Home /News /spiritual /

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 1, 2022) தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு..!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 1, 2022) தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 1) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட அற்புதமான நாள். வியாபாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறருக்கு நிதி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
பரிகாரம்: விநாயகருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

ரிஷபம்:

ஆபீஸ் பாலிடிக்சில் சிக்காமல், வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஒருவர் மீது நீங்கள் வைத்த அதிக நம்பிக்கை முதலீடு செய்த பணத்தை இழக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: கோல்டன் கலர்
பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்.

மிதுனம்:

உங்கள் தாராள மனதிற்காக மக்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசையில், தவறான திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். பெற்றோருக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
பரிகாரம்: எந்த வகையான வெள்ளை நிறப் பொருளையும் தானமாக கொடுக்கலாம்.

கடகம்:

பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள், மேலும் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய பாசிடிவ் அணுகுமுறை குடும்பத்தினரைக் கவரும்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வயலெட் கலர்
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு மோதகம் படைக்கவும்.

சிம்மம்:

இன்றைய தினம் வெற்றியைக் கொடுக்கும் என்பதால், நம்பிக்கையுடன் நாளைத் தொடங்குங்கள். விவசாயிகள், ரியல் எஸ்டேட் செய்பவர்கள் போன்ற நிலம் சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமிருக்கும். வியாபாரித்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வர நினைத்தால் மூத்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது, இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்.

கன்னி:

உங்கள் வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கவும். புதிய வேலையை தொடங்குவதற்கான மன உறுதி கிடைக்கும். நிதி சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்துவோருக்கு மனம் அமைதியும், வெற்றியும் கிடைக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: சரஸ்வதி தேவியை வழிபடவும்.

துலாம்:

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்படுவதை தவிர்த்துவிட்டு, இன்று பொறுமையை கையாள வேண்டும். ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடுவோர் விற்பனையை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே தடைப்பட்ட திட்டங்களை இப்போது செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
பரிகாரம்: வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.

தனுசு:

பணம் சம்பாதிக்க முயற்சி எடுப்பவர்களுக்கு, மரியாதை கிடைக்கும். வேலை விஷயத்தில் இருந்து வந்த தடை நீங்கும். கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மகரம்:

குடும்ப சம்பந்தபட்ட உரையாடல்களில் ஈகோ காட்டுவதை தவிர்ப்பது நல்லது. சமயம் சார்ந்த அறப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்ககூடும். இன்று செய்யும் பயணம் மூலமாக பொருளாதார ரீதியாக பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் - காவி
பரிகாரம் - சிவபெருமானை வழிபடவும்

கும்பம்:

தடைபட்ட வேலைகள் முடிவடையும். பணம் சம்பாதிக்க, கடின உழைப்பை அதிகரிக்க வேண்டும். உங்கள் மனதில் நெகட்டிவ் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சச்சரவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி செய்யவும்.

மீனம்:

திடீர் செலவுகளால் நிதி நிலை பாதிக்கப்படலாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல்நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும். காதலர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி