இன்றைய நாள் உங்கள் சலிப்பாக ஆரம்பிக்கலாம், ஆனால் நேரம் செல்ல நல்ல நாளாக அமையும். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தடைப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று விரைவாக முடியும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பூங்கொத்து
ரிஷபம்
உங்கள் பணியை சரியான நேரத்தில் முடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பீர்கள். இன்று உங்களிடம் வாக்குவாதங்கள் செய்து சிலர் உங்களை திசை திருப்பலாம். நீங்கள் ஏதேனும் கடனுக்கு வங்கியில் விண்ணப்பித்திருந்தால் விரைவில் ஒப்புதல் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு அணில்கள்
மிதுனம் :
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிக்க வேண்டிய நாள் இது. விருந்தினர் வருகையால் உங்களது வீடு மகிழ்ச்சி அடையும். ஆடை ஆபரணங்களை வாங்க கூடிய நாள் இது. திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். எனினும் ஒரு புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகம்
கடகம் :
திட்டமிட்டிருந்த ஒரு சிறு பயணம் தள்ளிப் போகலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்னோன்யம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர்கள்
சிம்மம் :
இன்றைய நாள் வழக்கத்தை விட உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்களது பிரியமான நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். நீங்கள் திட்டமிட்டிருக்கும் வேலைகளை தொடங்க இன்று நல்ல நாள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செப்பு பாத்திரம்
கன்னி
உங்கள் குடும்பத்தினருடன் விவாதம் செய்யாமல் பொறுமையாக இருங்கள். தன்னம்பிக்கை இழக்காமல் விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் .
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டிஜிட்டல் விளம்பர பலகை
துலாம் :
இன்று மன நிம்மதி தரும் நாள். உங்கள் செல்வம், செல்வாக்கு மேன்மை பெறும். சில தவறான புரிதல்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இன்றைய நாள் உங்களுக்கு பிஸியாகவும், வழக்கமான வேலைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சணல்
விருச்சிகம்
இன்று குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாணவர்கள் வீட்டுப்பாடத்தை முன்பே செய்ய திட்டமிடுங்கள். தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம். இன்று மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கலைப்பொருட்கள்
தனுசு :
வழக்கத்தை விட மெதுவான நாள். ரியல் எஸ்டேட் விஷயங்களில் யாராவது உங்கள் உதவியை நாடலாம். இன்று ஓய்வு எடுத்தால் புத்துணர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணரலாம். மேலும் இன்று நீங்கள் ஒரு தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோபா
மகரம்
இன்று மன உளைச்சல் ஏற்படும். உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடமைகளை கவனமாக வைத்து கொள்ளுங்கள். செரிமானம் அல்லது அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல கல்
கும்பம்
உங்களை ஈர்க்கக்கூடிய ஒருவரை நீங்கள் இன்று காணலாம். வீட்டிலும் பணியிடத்திலும் பொருட்களை ஒழுங்கமைக்க நீங்கள் நேரத்தை செலவிடுவார்கள். உங்கள் அம்மாவின் உடல்நலத்தில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கேமரா
மீனம்:
இன்று மகிழ்ச்சியான நாள். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். முக்கியமான வேலைகளை இன்று முடிப்பீர்கள். உங்களைச் சுற்றி வதந்தி பரப்புபவர்கள் இருக்கலாம், எனவே கவனமாக இருங்கள். குடும்ப உறுப்பினர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி பாட்டில்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.