முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 23, 2022) நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 23, 2022) நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 23) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று வணிக விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் போது நீங்கள் தெளிவான மனநிலையுடன் இருக்க வேண்டும். அதே போல தேவையற்ற அல்லது பயனற்ற விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் பணம் மற்றும் புதிய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

ராசியான எண்: 6, ராசியான நிறம்: கருப்பு

பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் சமர்ப்பிக்கவும்

ரிஷபம்:

இன்றைய நாள் நிதி விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இன்று உங்கள் நிதி நிலை வலுப்படும். இன்று நீங்கள் ஆன்லைன் மோசடிக்கு பலியாகலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: பிங்க்

பரிகாரம்: பைரவர் கோயிலுக்கு சென்று தேங்காய் சமர்ப்பிக்கவும்

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்காது, நிதி விஷயங்களில் சிக்கல்களை சந்திக்கலாம். இன்று நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் கவனமாக படியுங்கள்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: சிவப்பு

பரிகாரம்: சூரிய பகவானுக்கு நீர் வைத்து வழிபடுங்கள்

கடகம்:

இன்று நீங்கள் சரியான ஆலோசனை பெற்று செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் பெரிய நன்மைகளை தரும். இன்று உங்களது பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் காணப்படும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில பணிகளை இன்று நீங்கள் கையில் எடுத்து முடிக்க முயற்சிப்பீர்கள்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: கோல்டன்

பரிகாரம்: மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்

சிம்மம்:

வேலையில் பதவி உயர்வு பெற இன்று வாய்ப்பு உள்ளது. இன்று பணத்தை செலவழிக்கும் முன் சற்று சிந்தியுங்கள், இல்லையெனில் நீங்கள் எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக இன்று சேமிக்க முயற்சிக்கவும்.

ராசியான எண்: 9, ராசியான நிறம்: வயலட்

பரிகாரம்: பசியில் தவிப்போருக்கு மஞ்சள் உணவுகளை தானமாக கொடுக்கவும்

கன்னி:

இன்று கண்களை மூடிக்கொண்டு யாரையும் நம்ப வேண்டாம். அப்படி நம்பினால் உயரதிகாரிகள் மத்தியில் உங்கள் இமேஜ் டேமேஜ் ஆகும். உங்களது நிதி நிலை இன்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு இன்று வெளியில் இருந்து பண ஆதாயங்களும் கிடைக்க கூடும். அலுவலகத்தில் இருக்கும் போது உடல்நலம் பாதிக்கப்படலாம்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: வான் நீலம்

பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று புல்லாங்குழல் வழங்கவும்

துலாம்:

பணியிடத்தில் இன்று நீங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இன்றைய உழைப்பிற்கான பலன்கள் விரைவில் கிடைக்கும். இத்தனை நாள் உங்கள் ஆரோக்கியத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் குறைந்து இன்று ஆரோக்கியமாக உணர்வீர்கள். உங்களை சுற்றி ஏதேனும் சர்ச்சைகள் எழலாம்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: மஞ்சள்

பரிகாரம்: ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்

விருச்சிகம்:

இன்று பொருளாதார நிலையில் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாலை நேரத்தில் பழைய நண்பர்களை சந்திக்க கூடும். பனிடத்தில் கொடுக்கப்படும் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் மன உறுதி இன்று அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ராசியான எண்: 4, ராசியான நிறம்: பாதாமி

பரிகாரம்: சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்

தனுசு:

வணிக ஒப்பந்தங்களில் இன்று லாபம் காண்பீர்கள். இன்று ஒரே நேரத்தில் 2 விஷயங்களைச் செய்ய வேண்டாம். குடும்பத்தில் ஒரு கொண்டாட்ட சூழ்நிலை நிலவும். நிலுவையில் உள்ள பணம் இன்று உங்கள் கைக்கு கிடைக்கும் என்பதால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: ஃபரோஸி

பரிகாரம்: வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்

மகரம்:

இன்று உங்களுக்கு சில விஷயங்களால் நிதி இழப்பு இருக்கலாம், எனவே கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேணுங்கள். இன்று வணிகர்களுக்கு சிறந்த நாள் என்றாலும் வேலை செய்யும் நபர்களுக்கு நாள் சாதகமாக இல்லை.

ராசியான எண்: 8, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்

கும்பம்:

இன்று உங்களுக்கு சற்றே மோசமான நாள். ஒன்றன்பின் ஒன்றாக சிக்கல்கள் வர கூடும். நிதி நிலைமை மோசமடையலாம். பணத்தை செலவழிப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள், எதிர்பாராத இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: ராமர் கோயிலில் உட்கார்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை சொல்லுங்கள்

மீனம்:

நீண்ட காலமாக உங்களுக்கு கிடைக்காமல் நிலுவையில் இருக்கும் உங்களது பணம் இன்று உங்களது கைக்கு எளிதில் வந்து சேரும். சகோதரர்களிடையே மோதல் அல்லது வாக்குவாதம் அதிகரிக்கக்கூடும். இன்றைய நாளை நல்லபடியாக கடந்து செல்ல பேச்சில் இனிமை காட்டுவது முக்கியம்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: ஹனுமானுக்கு நெய் விளக்கு ஏற்றி ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்

First published:

Tags: Astrology, Money, Rasi Palan