முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வியாழக்கிழமை ராசிபலன் | வியாபாரிகளுக்கு முதலீடுகள் செய்ய ஏற்ற நாள் இன்று (செப்டம்பர் 22, 2022).!

வியாழக்கிழமை ராசிபலன் | வியாபாரிகளுக்கு முதலீடுகள் செய்ய ஏற்ற நாள் இன்று (செப்டம்பர் 22, 2022).!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 22) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

தொழில் ரீதியாக இன்று உங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். பணவரவு இன்று சிறப்பாக இருக்கும். அதே நேரம் உறவினர்கள் வருகையால் செலவுகள் கூடும். காதலர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு உணர்வுபூர்வமாக மேலும் வலுவடையும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

ராசியான எண்: 5, ராசியான நிறம்: கிரீம்

பரிகாரம்: பசுவிற்கு பச்சை புல் அல்லது கீரையை கொடுக்கவும்

ரிஷபம்:

இன்று நீங்கள் எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் வெற்றி பெறலாம். திருமண உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்காலத்தில் பயனளிக்கும் புதிய திட்டங்களுக்கு இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

ராசியான எண்: 8, ராசியான நிறம்: வயலட்

பரிகாரம்: துர்க்கை கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்

மிதுனம்:

லட்சியத்தோடு செயல்படுபவர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். ஊழியர்கள் தங்கள் கடின உழைப்பால் மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள். முதலீடுகள் செய்ய திட்டமிட்டிருந்தால் அதற்கு இன்று ஏற்ற நாளாக இருக்கும். இன்று மேற்கொள்ளும் தொழில் பயணங்கள் சாதகமாக இருக்கும்.

ராசியான எண்: 8, ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: ஒரு ஏழைக்கு வெள்ளை பொருட்களை தானம் செய்யவும்

கடகம்:

ஊழியர்களுக்கு பணியிடத்தில் அதிகாரியிடமோ அல்லது வியாபாரிகளுக்கு வணிக துறையில் ஒரு தொழிலதிபரோடனோ விரிசல் ஏற்படலாம். எனினும் உங்களின் திறமையால் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை ஏற்பட கூடும்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: பறவைகளுக்கு தானியம் கொடுங்கள்

சிம்மம்:

பிரச்சனைகளை சமாளித்து தொடர்ந்து முன்னேறும் நாளாக இன்று உங்களுக்கு அமையும். புத்திசாலித்தனமாக வேலை செய்தால் பல புதிய சலுகைகளை பெறலாம். அன்றாட பணிகளை எந்த தடைகளும் இன்றி முடிப்பீர்கள். புதிய வேலைகள் மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ராசியான எண்: 8, ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு உணவு கொடுங்கள்

கன்னி:

இன்று நீங்கள் செய்து முடிக்க எண்ணிய திட்டங்கள் மற்றும் பணிகளில் தடைகள் ஏற்படலாம். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்து எந்த ஒரு வாக்குவாதம் அல்லது மோதலை தவிர்க்கவும். முதலீடு செய்யும் திட்டம் இருந்தால் ஒத்தி வைப்பது நல்லது. ஆவணங்களை கவனமாக படிக்காமல் கையெழுத்து போட்டால் நிதி இழப்பு ஏற்படலாம்.

ராசியான எண்: 8, ராசியான நிறம்: கிரே

பரிகாரம்: மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யுங்கள்

துலாம்:

இன்று நீங்கள் எந்த ஒரு பெரிய வேலையையும் தொடங்கும் முன் கண்டிப்பாக அந்த துறை சார்ந்த சீனியர்களின் கருத்தை கேட்க வேண்டும். தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இன்று கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: லைட் கிரீன்

பரிகாரம்: எறும்புக்கு வைக்கும் மாவில் சிறிது சர்க்கரை சேர்க்கவும்

விருச்சிகம்:

வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். வேலை மாற நினைப்பவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொள்ள முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களுக்கான வேலைகளை இன்று தொடங்கலாம்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: நீலம்

பரிகாரம்: மாலை நேரம் ஆல மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்

தனுசு:

உங்கள் நம்பிக்கையின் அளவு இன்று கணிசமாக அதிகரிக்கும். தொழில் துறையில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களது திறமை மூலம் நீங்கள் யார் என்பதை நிரூபிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும்.

ராசியான எண்: 10, ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம்: சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்

மகரம்:

இன்று நீங்கள் தனிநபரிடமோ, வங்கியிலோ அல்லது நிறுவனத்திலோ கடன் வாங்க நினைத்திருந்தால் பணம் வாங்காதீர்கள். ஏனென்றால் இன்று வாங்கும் கடனை அடைப்பது கடினம். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: கோல்டன்

பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு வெள்ளை பூக்களாலால் அர்ச்சனை செய்யுங்கள்

கும்பம்:

இன்று நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இதுநாள் வரை நிதி விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் இன்று தீரும். நிலுவையில் உள்ள பல பணிகள் இன்று முடிவடையும். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் இன்று தாராளமாக செய்யுங்கள். எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

ராசியான எண்: 3, ராசியான நிறம்: வான் நீலம்

பரிகாரம்: ராமர் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்

மீனம்:

தொழில் சம்பந்தமாக நீங்கள் இன்று செய்யும் பயணங்கள் எதிர்பார்த்த பலனைத் தராது. புதிய பணியிடத்தில் சேர்வதற்கு அல்லது புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளைத் தொடங்குவதற்கு இன்று நல்ல நாள் இல்லை. வழக்கமான வேலை மூலம் வருமானம் கிடைத்தாலும் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: மஞ்சள்

பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்

First published:

Tags: Astrology, Money, Rasi Palan