ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்... (ஜனவரி 23, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்... (ஜனவரி 23, 2022)

தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் பணியில் வெற்றி காண்பர்

தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் பணியில் வெற்றி காண்பர்

தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் பணியில் வெற்றி காண்பர்

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :

மேஷம்:

நிறுத்தி வைக்கப்பட்ட பழைய கடமைகளை முடிக்க வேண்டிய நேரம் இது. நீண்ட நாட்களாக உங்கள் மனதில் உணர்ச்சி ரீதியாக இருந்த காயங்கள் இன்று குணமாகலாம். உங்களை மன்னிப்பவர்களும் அதற்கு உதவலாம். மனரீதியாக புத்துணர்வு பெற உங்கள் துணையுடன் பேச சிறிது இடம் கொடுங்கள். உணவின் அடிப்படையில் இன்று சைவ உணவு இடைவேளை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் ஊழியர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். நிர்வாக சேவைகளில் உள்ளவர்கள் சிறப்பாகச் செயல்படும் நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூன்று புறாக்கள்

ரிஷபம்:

அவசரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது உதவியாக இருக்கும். தொலைதூர உறவினர் உங்கள் திறமையைப் பாராட்டி உங்களிடம் ஆலோசனை கேட்கலாம். சட்ட விவகாரங்களில் இருந்து விலகி இருங்கள். நீதிமன்றத்தை தாண்டி வேறு வழிகள் மூலம் தீர்வு கிடைக்கும் வாய்ப்பிருந்தால், நீங்கள் அந்த வழியை தேர்ந்தெடுக்கலாம். ஒரு குறுகிய நேரத்திற்கு ஹோட்டலில் தங்கும் சூழல் இருக்கும். சுவாரஸ்யமாக இருக்கும் ஒரு விழாவில் குடும்பத்துடன் இன்று கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் பொருள் திருடுபோக வாய்ப்பிருப்பதால் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய பேனா

மிதுனம்:

தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் பணியில் வெற்றி காண்பர். இன்று உங்கள் நிதிநிலைமை சீராக இருக்கும். எந்தவொரு புதிய ஆவணங்களிலும் குறிப்பாக பத்திரங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருங்கள். வேலை சம்பந்தமாக நீங்கள் வெளியூருக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பலவீனம் அல்லது சோம்பல் அறிகுறிகள் இன்று இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்ரஸ் பழங்கள்

கடகம்:

இன்று பலருக்கு ஷாப்பிங் செய்யும் வாய்ப்பு அமோகமாக இருக்கும். ஒரு புதிய பரிந்துரை உங்களை டிஜிட்டல் திரை முன்பு மணிக்கணக்கில் உட்கார வைக்கலாம். உங்களுக்கு யார் மீதாவது காதல் உணர்வு மெதுவாக மலரலாம். அவர் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த நபராக இருக்கலாம். இன்று உங்களது அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் கவனமாக கையாள வேண்டும். உங்கள் முக்கியமான திட்டங்களை மறுவேலை செய்து அதற்கான நேரத்தை சிறப்பாக நிர்வகிக்க நீங்கள் விரும்பலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி தட்டு

சிம்மம்:

நீங்கள் இன்று உற்சாகமாக உணர்வீர்கள். சட்ட ரீதியான விவகாரங்களில் சில போராட்டத்தை சந்தித்தாலும் இறுதியில் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். சில திட்டங்கள் காலக்கெடு அல்லது ஆதாரங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக அவை தடைபட வாய்ப்பு உள்ளது. ஒரு நல்ல உதவியாளரைத் தேடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள். இன்று உங்கள் பணிகளை விரைவில் முடித்து விட்டதாக உணரலாம். உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சிக்கவும். ஏனெனில் மற்றவர் உங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புறா கூடு

கன்னி:

சூழ்நிலையைச் சமாளிப்பது உங்களை எதிர்காலத்தில் வலிமையாக்கும். எனவே இப்போது குறுக்குவழிகளைத் தேடாதீர்கள். தற்காலிக தீர்வுகளைக் கண்டறிவதற்குப் பதிலாக நிரந்தர முடிவுகளுக்கான அணுகுமுறையை எடுக்க முயற்சிக்கவும். உங்கள் பழைய நண்பர் வணிக ரீதியான முன்மொழிவை உங்களுக்கு அனுப்பலாம். அது காட்டாயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிதாக திறக்கப்பட்ட கடை

