Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 15, 2022) தடைபட்ட பணவரவு மேம்படும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 15, 2022) தடைபட்ட பணவரவு மேம்படும்..!

Deiviga Vakku

Deiviga Vakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று பாராட்டுக்கள் தேடி வரக்கூடும். வேலையில் உங்கள் செயல்திறன் பற்றி யாராவது குறைகூறினால் அதனை தவிர்த்துவிடுவது நல்லது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட இயற்கையுடன் நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு டூர்மேலைன்

ரிஷபம் :

செப்டம்பர் மாதத்தின் இறுதியில் பயணங்களுக்கு திட்டமிடலாம். முற்போக்கான ஆன்மீக உணர்வுக்கு நல்ல அறிகுறிகள் உள்ளன. தடைபட்ட பணவரவு மேம்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் ரத்தினக்கல்

மிதுனம்:

இன்று ஆற்றல் மட்டம் நன்றாக இருப்பதால், நாளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உறவினருக்கு பண உதவி தேவைப்படலாம். நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்த ஒருவர், இன்று மாலை திடீரென வீட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மரகதம்

கடகம்:

இன்று வெளியூர் பயணம், ஷாப்பிங் என ஜாலியாக பொழுதைக் கழிக்க வாய்ப்பு கிடைக்கலாம். சொன்ன சொல்லைக் காப்பாற்ற ஒப்புக்கொண்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் உதவி இல்லாமல் வழக்கமான வேலைகளை செய்து முடிப்பது கூட சவாலாக அமையலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கார்னிலியன் கல்

சிம்மம்:

புதிதாக ஒருவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் யாருடனும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றைய தினத்தையே பாழக்கக்கூடும். எனவே வாக்குவாதங்களை தவிருங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பைரைட் கல்

கன்னி:

ஒருவருடைய ஈகோ காரணமாக வேலையில் சிக்கல் ஏற்பட்டால் அதனை விட்டு விலகிச் செல்ல முயற்சி செய்யுங்கள். தற்போதைய நிலைக்கு குறுகிய கால திட்டமிடல்களை மேற்கொள்ளலாம். விருந்தினர்களை வரவேற்க தயாராகுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரோஜா மணற்கல்

துலாம்:

இன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட சிறப்பான நாள். வேலைக்கான தேவை ஏற்படும் போது உங்களுடைய பங்களிப்புகளை நிர்வாகம் ஆய்வு செய்யலாம். ஒரு நல்ல பயிற்சி உங்களுக்கு தேவையான ஆற்றலை திரும்பப் பெறலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் அம்பர் கல்

விருச்சிகம்:

இன்று பழைய ஆர்வத்துடன் புதிதாக மீண்டு வந்தது போல் உணருவீர்கள். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சமீபகாலமாக இழந்த முதலீடுகளை திரும்ப பெற வாய்ப்புள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தெளிவான குவார்ட்ஸ் கல்

தனுசு:

வெளிநாடு அல்லது தொலை தூரத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இன்று நாளையே மகிழ்ச்சியானதாக மாற்றும். தற்போது உறவில் இருப்பவர்கள் குறித்து மனதில் எழும் சில குழப்பங்களுக்கு விடை தேவைப்படலாம். உங்கள் தற்போதைய உறவுக்கு சில உடனடி பதில்கள் தேவைப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மூன் ஸ்டோன்

மகரம் :

உடல் நலனுக்காக சில ஹெல்தியான பழக்க வழக்கங்களை தொடக்க நல்ல நாள். நீங்கள் படிக்கக்கூடிய புத்தகம் அல்லது கட்டுரை மூலமாக அப்படியொரு உந்துதல் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தொலைந்து போனதாக நினைத்த பொருள் திரும்ப கிடைக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரெயின்போ ஓப்பல்

கும்பம்:

முன்பு செய்ய நினைத்தவை இப்போது முன்னேற்றத்திற்கான வழியாக அமையலாம். உள்ளுணர்வுசொல்வதை பின்பற்றி, எதிர்மறை எண்ணங்களை கண்காணிக்க வேண்டும். லாபம் - நஷ்டம், ஏற்றம் - இறக்கம் என கலவையான பலன்களைக் கொண்ட நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரோஜா குவார்ட்ஸ்

மீனம்:

வெளிநாட்டவரின் ஒரு நல்ல ஆலோசனையானது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். அதனால் மிகுந்த நம்பிக்கையுடனும், நீண்ட நாட்களாக ஊசலாட்டத்தில் இருந்த முடிவை உறுதியாக எடுக்கவும் நினைப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இன்று முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வைரம்
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி