Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 19, 2022) பணியில் கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 19, 2022) பணியில் கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம் :

இன்று நிலுவையில் கிடக்கும் வேலைகளை முடிக்கவும், தீர்க்கப்படாத கடன்களை செலுத்தவும் ஏற்ற நாள். லேசான நோய் தொற்று அல்லது வலி ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வாக்குவாதத்தின் போது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய சமநிலையான அணுகுமுறை எதிர்காலத்திற்கு உதவக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தோட்டம்

ரிஷபம் :

இன்று புதிய வேலைகளைத் தொடங்க சிறப்பான நாள். சுய பாதுகாப்பை அதிகரிப்பது, யாராவது கடன் கேட்டால் மறுப்பதும் இன்றைய தினத்திற்கு நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இரண்டு இறகுகள்

மிதுனம் :

உங்களது பலவீனத்தை வைத்து சிலர் காரியம் சாதிக்க பார்க்கலாம். இன்று காரியங்களை கச்சிதமாக முடிக்க பேச்சுவார்த்தை ஒன்றே சரியான தீர்வாக அமையும். சக ஊழியர் ஒருவர் உங்களிடம் கேட்கும் உதவி உண்மையானதாக இருக்கும் என்பதால் நீங்கள் உதவ முன்வரலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆற்றங்கரை

கடகம் :

இன்று பழைய நண்பரை சந்திக்கவோ அல்லது பழைய நட்பு மீண்டும் இணையவோ வாய்ப்புள்ளது. வானிலை காரணமாக வெளிப்புற மீட்டிங்குகள் தடைபட வாய்ப்புள்ளது. பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கையால் செய்யப்பட்ட காகித உருவம்

சிம்மம் :

எதிர்பாராதவிதமாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் மகிழ்ச்சியைத் தரலாம். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாக வாய்ப்புள்ளது. ஊழியர் யாராவது பிரச்சனை என உங்களை அணுகினால், அதற்கு முன்னுரிமை கொடுத்து கூடுமான வரை தீர்த்து வையுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - முத்துக்கள்

கன்னி :

பணியிடத்தில் இதுநாள் வரை இருந்து வந்த சூழ்நிலை மாறி, உங்களுக்கு ஏற்றதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் தோன்றலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வீட்டு வாசல்

துலாம் :

உணர்ச்சிவசப்படுவது பலவீனம் அல்ல, அதைவிட பல நல்ல விஷயங்கள் உங்களிடம் உள்ளதை முன்னிலைப்படுத்துங்கள். புதிய விஷயங்களை முயற்சித்து பார்க்க ஏற்ற நாள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு கல்

விருச்சிகம் :

கனவுகள் எப்போதும் ஆழ் மனதின் பய உணர்வு மட்டுமே என்பதால் கெட்ட கனவு பற்றிய அச்சத்தை கைவிடுங்கள். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். பழைய நண்பருடன் நாளை செலவிட திட்டமிடலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செங்கல் சுவர்

தனுசு :

உங்களை நேசிக்கும் ஒருவர் நீங்கள் உடன் இல்லாததை நினைத்து வருத்தப்படலாம். எனவே அன்புக்குரியவர்களுடன் இன்றைய தினத்தை செலவிட திட்டமிடுங்கள். மாலையில் திடீரென வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம். ரெகுலர் ஹெல்த் செக்அப் செய்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நியான் ஹைலைட்டர்

மகரம் :

இன்றைய நாளை பழைய நினைவுகள் ஆக்கிரமிக்கக்கூடும். பெற்றோர் உங்களுடன் கூடுதலாக நேரம் செலவிட விரும்பலாம். பழைய அணுகுமுறைக்கு பதிலாக புதிய திட்டத்தை உருவாக்கவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி பாட்டில்

கும்பம் :

கெட்ட கனவுகள் பற்றிய பயத்தை பின்னுக்குத் தள்ளுங்கள். கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வாழ்க்கையில் அரங்கேறிய நல்ல விஷயங்களை எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்வீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஆலமரம்

மீனம் :

உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் கூடுதலாக நேரம் செலவிட நினைக்கிறார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு வழக்கத்தை விட பணிச்சுமை கூடுதலாக இருக்கும். அரசு அதிகாரிகளுக்கு வேலையில் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மூன்று பறவைகள்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி