ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 24, 2022)  பணியிடங்களில் கவனம் தேவை..!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 24, 2022)  பணியிடங்களில் கவனம் தேவை..!

அலுவலகம்

அலுவலகம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 24) ராசிப்பலன்களை இங்கு பார்க்கலாம். பணியில் இன்று ஏற்றம் மிகுந்த நாளாகும். லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பணியில் இன்று ஏற்றம் மிகுந்த நாளாகும். லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுக்கான சிறப்புக்குரிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். இளம் வயதினர் மிகுந்த ஆற்றலுடன் இருப்பதை உணருவீர்கள். பணியிடத்தில் இளைஞர்களை வெற்றிகரமாக ஊக்குவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்ட எண் - 6

பரிகாரம் - பைரவர் கோவிலில் இனிப்புகளை வழங்கவும்.

ரிஷபம்:

பணம் சார்ந்த விஷயங்களில் தற்போதைய நேரம் நினைவுக்குரியதாக இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்றைக்கு சுதந்திரமாக ஷாப்பிங் செய்யலாம். பணியிடத்தில் நேர்மையுடன் வேலை செய்வீர்கள். நிதி சார்ந்த பலன்கள் கிடைக்க பலமான வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்ட எண் - 2

பரிகாரம் - துர்க்கை கோவிலில் மந்திரம் உச்சரிக்கவும்.

மிதுனம்:

இன்று நிறைய மாற்றங்கள் உண்டாகும். வெற்றியை அடைவதற்கான அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். இன்றைக்கு உங்கள் மனதில் உதிக்கும் புதிய திட்டங்கள் லாபம் தருவதாக அமையும். பணியிடத்தில் சீனியரின் ஆதரவைப் பெற முயற்சி செய்யுங்கள். சேமிப்புக்கான முதலீடுகளை செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்ட எண் - 7

பரிகாரம் - 108 முறை விநாயகர் மந்திரத்தை உச்சரிக்கவும்.

கடகம்:

இன்றைக்கு நீங்கள் எந்தவொரு செயலை முழு அர்ப்பணிப்போடு செய்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடைக்கும். முதலீடு செய்வதற்கு முன்பாக நிபுணர்களை கலந்து ஆலோசனை செய்யவும். வேலையில் மாற்றம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - காவி

அதிர்ஷ்ட எண் - 9

பரிகாரம் - கிருஷ்ணருக்கு இனிப்பு வழங்கவும்.

சிம்மம்:

வேலையில் உள்ள நிபுணர்கள் மன அழுத்தத்தை குறைக்க குறுகிய பயணம் மேற்கொள்ளலாம். இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நிலைமை மோசமடையும். வியாபாரிகள் செய்யும் பரிவர்த்தனையில் நஷ்டம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட எண் - 3

பரிகாரம் - நாய்க்கு ரொட்டி வழங்கவும்.

கன்னி:

அலுவலகத்தில் முன் பின் தெரியாத நபர்களிடம் பேசுகையில் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய நபர்களின் ஆலோசனையை கேட்டு முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் நல்ல காரியத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்ட எண் - 9

பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

துலாம்:

இன்றைய நாள் மிகவும் பலனுள்ளதாக அமையும். பணி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். புதிய வேலையை முன்னெடுத்து செய்வீர்கள். சொத்து விவகாரத்தில் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தார் மூலம் பிரச்சினை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம் - 0

அதிர்ஷ்ட எண் - கருப்பு

பரிகாரம் - ஆழமரத்தடியில் நெய்விளக்கு ஏற்றவும்.

விருச்சிகம்:

பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் இன்றைக்கு சாதகமான நாளாகும். நாள் முழுவதும் லாபம் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைக்கு மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள். குடும்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்ட எண் - 5

பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

தனுசு:

இன்று கவனமாக இருக்க வேண்டும். வணிகத்தில் பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். ஏனென்றால் நஷ்டத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான பணத்தை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் கவலைகள் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 2

பரிகாரம் - சிறைப் பறவைகளை விடுவிக்கவும்.

மகரம்:

இன்றைய சூழலில் பார்ட்னர்ஷிப்புடன் நடைபெறும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். அன்றாட வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மிகச் சரியான நாளாகும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக பெரிய முடிவு ஒன்றை நீங்கள் எடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரோஸி

அதிர்ஷ்ட எண் - 9

பரிகாரம் - பிள்ளையாருக்கு லட்டு படைக்கவும்.

கும்பம்:

உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளவும். பருவநிலை மாற்றம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படலாம். வணிகத்தில் மகிழ்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கும். அவசரத்தை கைவிடவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்ட எண் - 4

பரிகாரம் - நண்பர்களுக்கு உணவளிக்கவும்.

மீனம்:

இன்றைய நாளில் சவாலான காரியங்களை மேற்கொண்டாலும் பலன் கிடைக்கும். பொறுமையாகவும், கனிவோடும் அணுகினால் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - 7

அதிர்ஷ்ட எண் - பச்சை

பரிகாரம் - தாய்க்கு இனிப்பு வழங்கவும்.

Published by:Lakshmanan G
First published: