ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் : நீங்கள் இந்த ராசிக்காரரா? - இன்று (செப்.25) நீண்ட தூரம் பயணங்களை தவிர்ப்பது நலம்!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் : நீங்கள் இந்த ராசிக்காரரா? - இன்று (செப்.25) நீண்ட தூரம் பயணங்களை தவிர்ப்பது நலம்!

பயணம்

பயணம்

astrology prediction | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 25) பலன்கள், பரிகாரங்களை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பணம் தொடர்பான ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று செலவுகள் சற்று அதிகரிப்பதால் கவலை ஏற்படும். இன்று யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: காவி

பரிகாரம்: ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்

ரிஷபம்:

உங்களுக்கான பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள நீங்கள் தான் அதிக முயற்சி எடுக்க வேண்டும். முயற்சி செய்தால் வருமானத்திற்கான வழிகள் தானே திறக்கும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் இன்று செலவுகள் கூடும்.

ராசியான எண்: 1 ராசியான நிறம்: பிங்க்

பரிகாரம்: பசியால் வருவோருக்கு அன்னதானம் செய்யுங்கள்

மிதுனம்:

இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பிறரிடம் ஈகோ காட்டுவதை தவிர்க்கவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக சில பலன்கள் உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: வெளிர் பழுப்பு

பரிகாரம்: சிவபெருமானுக்கு நீர் சமர்ப்பிக்கவும்

கடகம்:

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடைவதுடன் அதனால் பண பலன்களும் கிடைக்கும். இன்று எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். நீண்ட தூரம் பயணம் செய்வதை இன்று தவிர்க்கவும். முதலீடு செய்வதற்கு முன் எல்லா விஷயங்களையும் சரி பார்க்க மனதில் கொள்ளுங்கள்.

ராசியான எண்:5, ராசியான நிறம்: ஆரஞ்சு

பரிகாரம்: அனுமனுக்கு தீபாராதனை காட்டவும்

சிம்மம்:

திடீர் செலவுகள் அதிகரிக்க கூடும் என்பதால் கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ராசியான எண்:9, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்

கன்னி:

நீண்ட காலமாக உங்களுக்குள் இருக்கும் மன கவலைகள் இன்று நீங்கும். இதனால் முழு உற்சாகம் அடைவீர்கள். சொத்து தொடர்பான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்காவிட்டால் லாபத்திற்கு பதில் இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ராசியான எண்:3, ராசியான நிறம்: பாதாமி

பரிகாரம்: பசு மாடுகளுக்கு தீவனம் கொடுங்கள்

துலாம்:

பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களுடன் காதல் உறவில் இருப்பவர்கள் மீது இன்று நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வசதிக்காக செய்யும் சில வேலைகளால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

ராசியான எண்:4, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: ஏழைகளுக்கு உணவுகளை நன்கொடையாக வழங்கவும்

விருச்சிகம்:

பண ஆதாயங்கள் இன்று வலுவாக உள்ளது. பிறருக்கு உங்கள் மீதான மரியாதை மேலும் அதிகரிக்கும். பிறரிடம் கோபத்தை காண்பிப்பது இழப்புக்கு வழிவகுக்கும். எனவே பொறுமை முக்கியம். எதிர்காலத் திட்டங்களுக்கு இன்று கவனம் செலுத்துங்கள், நன்மைகளைப் பெறுவீர்கள்.

ராசியான எண்:10, ராசியான நிறம்: வெளிர் சிவப்பு

பரிகாரம்: ஏழை நபருக்கு சிவப்பு நிற பழங்களை தானமாக கொடுங்கள்

தனுசு:

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்று கிடைக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல முடிவுகளைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி பணியாற்றுங்கள்.

ராசியான எண்:3, ராசியான நிறம்: ஆரஞ்சு

பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்

மகரம்:

இன்று உங்களுக்கு கூடுதல் அதிர்ஷ்டம் இருக்கும், பண விஷயங்களில் முடிவுகள் வெற்றிகரமாக இருக்கும். உறவினர்களுடனான உறவுகள் வலுவாக இருக்கும். வீடு அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ராசியான எண்:7, ராசியான நிறம்: காவி

பரிகாரம்: வெறும் காலில் நடக்கும் ஏழைகளுக்கு காலணிகளை வாங்கி கொடுங்கள்

கும்பம்:

கல்வி தொடர்பான பணிகள் நன்மை பயக்கும். பிறருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், பேச்சில் நீங்கள் கண்ணியமாக இருங்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். செலவுகளை சமாளிக்க இன்று நீங்கள் கூடுதல் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கலாம்.

ராசியான எண்:1, ராசியான நிறம்: சிந்தூரி

பரிகாரம்: அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்

மீனம்:

இன்று எந்தவொரு முக்கியமான முடிவை எடுப்பதில் தாமதம் காட்ட வேண்டாம். தாமதப்படுத்துவதால் நீங்கள் லாப வாய்ப்பை இழக்கலாம். நீண்ட தூரம் பயணங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் முழு உற்சாகத்துடன் வேலை செய்வதால் வெற்றி கிடைக்கும்.

ராசியான எண்:10, ராசியான நிறம்: மெரூன்

பரிகாரம்: பறவைகளுக்கு தானியம் கொடுங்கள்

Published by:Lakshmanan G
First published:

Tags: Astrology, Money, Rasi Palan