Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 16, 2022) தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 16, 2022) தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

சமீபத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட திறன்கள் இப்போது உதவிகரமாக இருக்கும். கூடுதல் பணி சுமை காரணமாக நீங்கள் கொஞ்சம் சோர்வாக உணரக்கூடும். புதிய சவாலை ஏற்க தயாராக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இறகு.

ரிஷபம்:

புதிதாக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பழைய நண்பர் ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள். இலக்கு எதுவும் இன்றி தோராயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்லதல்ல.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். புதிய சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். உங்கள் வரம்புக்கு மீறிய செயல் ஒன்றை செய்வதற்கான ஒப்புதல் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலந்தி.

கடகம்:

நீங்கள் இப்போது உண்மையை தெளிவாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப வாழ கற்றுக் கொள்வீர்கள். நிலைமை எவ்வளவு மோசமாக இருப்பினும், சில நபர்களுக்கு இரண்டாம் முறை வாய்ப்பு அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவி.

சிம்மம்:

எந்த ஒரு செயலும் எதேச்சையாக நடைபெறுவதில்லை. யாரேனும் உங்கள் வழியில் குறுக்கிட்டால், அது வேண்டுமென்றே செய்வதாகும். தடைகள் வெகு விரைவில் நீங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பாத்திரம்.

கன்னி:

உங்களுக்கான சரியான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்கு மனம் நிலையானதாக இல்லை. ஆக நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பானை.

துலாம்:

பணியிடத்தில் புதிய நபர் ஒருவரை நீங்கள் சந்திக்க கூடும். எந்த ஒரு விஷயத்திலும் நீங்களாக ஒரு முடிவுக்கு வரும் முன்பாக, கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு அதனை புரிந்து கொள்ளவும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாமல் எரிச்சல் அடைவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கழுகு.

விருச்சிகம்:

உங்களுக்கான கடைசி வாய்ப்பு வருவதற்கு தாமதம் ஆகிறது என்றால், அதனுடன் ஒரு வெள்ளி கோடு இருக்கிறது என்று அர்த்தம். குழந்தைகள் உங்களுடன் நேரம் செலவிட விரும்புவார்கள். குடும்பத்தில் முதியவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்.

மகரம்:

நீங்கள் முடிவு செய்த விஷயம் ஒன்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நேரம் குறைவாக இருப்பதால் இதற்கு மேலும் தாமதம் கூடாது. இன்றைய நாளில் விருந்தினர்களை எதிர்பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி.

கும்பம்:

பெரும் சுமை உங்களை விட்டு நீங்கியுள்ளதால் நீங்கள் இலகுவாக உணர்வீர்கள். உங்களுக்கு விருப்பமில்லாத விஷயங்களை வேறொரு நாளில் செய்யலாம் என்று ஒத்திவைக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூடு.

மீனம்:

இன்றைய தினம் சற்று மந்தமாக இருக்கும். ஆனால் உங்கள் முடிவுகளை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான திருட்டு குறித்து கவனமுடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆமை.
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி