Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு காதல் கைக்கூடும்... (ஜனவரி30,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு காதல் கைக்கூடும்... (ஜனவரி30,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீண்ட நாட்கள் செய்ய வேண்டும் என்னும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேலையில் இப்போது ஈடுபடலாம் ‌. அதுமட்டுமின்றி உங்கள் வணிக யோசனைகள் தற்பொழுது நல்ல பலன்களைக் கொடுக்கத் துவங்கும்.

மேஷம்

இன்று உங்களை சுற்றி இருக்கும் ஆற்றல் போலியானதாக இருக்கலாம். நீங்கள் செய்ய விரும்பும் விஷயமும் உங்களுடைய செயலும் வெவ்வேறாக இருக்கக்கூடும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க புதிய வழிகளை நீங்கள் கண்டறிய வேண்டும். அதேபோல பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் பணியில் இருப்பவர்கள் தங்களுடைய பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் விருப்பம் இருந்தால் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரம்

ரிஷபம்

இதுவரை மற்றவர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நபர்கள், இப்பொழுது மற்றவர்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் நேரம். உங்களுடைய உணர்வுகள் சில நேரம் அதிகப்படியாக வெளிப்படும். எனவே நீங்கள் எதிரில் தரப்பினருக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறார்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல புதிய வேலை அல்லது வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகள் மேம்படும். உங்களுக்கு இருக்கும் பயங்கள் மற்றும் கவலைகள் நீங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நியான் சைன்

மிதுனம்

நீங்கள் திட்டமிட்ட கொண்டிருந்தாலோ அல்லது ஒரு வாய்ப்பை நீங்கள் செயல்படுத்த விரும்பினாலோ, ஒரு உண்மையான முயற்சி இப்பொழுது தேவை. மேலும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைவரிடமும் நட்பாக பழகுவீர்கள். இதுநாள் வரை இருந்த எரிச்சல் மன நிலை இனி இருக்காது. உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உங்களுடைய துணை ஒரு யோசனையை சொல்வார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய சலூன்

கடகம்

எக்கச்சக்கமான யோசனைகளும் சிந்தனைகளும் தோன்றினாலும் எது சரி எது எந்த திசையில் இருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் உங்கள் துறையில் பணியாற்றும் ஒரு சீனியரிடம் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும். காதல் மற்றும் உறவுகளைப் பொறுத்தவரை நீங்கள் அதற்கு போதுமான நேரத்தை செலவழிப்பது அவசியம். உங்கள் துணையிடம் இருக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்தற்போதைய சூழல்களை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் அதிலிருந்து விவாதங்கள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழைய நாணயம்

சிம்மம்

மற்றவர்கள் மீது அழுத்தம்கொடுத்து செய்ய சொல்லும் வேலை இனி வேலைக்காகாது. ஒரு சிலருக்கு உங்களை நினைத்தாலே எரிச்சலாக தோன்றும். உங்களுடைய நோக்கம் தெளிவாக இருந்தாலும் மற்றவர்கள் உங்களை தவறாக நினைக்காத வகையில் உங்களுடைய பேச்சு வார்த்தையில் தெளிவாக இருக்க வேண்டும். அதிகாரத் தோரணையில் நீங்கள் இருந்தால் நீங்கள் மற்றவர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவீர்கள். கடந்த சில மாதங்களாக பிரச்சனையில் இருந்த வணிகம் இனி முன்னேற்றத்தை காணும். அது மட்டுமின்றி உலோகங்கள் சம்பந்தப்பட்ட வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி நாணயம்

கன்னி

சில கடந்த காலத்து நினைவுகள் உங்களுடைய வழிமுறைகளில் மாற்றத்தை உண்டாக்கும். ஆனால் நீங்கள் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு சில விஷயத்தில் குழப்பமாக இருந்தால் அதை தெளிவாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக உதவிகள் கேட்பது தவறில்லை. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய பண பிரச்சனைகள் தீரும். அது மட்டுமின்றி பயணங்கள் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தால் அதை இப்பொழுது செயல்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் –

