Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் புதிய சவால்களை எதிர்கொள்வர்... (ஜனவரி 20, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் புதிய சவால்களை எதிர்கொள்வர்... (ஜனவரி 20, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

பழைய காரியங்களைச் முடிப்பதற்கு இன்று ஒரு வழி பிறக்கும். உங்கள் படைப்பாற்றல் அங்கீகரிக்கப்படும்.

மேஷம்:

உங்கள் உள்ளுணர்வு தொடர்ந்து உங்களை வழிநடத்தும். ஆனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள் இன்று. நீண்ட காலமாக மறந்துவிட்ட சில பணிகளை இன்று முடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். மனதில் தெளிவு பெறுவது கணிசமான செயலுக்கு வழிவகுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பச்சை துணி

ரிஷபம்:

பழைய காரியங்களைச் முடிப்பதற்கு இன்று ஒரு வழி பிறக்கும். உங்கள் படைப்பாற்றல் அங்கீகரிக்கப்படும். இன்று உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும் என்பதால் உங்கள் கருத்தை வெளிப்படையாக பேசுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மின்னும் அரிகல்

மிதுனம்:

உங்கள் சரியான எண்ணங்கள் அல்லது யோசனைகளை வெளிப்படுத்துவதில் சில சிக்கல்கள் நேரிடலாம். அவற்றை வெளிப்படுத்த மீண்டும் முயற்சி செய்ய வேண்டியது அவசியம். பணியிடத்தில் ஏற்படும் இந்த தொய்வு சில நாட்களில் மறைந்துவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செய்தித்தாள் தலைப்புச் செய்திகள்

கடகம்:

உங்கள் பெற்றோர் அல்லது குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் விஷயங்களை தெளிவாக கற்றுகொள்வீரகள். உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்காக வெளியாட்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டாம். இன்றைய தினம் சில கொண்டாட்டங்களுடன் நல்ல உணவினை சாப்பிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி குடம்

சிம்மம்:

இன்று சில புதிய வாய்ப்புகள் முறியடிக்கப்படலாம். உங்களின் கவனக்குறைவால் உங்கள் மனைவி மனமுடைந்து போகலாம். இன்று உங்களுக்கு ஒரு பரபரப்பான வேலை நாளாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காபி

கன்னி:

இன்று ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய உங்கள் மனதை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு நன்கு திட்டமிடுங்கள். கட்டாயம் வெற்றி காண்பீர்கள். சுறுசுறுப்பான ஆற்றலை நீங்கள் இன்று அனுபவிப்பீர்கள். உங்கள் டயட்டில் சிறிது மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கு விரைவாகப் பழகுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உப்பு

துலாம்:

உங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடன் நல்ல இடைவெளியைப் பேணுங்கள். உங்கள் பழைய நண்பர்கள் விரைவில் ஒன்று கூடுவதற்கு திட்டமிடலாம். தெரிந்த நபருடன் ஒத்துழைத்து செல்வது உங்கள் பணியை எளிதாக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளையாட்டு கடிகாரம்

விருச்சிகம்:

உங்களின் உண்மையான திறமை மீண்டும் வெளிப்படும். எந்த ஒரு விஷயத்திற்கும் நீங்கள் சரியாக பதிலளிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் பேசி அவர்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ளுங்கள். இன்று நீங்கள் நீண்ட பயணத்திற்காக வெளியே செல்லலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வேலியிடப்பட்ட தோட்டம்

தனுசு:

வேலையில் தீவிர விவாதம் புதிய விதிமுறைகளுக்கு வழிவகுக்கும். இன்று உங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்படலாம். உங்களது பழைய பழக்கத்திற்கு இப்போது மாற்றம் தேவை. துரித உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய சான்றிதழ்

மகரம்:

பணியிடத்தில் ஏற்படும் புதிய சவால்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். இன்றைய தினம் உங்களுக்கு பிஸியான தினமாக இருக்கும். நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள புதிய ஒப்பந்தத்தை தெளிவாக படிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு யார் மீதாவது விருப்பம் இருந்தால், அதனை வெளிப்படுத்துவதற்கு முன் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாலைவனம்

கும்பம்:

ஒரு புதிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அறிவிக்கப்படாத ஒரு பணியை நோக்கி உங்களது நாள் இன்று பிசியாக செல்லும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி மேஜை

மீனம்:

ஒரு விவாதத்தில் உங்கள் கருத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகும். எந்தவொரு பிரச்சினையும் சில நாட்களுக்குப் பிறகே தீர்க்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி