நாளை உங்களுக்கான நாளாக மாற்றுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: இறைவனை வழிபடுவது நல்லது
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி