Home /News /spiritual /

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 10, 2022) பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்..!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 10, 2022) பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்..!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 10) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 10) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 10) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India
மேஷம்

இன்று உங்கள் நிதி நிலைமை மோசமாகலாம் என்பதால் தேவையான அத்தியாவசிய செலவு மட்டுமே செய்யுங்கள். எதிர்பாராத நஷ்டம் ஏற்படலாம். ஒன்றன் பின் ஒன்றாக இன்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என்றாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

ராசியான நிறம்: பச்சை, ராசியான எண்: 5

பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள்

ரிஷபம்

நீண்ட நாட்களாக உங்களுக்கு கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்ட பணம் இன்று எளிதாக உங்கள் கைகளுக்கு வந்து சேரும். திடீர் மாற்றங்கள் பற்றிய கவலை ஏற்படலாம். சகோதரர்களுக்குள் ஏற்படும் விவாதங்கள் உங்களது டென்ஷனை அதிகரிக்க செய்யலாம்.

ராசியான நிறம்: நீலம், ராசியான எண்: 2

பரிகாரம்: ஹனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்

மிதுனம்

இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்து லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் காட்டவும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பு ஒப்பந்தம் கைகூடும்.

ராசியான நிறம்: பச்சை, ராசியான எண்: 6

பரிகாரம்: பைரவர் கோவிலில் இனிப்புகள் வழங்கவும்

கடகம்

சிறப்பான நிதி நன்மைகளை பெறுவதற்கான அதிக வாய்ப்பு இன்று உள்ளது. நீண்ட காலமாக இடமாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

ராசியான நிறம்: வான் நீலம், ராசியான எண்:2

பரிகாரம்: துர்க்கை கோவிலில் துர்கா சாலிசா பாராயணம் செய்யுங்கள்

சிம்மம்

இன்று உங்களுக்கு தோன்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உங்களது பொருளாதாரம் மேம்படும். பணியிடத்தில் உங்கள் சீனியர்களின் ஆதரவை பெற முயற்சி செய்யுங்கள். குடும்ப பிரச்னைகள் குறித்து வீட்டு பெரியவர்களிடம் பேச வேண்டியிருக்கும்.

ராசியான நிறம்: லைட் பிங்க், ராசியான எண்:7

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் அர்ப்பணம் செய்து, விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்

கன்னி

இன்று பணத்தை முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை பெறவும். எந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்தாலும் அதன் பலனை நீங்கள் இன்றே காண்பீர்கள். எனினும் வேலை செய்யும் போது வேலையில் மட்டுமே கவனம் இருக்கட்டும்.

ராசியான நிறம்: காவி, ராசியான எண்:9

பரிகாரம்: கிருஷ்ணருக்கு இனிப்புகளை வைத்து படைக்கவும்

துலாம்

இன்று உங்களுக்கு சில விஷயங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். கவலைகளை குறைக்க சிறிய பயணத்தை திட்டமிடுவீர்கள். இந்த பயணம் மூலம் உங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இவற்றுக்கு மத்தியில் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும்.

ராசியான நிறம்: வெளிர் மஞ்சள், ராசியான எண்: 3

பரிகாரம்: கடுகு எண்ணெயை தடவிய ரொட்டியை கருப்பு நாய்க்கு கொடுக்கவும்

விருச்சிகம்

வெளிநபர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்யாதீர்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். இன்று உங்களுக்கு சற்றும் அறிமுகமில்லாதவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. இன்று வீட்டில் சுப காரியங்கள் பற்றிய பேச்சு எழும்.

ராசியான நிறம்: வெள்ளை, ராசியான எண்: 9

பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யுங்கள்

இதையும் படிங்க: எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10-09-2022) பிச்சைகாரர்களுக்கு எலுமிச்சை சாதம் தானம் செய்யவும்

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சொத்து விஷயத்தில் குடும்பத்தாரும், சுற்றி இருப்பவர்களும் சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பார்கள். எனவே பொறுமையை கடைபிடிக்கவும். நீங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான வேலைகளை இன்று துவக்கலாம்.

ராசியான நிறம்: கருப்பு, ராசியான எண்: 0

பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்

மகரம்

இன்று நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் உங்களுக்கு, பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான விஷயங்கள் நடக்கும். இதனால் இன்றைய லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவும்.

ராசியான நிறம்: வெளிர் நீலம், ராசியான எண்: 5

பரிகாரம்: சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவை 7 முறை பாராயணம் செய்யவும்

கும்பம்

வியாபாரத்தில் பெரியளவில் ரிஸ்க் எடுக்க வேண்டாம், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே இன்று கவனமாக இருக்க வேண்டும். இன்று அத்தியாவசிய தேவைகளுக்கு சிறிதளவு பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

ராசியான நிறம்: சிவப்பு, ராசியான எண்: 2

பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்கவும்

மீனம்

பார்ட்னர்ஷிப் சேர்ந்து செய்யும் தொழில் லாபம் தரும். இன்று உங்கள் குழந்தை தொடர்பாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். அன்றாட வேலைகளை சமாளிப்பதில் நாளின் துவக்கத்தில் தடுமாறினாலும், மாலைக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விடுவீர்கள்.

ராசியான நிறம்: ஃபிரோசி, ராசியான எண்: 9

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு லட்டு படைக்கவும்
Published by:Kannan V
First published:

Tags: Rasi Palan

அடுத்த செய்தி