ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 28, 2022) தொழிலில் முதலீடு செய்ய ஏற்ற நாள்..!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 28, 2022) தொழிலில் முதலீடு செய்ய ஏற்ற நாள்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 28) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

வணிகம் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது தெளிவான சிந்தனையுடன் முடிவு செய்யவும். தேவையற்ற விஷயங்களில் நேர விரயம் செய்ய வேண்டாம். இல்லை என்றால் உங்கள் பணத்தையும், உன்களுக்கான வாய்ப்புகளையும் இழக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம் - பிள்ளையாருக்கு இனிப்பு படைக்கவும்.

ரிஷபம்:

நிதி சார்ந்த விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யலாம். பணியிடத்தில் திருட்டு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் மோசடியால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

பரிகாரம் - அனுமன் கோவிலில் தேங்காய் உடைக்கவும்.

மிதுனம்:

இன்றைய நாள் அவ்வளவு நன்றாக இருக்காது. திடீர் பணிகளுக்காக நீங்கள் கடன் பெற வேண்டியிருக்கலாம். ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக கவனமுடன் படித்து பார்க்கவும்.

பரிகாரம் - ஆதித்ய ரிதயோஸ்தர மந்திரத்தை ஜெபிக்கவும்.

கடகம்:

பொருளாதார சூழல் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அந்தப் பணத்தை வீட்டு செலவுக்கு பயன்படுத்தாமல், சரியான முறையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம் - பசுவுக்கு வெல்லம் கொடுக்கவும்.

சிம்மம்:

அதிர்ஷ்டம் காரணமாக வாய்ப்புகள் உருவாகலாம். பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை செலவிடும் முன்பாக யோசியுங்கள் அல்லது எதிர்காலத்தில் வருத்தம் அடைய நேரிடும். பணத்தை சேமிக்க முயற்சிக்கவும்.

பரிகாரம் - ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்குங்கள்.

கன்னி:

இன்று அலுவலகப் பணி பாதிக்கப்படலாம். அதிகாரிகள் மத்தியில் உங்களுக்கு கெட்ட பெயர் உண்டாகக் கூடும். திடீர் பண வரவுகளை எதிர்பார்க்கலாம். கண்ணை மூடிக் கொண்டு யாரையும் நம்ப வேண்டாம்.

பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலில் மயில் இறகு வழங்கவும்.

துலாம்:

பணியிடத்தில் நீங்கள் காட்டும் அதிகப்படியான கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு இன்று சிக்கலான நாளாகும். எந்தவொரு பொறுப்பையும் ஏற்கும் முன்பாக கவனமுடன் இருக்கவும்.

பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

விருச்சிகம்:

பணியிடத்தில் நீங்கள் பெறும் வெற்றி என்பது ஊக்கம் தருவதாக அமையும். பொருளாதார சூழல் மேம்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எதையும் பேரம் பேசும் தன்மை கொண்டவர் நீங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம் - சிவனுக்கு அபிஷேகம் செய்யவும்.

தனுசு:

வணிகம் சார்ந்த விஷயங்களில் லாபம் கிடைக்க இருக்கிறது. நிலுவையில் உள்ள பணம் வந்து சேருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். வீட்டில் கொண்டாட்டமான சூழல் நிலவும்.

பரிகாரம் - வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் பெரியவர்களிடம் ஆசி பெறவும்.

மகரம்:

சிறு வணிகர்களுக்கு இன்று உகந்த நாளாக இருக்கிறது. சிறப்பான வணிகத்தை நீங்கள் பெற முடியும். அதே சமயம், பணியில் உள்ள நபர்களுக்கு நேரம் சரியில்லை. நீங்கள் பண நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். யோசித்து கடன் கொடுங்கள்.

பரிகாரம் - நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

கும்பம்:

நிதி நிலைமை மோசமாக மாற இருக்கிறது. திடீர் பிரச்சினைகள் உருவாகக் கூடும். தேவையற்ற இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆறுதலான விஷயம் என்ன என்றால் குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம் - ராம மந்திரம் உச்சரிக்கவும்.

மீனம்:

எல்லோரையும் அரவணைத்துச் செல்ல முயற்சிக்கவும். சகோதரர்கள் இடையே ஏதோ சில காரணங்களால் சண்டை, சச்சரவுகள் உருவாகக் கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணத்தை எளிமையாக மீட்க முடியும்.

பரிகாரம் - அனுமனுக்கு நெய்விளக்கு ஏற்றவும்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan