Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்கும்... (ஜனவரி 25, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்கும்... (ஜனவரி 25, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயத்தில் சில முன்னேற்றங்கள் காணப்படும். பணியை நிறைவேற்ற நீங்கள் உங்கள் முழு உழைப்பையும் கொடுக்க வேண்டியிருக்கும்..

மேஷம்:

உங்கள் சந்தோஷமான நேர்மறையான மனநிலையில் சிறிய இடையூறுகள் இன்று ஏற்படலாம். இது உங்களில் தற்காலிகமாக ஒரு மாயையை ஏற்படுத்தும். சிறிது கவலை உணர்வு உங்களில் இருக்கும். ஒரு இன்ப அதிர்ச்சியுடைய செய்தி இன்று உங்களை தேடி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அதிகாலை செய்தி

ரிஷபம்:

உங்கள் பணியை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், இன்றைய நாள் உங்களுக்கு ஒரு சுமூகமான நாளாக இருக்கும். மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். மிகவும் திறம்பட வேலைகளை முடிக்க, உடனடி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய யோசனையை நீங்கள் பெறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படத்தொகுப்பு

மிதுனம்:

இன்று உங்கள் குரல் ஓங்கியிருக்கும் நாள். பல உண்மைகள் இன்று வெளி வரலாம். பணியிடத்தில் சில மாற்றங்கள் தொடர்பான வாய்ப்புகளுக்காக திட்டமிடுவீர்கள். அதற்கான அணுகுமுறை உங்களை அந்த பாதையில் அழைத்துச் செல்ல உதவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானத்தில் ஒரு விண்மீன்

கடகம்:

உங்களின் சில பழக்கங்களை மாற்றிக்கொள்ளும்படி பிறர் உங்களிடம் கேட்பார்கள். இன்று சில இடையூறுகள் உங்களுக்கு உருவாகலாம். சில சமயங்களில் மற்றவரின் மனநிலையையும் புரிந்து கொண்டு நடப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செருப்புத் தொழிலாளி

சிம்மம் :

நிதி பரிவர்த்தனைகள் குறித்த கவலை இருக்கும். உங்கள் சீரற்ற செலவுகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம். விரைவில் சில வருமான ஆதாரங்கள் இருக்கும். உங்கள் குடல் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி தட்டு

கன்னி:

இன்று நீங்கள் தனிமையை உணர வாய்ப்பிருக்கிறது. மேலும் ஒரு புதிய உறவை பற்றி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒரு நிலையான ஆரோக்கிய வழக்கத்தில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அலாரம்

துலாம்:

நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், சில சட்டப்பூர்வ விஷயங்களில் இன்று ஈடுபட வேண்டியிருக்கும். உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை சரிபார்த்து மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் விரைவில் ஒரு செல்வாக்கு மிக்க நபரை சந்திக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தட்டு பழங்கள்

விருச்சிகம்:

இப்போதைக்கு நீங்கள் ஒரு சிறிய இடைவெளியை எடுக்கத் திட்டமிடலாம். யாரோ ஒருவர் உங்களுடன் நெருங்கி பழகுவது போல நடித்து சில ரகசியங்களை உங்களிடம் இருந்து பெற முயற்சிக்கலாம். விழிப்புடன் இருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த காரின் படம்

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு மெதுவாகத் தொடங்கலாம். ஆனால் மாலைக்குள் வேகம் அதிகரிக்கும். சமூகக் குழுவில் உள்ள நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கு இது ஒரு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் வங்கித் துறையில் வேலை பார்பவர்களாக இருந்தால், பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய நாவல்

மகரம்:

உங்களைச் சந்திக்கவும், மீண்டும் உறவை பலப்படுத்தவும் ஒரு பழைய நண்பர்கள் குழு காத்திருக்கலாம். நீங்கள் நாள் முழுவதும் சோம்பேறியாக உணரலாம். உங்களை நீங்களே உற்சாக படுத்தவேண்டி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கரடுமுரடான சாலை

கும்பம்:

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயத்தில் சில முன்னேற்றங்கள் காணப்படும். பணியை நிறைவேற்ற நீங்கள் உங்கள் முழு உழைப்பையும் போட வேண்டியிருக்கும். இடையில் நீங்கள் சற்று ஆர்வத்தை இழக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார் எண்

மீனம்:

காலை நேரத்தில், சோம்பேறித்தனம் ஏற்படக்கூடும் என்பதால், நீங்கள் வேலை செய்யும் மனநிலையில் இல்லாமல் இருக்கலாம். சுவாரஸ்யமாக, மதியத்திற்குள், நீங்கள் சுறுசுறுப்பாக மாறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க மோதிரம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி