இன்று நீண்ட கால பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கான சில வாய்ப்புகள் இன்று வரக்கூடும். சட்ட விவகாரம் சாதகமாக இருக்கும். வேலையில் உங்களை சிலர் குறை கூறக்கூடும். ஆனால் அது தற்காலிகமானதுதான் என்பதால் அமைதியாக இருங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தட்டு
ரிஷபம்
நீங்கள் ஒரு துறையின் தலைமை அதிகாரியாக இருந்தால், உங்கள் வேலையை முடிக்க நீங்கள் போராட வேண்டியிருக்கும். தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூக்கத்தில் சில பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உடல்நலத்தில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குருவி
மிதுனம் :
இன்று நீங்கள் சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் காதல் அல்லது திருமண உறவில் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பேச்சில் நிதானம் தேவை. வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அட்டவணை
கடகம் :
இன்றைய நாளை நடைபயிற்சியுடன் தொடங்குங்கள். இன்று உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். மாலை நேரத்தில் வெளியில் சென்று வருவது நல்ல மன நிலையை பெற்றுத்தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணல்
சிம்மம் :
இன்று உங்கள் அலுவலகத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் அலுவலகத்தில் போட்டி மனப்பான்மையில் இருப்பவர்களை இன்று கண்டறிவீர்கள். நீண்ட நாட்களாக திட்டமிட்ட பயணத்திற்கு இன்று செல்வீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஓவியம்
கன்னி
உங்கள் நண்பர் ஒருவர் இன்று உங்களிடம் உதவி கேட்டு வருவார். நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒருவர் இன்று உங்களை தேடி வருவார். உணவுப் பசி வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்
துலாம் :
நீங்கள் அமைதியை விரும்புபவராக இருந்தால் இன்று அதற்கு எதிர்மறையாக நடக்கும் விஷயங்களை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள சிலர் உங்களைப் பற்றி வதந்திகளை உருவாக்கலாம். எனவே கவனமாக இருங்கள். சில முக்கியமான நிதி விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டம்ளர்
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். உங்கள் இதயத்திற்கு நெருக்கமான ஒரு விஷயம் இன்று நடந்தேறும். இதனால் புதிய முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செவ்வந்தி பூ
தனுசு :
இன்று உங்களின் மிக அவசரமான வேலையை தள்ளிப் போட வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவது முக்கியமானதாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இன்று நாள் முடிவில் நீங்கள் சோம்பேறியாக உணரக்கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல கல்
மகரம்
இன்று நீங்கள் ஒரு முக்கியமான உரையாடலை தொடங்க வேண்டும். இதனால் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு துணி
கும்பம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். முன்னதாக பாதியில் விடப்பட்ட பணியை இன்று முடிக்க முடியும். நிலுவையில் உள்ள உரையாடல்களை மீண்டும் தொடரலாம். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கயிறு
மீனம்:
இன்று உங்களது பால்ய நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவி செய்யலாம். உங்கள் பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. பிற்பகலில் வேலையில் இடையூறு ஏற்படலாம். எனவே வேலையில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி கம்பி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.