துலாம்:

வாழ்க்கை நிலைமை இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறது என தோன்றும். ஒரு சில உறவினர்கள் அல்லது நண்பர்கள் விரைவில் உங்களை சந்திக்க திட்டமிடலாம். எதிர்பாராத வேலை உங்களுக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். ஆனால் உந்துதலாக இருக்கும் அளவுக்கு உற்சாகமாக இருக்கும். கடந்த கால பிரச்சனைகளில் இருந்து வெளியேறி உங்கள் மனதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை சில தடைகளை ஏற்படுத்தலாம். பழைய சக ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரஞ்சு சாளரம்

விருச்சிகம்:

உங்கள் உணர்ச்சிகளை அதிக நேரம் அடக்கி வைக்காதீர்கள். உங்கள் படைப்பாற்றல் உங்களில் புதிய பிரகாசத்தை கொண்டுவரும். உங்கள் யோசனைகள் இப்போது வடிவம் பெற ஆரம்பிக்கலாம். இன்று யாருடனாவது சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தால் அந்த சூழ்நிலைகளை தவிர்த்து கொள்ளுங்கள். ஷாப்பிங் செய்வதன் மூலம் புதிய பொருட்களை இன்று நீங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ள வயதானவர்களுடன் நல்ல உரையாடல் தேவை என்பதால் அவர்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புல் மூட்டை

தனுசு:

உங்கள் மனதில் சிறு குழப்பம் தோன்றும். உங்கள் கவனத்தை வேறு விஷயங்களில் திருப்பப் முயற்சி செய்வீர்கள். இந்த குழப்பம் சில காலம் நீடிக்கலாம். ஆனால் குழப்பம் நிறைந்த விஷயங்களை அதிகமாக செயலாக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அந்த விஷயம் தடைபட வாய்ப்புள்ளது. ஒரு நண்பர் உங்களை புரிந்துகொண்டு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கலாம். நீங்கள் ஏதேனும் ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருந்தால், அதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வித்தியாசமான வழக்கத்தை உருவாக்கவும், அது தற்போதையதை விட அதிக உற்பத்தித் திறன் மற்றும் லாபம் தருவதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை குவளை

மகரம்:

பணியிடத்தில் இருந்து வரும் நல்ல செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தையும் உங்கள் மேலதிகாரிகள் கவனிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பங்குதாரர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஆனால் உங்களில் சிறு தயக்கம் இருக்கும். மற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் மௌனத்தை விட எளிமையானது வேறு எதுவுமில்லை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்த பானம்

கும்பம்:

கடந்த காலங்கள் கடந்ததாக இருக்கட்டும், எண்ணங்கள் மற்றும் செயல்கள் இரண்டிலும் நீங்கள் புதிதாக யோசிக்க வேண்டிய நேரம் இது. கடந்த சில நாட்கள் உங்களுக்கு மந்தமாக சென்றியிருக்கலாம். இப்போது வேகம் அதிகரித்து வருவதை நீங்கள் காண்பீர்கள். புதிய விதிகளின் காரணமாக எந்தவொரு வணிகப் பரிவர்த்தனைக்கும் இடையூறு ஏற்படலாம். சில புதிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முயற்சித்தால் தாமதத்தை சந்திக்க நேரிடும். வங்கிக் கடன்கள் உங்களுக்கு இப்போது கொஞ்சம் நிம்மதியைத் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு பேருந்து

மீனம்:

சில உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைத் தேடுகிறீர்களானால், அதற்கு சில காலம் எடுக்கும். நடந்த அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான் நடந்தது என நினைத்துக்கொள்ளுங்கள். நெருங்கிய நபரின் உதவியை இன்று நீங்கள் பெறுவீர்கள். ஒரு குழந்தை உங்களுக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கலாம். ஒரு மத்தியஸ்த வழக்கம் உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள்

First published:

Tags: Oracle Speaks