முகப்பு /செய்தி /ஆன்மிகம் / புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 21, 2022) வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 21, 2022) வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 21) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். சொத்து வகையில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களது அறிவுரை அல்லது பேச்சுக்கு மக்கள் மதிப்பு கொடுப்பார்கள். உங்களின் பெற்றோரின் ஆசியை பெற்றால் அலுவலக அல்லது அரசு துறையில் பாராட்டுகளை பெறுவீர்கள்.

ராசியான எண்: 2, ராசியான நிறம்: காவி

பரிகாரம்: ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்

ரிஷபம்:

இன்று எந்த ஒரு பெரிய முடிவை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு இன்றைய நாள் நன்றாக அமைய வாய்ப்புகள் குறைவு. இதுனால் வரை தடைபட்ட அனைத்து வேலைகளையும் மீண்டும் துவங்கி முடிப்பீர்கள். மாலை முதல் இரவு வரையிலான நேரங்களில் மேற்கொள்ளப்படும் பயணம் நன்மை தரும்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: பிங்க்

பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்

மிதுனம்:

உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் நீண்ட நாட்களாக வராமல் நிலுவையில் இருந்தால், இன்று அதை பெறலாம். இன்று விவேகத்துடன் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். உங்கள் வார்த்தைகளை பிறரிடம் கவனமாக பயன்படுத்துங்கள். உங்களிடம் பேசுபவரின் மனம் வருந்தும்படியான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1, அதிர்ஷ்ட நிறம் - காவி

பரிகாரம் - சிவ பெருமானுக்கு நீர் சமர்ப்பிக்கவும்

கடகம்:

பொருள் வசதிக்காக செலவுகள் இன்று அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதால், பட்ஜெட் போட்டு செலவுகளை கட்டுப்படுத்துவதால் பலன் கிடைக்கும். இன்றைய நாள் அனுகூலமான நாள் என்பதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே உங்கள் வேலையில் வெற்றி பெற முடியும்.

அதிர்ஷ்ட எண் : 5, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

பரிகாரம் - அனுமனுக்கு தீபாராதனை செய்யவும்

சிம்மம்:

பண விஷயத்தில் ஒருவரை நம்பி முடிவெடுக்கும் முன் பலமுறை கவனமாக சிந்தியுங்கள். புதிய திட்டங்களுக்கான பணிகளை இன்று துவக்குவீர்கள். யாராவது உங்களிடம் உதவி கேட்டு வந்தால் முடிந்த வரை அவர்களுக்கு தேவையானதை செய்ய முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட எண் :9, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்

கன்னி:

அதிர்ஷ்டத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருப்பதால் உங்களின் திறமையால் இன்று எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவீர்கள். பல நாட்களாக உடலில் இருந்து வரும் வலிகள் இன்று குணமாகும். உங்கள் குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்ட எண் : 3, அதிர்ஷ்ட நிறம் - பாதாமி

பரிகாரம் - பசுவிற்கு தீவனம் வழங்கவும்

துலாம்:

இன்று உங்களுக்கு பல விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள் இன்று லாபகரமான ஒப்பந்தங்களை பெறுவார்கள். ஊழியர்கள் பணியிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை பெறுவார்கள், இது எதிர்காலத்தில் உங்களை நிதி ரீதியாக பலப்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 4, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

பரிகாரம் - உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்

விருச்சிகம்:

இன்றைய நாள் நீங்கள் உங்களுக்கு வரும் வருமானத்தை விட அதிக செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் செய்யும் சிறப்பான வேலைகளால் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொறுமை மற்றும் திறமையால் எதிரிகளை வெல்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 10 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

பரிகாரம்- ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

தனுசு:

இன்று சுபச்செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாலையில் ஆன்மீகத்தில் நேரம் செலவிடுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

பரிகாரம் - சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்

மகரம்:

இன்று மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். கேட்காமல் யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள், அது எதிர் விளைவையே தரும். உங்கள் மனம் இன்று அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இன்று வெளியே நேரம் செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7, அதிர்ஷ்ட நிறம்: காவி

பரிகாரம் - ஆதரவற்றோருக்கு அவர்களுக்கு தேவையானதை கேட்டு தானம் செய்யுங்கள்

கும்பம்:

இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும், வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் அனைத்து துறைகளிலும் நன்மைகளை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1, அதிர்ஷ்ட நிறம்: சிந்தூரி

பரிகாரம் - ஹனுமானை வழிபட்டு தீபாராதனை செய்யவும்

மீனம்:

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது, எனவே உங்கள் செல்வம் அதிகரிக்கும், பணவரவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் வாக்குவாதங்கள், சச்சரவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் இன்றைய நாள் வீண் டென்ஷனை தரும்.

அதிர்ஷ்ட எண்: 10 அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

top videos

    பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்

    First published:

    Tags: Astrology, Money, Rasi Palan