இன்றைய தொடக்கம் ஏமாற்றமாகத் தோன்றினாலும், போகப்போக நம்பிக்கையாக உணர்வீர்கள். வீட்டுப் பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வைத் தேடி வருவார்கள். அதே போல, நீங்களும் வேலை மற்றும் வீடு இரண்டையும் சரியாக நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சூரிய உதயம்
ரிஷபம்
வாழ்வில் புதிய தேர்வுகளை மேற்கொள்ள உங்களுக்கு அற்புதமான வாய்புகள் உள்ளன, ஆனால் நீங்கள் அவற்றை காது கொடுத்து கேட்க வேண்டும். உங்கள் உள்ளுணர்வு மிகவும் வலுவாக இருக்கும். உங்களை விரும்புபவர்களிடம் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மூங்கில் செடி
மிதுனம்
உங்கள் மனதில் எதை பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நன்றாக ஒரு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தீவிரமாக எந்தவிதமான உரையாடலையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். ஏதாவது புதிதாக தொடங்குவதாக இருந்தால் அவசரப்பட்டு கையெழுத்திட வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பளிச்சென்ற கொடி
கடகம்
உங்களின் மதிப்பீடும் கண்ணோட்டமும் மற்றவர்கள் மத்தியில் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை நையாண்டி சொல்வது நக்கலாக பேசுவது இன்று வேறுவிதமாக பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – திட்டமிடப்படாத நடைபயிற்சி
சிம்மம்
கடந்த காலத்தின் சிறப்பான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது உங்களை இன்று எதிர்மறையாக பாதிக்கக்கூடும். உங்கள் குழந்தைக்கு அவர்களின் தினசரி வேலைகளில் ஈடுபடுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. வயிறு கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதால் ஆரோக்கியமான மற்றும் வீட்டிலேயே சமைத்த உணவை சாப்பிடுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – முத்து
கன்னி
இன்று உங்களுக்கு கடினமான மற்றும் மென்மையான நிகழ்வுகள் நடக்கும். இரண்டுக்கும் இடையே நீங்கள் உணர்ச்சி பூர்வமாக சிக்கிக் கொள்வீர்கள். எனவே பிராக்டிகலாக செயல்பட முயற்சி செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய மோதிரம்
துலாம்
பயங்கரமாகத் திட்டமிட்டு வேலை செய்பவர்களுக்கு இன்றைக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதுதான் உங்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும். உங்கள் அதீதமான கோபம் முக்கியமான விஷயங்களில் இருந்து உங்களை கவனத்தை திசை திருப்புவதாக அமையலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரேடியோ
விருச்சிகம்
உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஒரு போர் ஏற்படும் அளவுக்கு பிரச்சினைகள் உண்டாகும். நீங்கள் எவ்வளவு நடுநிலையாக நடந்து கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு பிரச்சனை சரியாகும். புதிய வணிகம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் அதை செயல்படுவதற்கான சரியான நேரம் எது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டெராகோட்டா பேஸின்
தனுசு
மற்றவர்கள் மீது பொறாமை படுவதை நிறுத்தி விட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளையும் நீங்கள் உணர வேண்டும். நீங்கள் இன்று எரிச்சலாக உணரக்கூடும். மாலை நேரத்தில் வெளியே சென்று வருவது உங்கள் மனநிலையில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிலிகான் மோல்டு
மகரம்
உங்கள் பழைய நண்பர்கள் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் தனிமையில் இருக்கவே விரும்புவீர்கள். உங்களுக்காக நேரம் ஒதுக்க மிகவும் சிரமப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மெழுகுவர்த்தி
கும்பம்
நீங்கள் மறந்து போன ஒரு பழக்கத்தில் மீண்டும் ஈடுபடுவது இன்று உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்களுடைய உள் மனதின் ஆற்றல் இன்று பிரகாசமாக இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இன்று முடிவு காண்பீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு மிட்டாய்
மீனம்
மீண்டும் மீண்டும் ஒரு சில ஏமாற்றங்கள் உங்களை பாதிக்கலாம். எனவே உங்கள் சக பணியாளர்களை அதிகம் விமர்சிக்க வேண்டாம் உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களிடமிருந்து விலகி இருக்கலாம். நீண்ட நாட்களாக தீர்க்காமல் வைத்திருக்கும் விஷயத்தை இன்று பேசி முடித்து விடுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வத்திப்பெட்டி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.