துலாம்

உங்கள் திறமையை உங்களுடைய நெருங்கிய நண்பரோ அல்லது உங்கள் சகோதரரோ பயன்படுத்திக் கொள்ளக்கூடும். கடந்த சில வாரங்களாக இருந்த மந்தமான போக்கு இனி மாறும். நீங்கள் தேடும் புதிய வாய்ப்பு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமையும். இதையெலாம் உங்களுக்கு நெருக்கமானவர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவரிடம் இருந்து உங்களுக்கு சாதகமான தகவல்களை பெறுவீர்கள். உங்களுடைய ஆளுமைத்தன்மையில் நீங்கள் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும், அது உங்களைப் பற்றி நீங்களே நன்றாக அறிந்து கொள்வதற்கு உதவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிவப்பு நிற கார்

விருச்சிகம்

நீங்கள் அவசரத்தில் மேற்கொண்ட எல்லா முடிவுகளுமே தவறான விளைவுகளைதான் ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் விரைவிலேயே புரிந்து கொள்வீர்கள். அது மட்டுமின்றி ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட பாதையில் தான் செல்லவேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். எனவே மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வதையும் இனி காண்பீர்கள். வேலையில் சிறிய பிரச்சினைகள் எதாவது ஏற்படலாம். உங்களுக்குள் இருக்கும் ஏராளமான சிந்தனைகள் உங்களை கவனத்தை அவ்வப்போது சிதறவைக்கும். எனவே நீங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீங்கள் விரும்பும் இனிப்பு

தனுசு

உங்கள் உறவில் நீங்கள் எடுத்துக்கொண்ட சின்ன சின்ன அக்கரை, பிரச்சனைகள் ஏற்படும் போது உங்களைக் காக்கும். வேலை பரபரப்பாக இருந்தாலும், ஓரளவுக்கு சமாளித்து விடுவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவது கடினமாக உணரச் செய்யும். வழக்குகளில் ஏதேனும் சிக்கிக்கொண்டிருந்தால், உங்களுக்குச் சாதகமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். உங்களைச் சுற்றியிருக்கும் ரகசியமான விஷயங்களை உங்களுக்கு நெருக்கமான யாரோ வெளியிடக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வீட்டில் வளர்க்கப்படும் செடி

மகரம்

நீண்ட நாட்கள் செய்ய வேண்டும் என்னும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேலையில் இப்போது ஈடுபடலாம் ‌. அதுமட்டுமின்றி உங்கள் வணிக யோசனைகள் தற்பொழுது நல்ல பலன்களைக் கொடுக்கத் துவங்கும். உங்களுடைய நீண்ட நாள் கவலைகளை ஒரு புதிய பார்ட்னர்ஷிப் போக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஆறுதலாகவும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பேச்சு கை கூடி நன்மையில் மடியும்.. உங்கள் மனம் மற்றும் சிந்தனை தெளிவாக இருக்கும் நண்பர்களுடன் வெளியில் சென்று வருவது புத்துணர்ச்சியைத் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மெழுகுவர்த்தி ஸ்டாண்டு

கும்பம்

உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு ஒரு சில தடைகளும் விரும்பத்தகாத அனுபவங்களும் ஏற்பட்டிருக்கும். ஆனால் தற்பொழுது முன்னேறுவதற்கான காலம் வந்துவிட்டது. உங்களைத் தேடி ஸ்காலர்ஷிப் பண உதவியோ அல்லது வேறு வகையான உதவியோ வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்து வெகு தரம் தூரம் விலகி இருப்பது உங்களுக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தற்காலிகமானது தான். உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு மஞ்சள் கல்

மீனம்

நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரிடமிருந்து புதிய வேலைக்கான பரிந்துரையைப் பெறுவீர்கள் ‌. உங்களுக்கு வழங்கப்பட்ட பணியில் நன்றாக கவனம் செலுத்தி செய்தால் நீங்கள் விரும்பும் முடிவுகள் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் வேலையிலிருந்து அவ்வப்போது கவனச்சிதறல் ஏற்படுவதற்கான சாத்தியங்களும உள்ளன. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள புதிய நபர்கள் உங்களைப்பற்றி விமர்சிப்பது உங்களுக்கு கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய பயணம் சென்று வருவது உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். வெளியூருக்கு பயணம் சென்றால் அதன் விளைவு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நாப்கின் ஹோல்டர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி