மேஷம்
இன்று எந்த ஒரு முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். புதிய யோசனைகள் உங்கள் மனதில் ஒரு இடத்தை ஆக்கிரமிக்கக்கூடும். சில நிமிட மன அழுத்தம் உங்களுக்கு நீண்ட கால நிவாரணம் தரும் வகையில் இருக்கும். இன்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியைக் கவனத்துடன் செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சீனத் தேநீர் குவளை
ரிஷபம்
தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவை இருக்கலாம். திட்டமிடப்பட்ட பயணங்கள் தடைபடலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல லோகோ
மிதுனம்
ஒரு குறிப்பிட்ட வழக்கத்தைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது. தொலைதூரத்திலிருந்து வருகை தரவிருந்த உங்கள் உறவினர்கள் தங்களது பயணத்தை ஒத்திவைக்கலாம். பணியிடத்தில் இன்று நீங்கள் சில போட்டிகளை எதிர்கொள்ளலாம்.கவனத்துடன் செயல்படுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய பேனா
கடகம்
புதிய நபர்களிடம் இருந்து சில எதிர்ப்பு வரலாம். தவறான புரிதல்கள் இன்று இருக்கும். இப்போது எதையும் முடிக்க வேண்டாம் என நீங்கள் முடிவு செய்யலாம். இந்த நாளில் வீட்டில் இருந்து உங்களுக்கு சில நிம்மதியான செய்திகள் கிடைக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நாட்டுப்புறக் கதை
சிம்மம்
உங்கள் உணர்ச்சிகளை அதிக நேரம் அடக்கி வைக்காதீர்கள். உங்கள் உணர்வை நீங்கள் எப்போது வெளிப்படுத்துவீர்கள் என உங்கள் நெருங்கிய நண்பர் காத்துக்கிடக்கிறார். உங்களுக்கு தெரிந்த ஒருவரிடமிருந்து நல்ல செய்தி வரும். ஒரு செல்வாக்குமிக்க நபர் மூலம் உங்கள் வேலையை நீங்கள் செய்து முடிக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செல்லப்பிராணி
கன்னி
உங்கள் நிதி நிலைமை சீராக வளர்வதை நீங்கள் காண்பீர்கள். புத்தம் புதிய பணிக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். பிரச்சனையில் இருக்கும் நண்பர் உங்களின் உதவியை தேடி வரலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாதி தண்ணீர் நிறைந்த குடம்.
துலாம்
புதிய ஒத்துழைப்புக்கான விருப்பம் உங்களை வந்து சேரும். அதுகுறித்து உடனடியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, மாற்றியமைக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதை நீங்கள் இன்று உணருவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆல்பம்
விருச்சிகம்
நீங்கள் இசையில் நாட்டம் கொண்டவராக இருந்தால், இன்றைய நாள் இன்பம் காண ஒரு நல்ல நாளாக இருக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சில புதிய சவால்களை சந்திக்க நேரிடும். இன்று வீட்டில் ஓய்வெடுக்க நினைத்தால் அதில் சற்று சிரமம் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செவ்வந்தி படிகம்
தனுசு
ஒரு சரியான நேரத்தில் கிடைக்கும் உதவி உங்களுக்கு புதிய வாழ்க்கையைத் தரும். அதிகமான அர்ப்பணிப்பு மற்றும் காலக்கெடு உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். நாள் முடிவில் சில தீவிரமான பணிகள் உங்களை நீண்ட நேரம் விழித்திருக்கச் செய்யலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஓவியம்
மகரம்
அழகான அலங்கார பொருட்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். உங்கள் படைப்புத் திறன்கள் இன்று வெளிப்படும். உங்களது நண்பர் உங்கள் மனநிலையை மேம்படுத்துபவர் என்பதை நிரூபிப்பார். மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இன்று சுறுசுறுப்பான நாள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபிக் கியூப்
கும்பம்
உங்கள் கடந்தகால கடமைகள் இன்று உங்களைத் துன்புறுத்தலாம். இன்று உங்கள் சொந்த இடத்தில் தனியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள். செரிமானத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி நகை
மீனம்
விரைவில் உங்களுக்கான சிறப்பு அங்கீகாரம் கிடைக்கும். புதிய திட்டம் அல்லது ஏதேனும் முக்கிய வேலைகளுக்கு நீங்கள் ஒப்புதலை வழங்கலாம். உங்களுக்காக ஒரு நல்ல இடைவெளியைத் திட்டமிடுவதற்கான நேரம் இது. உங்களுக்கு தோல் எரிச்சல் இருந்தால் அதனை கவனியுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பனை மரம்
மேலும் படிக்க... Sankashti Chaturthi 2022: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்குமாம்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.