ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 27, 2022) பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்..!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 27, 2022) பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 27) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

வணிகர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருப்பதால், ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியம் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது.

பரிகாரம் - பசுவிற்கு பச்சை புல் அல்லது கீரையை உண்ணக் கொடுக்கவும்.

ரிஷபம்:

கடன் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். அதிர்ஷ்டத்திற்காக வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

மிதுனம்:

தடைபட்ட காரியம் விரைவில் கைக்கூடும் என்பதால், கவலைப்பட வேண்டாம். அலுவலக பணியாளர்களுக்கு வேலை தொடர்பாக தகராறு ஏற்படலாம். சொத்து தொடர்பான முதலீடுகள் நன்மை தரும்.

பரிகாரம்: ஏழைக்கு வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.

கடகம்:

இன்று ஊழியருக்கு, பணியிடத்தில் அதிகாரியிடமோ அல்லது வணிகத் துறையில் தொழிலதிபருடனோ மோதல் ஏற்படலாம். உங்களை பார்த்து பொறாமைப்பட்டவர்களுக்கு, இன்று திறமையால் பதிலடி கொடுப்பீர்கள். இன்று புதிய தொழில் தொடங்க ஏற்ற நாள்.

பரிகாரம்: பறவைக்கு தானியம் வைக்கவும்.

சிம்மம்:

புதிய வேலைகள் மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்கள் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறலாம். இன்று எந்தவிதமான பிரச்சனைகளையும் அசால்ட்டாக டீல் செய்யும் அளவுக்கு அருமையான நாள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். ஹார்டு வொர்க்கை விட ஸ்மார்ட் வொர்க் செய்ய திட்டமிட்டால், வேலையை சீக்கிரம் முடித்துவிடலாம்.

பரிகாரம்: கருப்பு நாய்க்கு ஏதாவது இனிப்பு கொடுங்கள்.

கன்னி:

தற்போதைய திட்டங்கள் மற்றும் பணிகளில் தடைகள் இருக்கலாம். இன்றைய தினம் அனைத்துவிதமான வாக்குவாதம் மற்றும் மோதலைத் தவிர்க்க வேண்டும். முதலீட்டை தள்ளிப் போடுவது நல்லது. ஒப்பந்தம் செய்வதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு சேவை செய்யுங்கள்.

துலாம்:

உத்தியோகத்தில் கோபமும் பதற்றமும் இருக்கும். பணம் தொடர்பாக குடும்பத்தினருடன் தகராறு ஏற்படலாம். உணர்ச்சிவசப்பட்டு எந்த வேலையும் செய்யாதீர்கள், அதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்- எறும்புக்கு சர்க்கரை கலந்த மாவு வையுங்கள்.

விருச்சிகம்:

வேலை மாற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களுக்கான வேலைகளைத் தொடங்கலாம். முக்கிய நபர்களை சந்திக்க வாய்ப்புண்டு.

பரிகாரம்: மாலையில் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

தனுசு:

இன்றைய தினம் ஏற்றம், இறக்கம் இரண்டையும் சந்திக்க வேண்டி வரும். தொடரும் பணிகளில் கவனமாக இருக்கவும். உங்களது செல்வாக்கும், கம்பீரமும், எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும் வாய்ப்புகளை எட்டிப்பிடிக்க உறுதுணையாக இருக்கும்.

பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுக்கவும்.

மகரம்:

நீங்கள் எந்த நபரிடமோ, வங்கியிலோ அல்லது நிறுவனத்திலோ கடன் வாங்க விரும்பினால், அந்த யோசனையை அடியொடுவிட்டு விடுவது நல்லது. ஏனெனில் இன்றைய தினம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவீர்கள். பழைய நண்பர்களின் ஆதரவும், புதிதாக நல்ல நண்பர்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

பரிகாரம் - சரஸ்வதி தேவிக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

கும்பம்:

இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பான பலனைத் தரக்கூடும். நிலுவையில் உள்ள பணிகள் இன்று முடிவடையும். நீங்கள் சில வேலைகளில் முதலீடு செய்ய வேண்டியிருந்தால், அதை வெளிப்படையாகச் செய்யுங்கள், எதிர்காலத்தில் உங்களுக்கு முழு பலன் கிடைக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

பரிகாரம்: ராமர் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்.

மீனம்:

புதிய அலுவலகத்திற்கு மாறுவதற்கு அல்லது புதிய திட்டத்தில் வேலை தொடங்குவதற்கு நாள் சாதகமாக இல்லை. வழக்கமான வேலை மூலம் பணம் சம்பாதிக்கலாம். கடன் வாங்க மனதை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு வணிக பங்குதாரர் அல்லது நெருங்கிய கூட்டாளியுடன் பிரச்சனை இருக்கலாம்.

பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.

First published:

Tags: Astrology, Money, Rasi Palan