ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றையநாள் சிறப்பாக அமையும்... (ஜனவரி 28,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றையநாள் சிறப்பாக அமையும்... (ஜனவரி 28,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Horoscope : உங்களைச் சுற்றியிருக்கும் குழப்பத்தில் இருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் உதவியாக இருக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மேஷம் 

பணம் சம்மந்தப்பட்ட விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிலுவையில் இருக்கும் விஷயங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும். தாமதங்களை தவிர்க்க முன்ன்னேர்பாடுகளை செய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இறகு

ரிஷபம்

இன்று மிகவும் ரம்மியமான நாளாக இருக்கும். வேலை சுமையாக இருந்தாலும், எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் நெருக்கமான நண்பரிடமிருந்து கிடைக்கும் நல்ல செய்தி உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நியான் சைன்

மிதுனம்

புதிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீடு மாற வேண்டும் என்று நினைத்தால் இப்போது அதை செயல்படுத்தலாம். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சுவரொட்டி

கடகம்

புதிய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும்.உங்களுடைய தன்னம்பிக்கை மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும். சிலர் உங்கள் மீது வேண்டுமென்றே புகார் சொல்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மியூசிக் பிளேலிஸ்ட்

சிம்மம்

இந்த நாள் கொஞ்சம் படபடப்பாகத் தொடங்கும். ஆனால், பிரச்சனைகளை நீங்கள் விரைவில் தீர்த்து விடுவீர்கள். திருடு அல்லது ஏமாற்றம் பற்றியே இன்று நாள் முழுவதும் நினைத்து வருத்தப்படக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மாலை நேர டிரைவ்

கன்னி

நண்பர்களுடன் நேரம் செலவிடுவது உங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். உங்கள் கவனம் பல விஷயங்கள் மீது இருக்கலாம். உங்கள் கடந்த காலத்தில் இருந்த முக்கியமான நபர் உங்களைத் தொடர்பு கொள்ளுவார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குழந்தைப்பருவத்தில் விரும்பியது

துலாம்

எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது உங்களுக்கு ஏமாற்றமாகத் தோன்றலாம். ஷாப்பிங் செல்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். நிலுவையில் இருக்கும் வேலை பற்றி நினைவுப் படுத்திக் கொள்வது உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீலக்கல்

விருச்சிகம்

உங்களின் ரகசியம் அனைவருக்கும் தெரியக்கூடும். நீங்கள் இன்னும் முடிக்காத வேலைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாத்திரை மற்றும் மருந்துகளை கவனமாகப் பயன்படுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நட்சத்திரம்

தனுசு

இன்று வழக்கத்தை விட மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். கடந்த சில நாட்களாக இருக்கும் சோர்வு இன்றும் தொடரலாம். அலுவகலத்தில் ஒரு புதிய வேலை கடினமாக இருக்கும் மற்றும் பிரச்சனை ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உள்ளரங்கு விளையாட்டு

மகரம்

உங்களைச் சுற்றியிருக்கும் குழப்பத்தில் இருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் உதவியாக இருக்கும். நீங்கள் நம்பும் ஒரு நண்பனால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். வெளிநாட்டில் இருக்கும் உறவினருக்கு உங்கள் உதவி தேவைப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – விளக்கு

கும்பம்

பெற்றோர்களுடன் மனம் விட்டு உரையாடுவது பயனுள்ளதாக இருக்கும். இன்று எரிச்சலாக உணர்வீர்கள். மதியம் வரை சோர்வாக இருக்கும், பின்னர் உங்கள் நாள் வேகமாகச் செல்லும். உங்கள் அதீதமான மனநிலை மீது கவனம் செலுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு லூப்

மீனம்

இன்று முழுவதும் நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தை மீது அதிக கவனம் தேவை. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க முலாம் பூசிய பொருள்

First published:

Tags: Oracle Speaks