Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உற்சாகமாக செயல்படுவார்கள்.. (ஜனவரி 17, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உற்சாகமாக செயல்படுவார்கள்.. (ஜனவரி 17, 2022)

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

மேஷம்

இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். எதற்கும் தயாராக இருங்கள். அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்திக்காமல், மனதை இலகுவாக வைத்திருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு உலோக பூத்தொட்டி

ரிஷபம் 

இனியும் உங்கள் உண்மையான உணர்வுகள் மறைந்திருக்காது. நீங்கள் அதை வெளிப்படுத்த அல்லது பகிர வேண்டும். நீங்கள் இதுவரை பெற்ற நல்ல பெயர் உங்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாமந்திப்பூ

மிதுனம்

கூட்டாக வேலை செய்ய உங்களுக்கு வாய்ப்பு வந்தால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். காலை நேரம் பரபரப்பாக இருந்தாலும், மாலையில் நீங்கள் ஓய்வாக உணர்வீர்கள். புதிய எண்ணங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பரிசுப்பெட்டி

கடகம் 

உங்கள் வேலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இது புதிய வாய்ப்புகளையும், எதிர்காலத்தில் புதிய வணிகம் செய்வதற்கான திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பச்சைக்கிளி

சிம்மம் 

உங்களை இம்ப்ரஸ் செய்யும் ஒரு ஆசிரியர் அல்லது ஆளுமை நிறைந்த நபரை நீங்கள் சந்திப்பீர்கள். வீட்டுப் பிரச்சனைகளே உங்கள் நாள் முழுதையும் ஆட்கொள்ளும். நேரத்தை சரியாக கையாள முடியாததும் பிரச்சனையாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வேலியிட்ட தோட்டம்

கன்னி

சில நாட்கள் மிகவும் சவாலாக இருக்கலாம். இன்றும் அதே போல இருக்கலாம். உங்கள் ஆற்றல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், மதியத்துக்கு மேல் ஓய்வாக உணர்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு ஃபெங்ஷுய் சின்னம்

துலாம்

சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அதிகப்படியான டென்ஷன் ஏற்படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும். எது முக்கியமோ அதன் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். உங்கள் கணவர்/மனைவியின் கருத்து சாதகமாக மாறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பல வண்ண தரைவிரிப்பு

விருச்சிகம்

உங்களால் ஈர்க்கப்பட்ட நபர் உங்களை விரைவில் சந்திப்பார். உங்கள் வேலைச்சுமை அதிகரிக்கலாம். ஆனால், நீங்கள் நெகிழும் அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அலாரம் கடிகாரம்

தனுசு

சோம்பேறித்தனம் உங்கள் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உங்களின் கம்ஃபார்ட் சோனிலிருந்து வெளியே வாருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பூக்கள் பிரின்ட் செய்யப்பட்ட பொருள்

மகரம்

தாமதங்கள் மற்றும் வேலைகளைத் தள்ளிப்போட வேண்டிய சூழல் ஏற்படும். முக்கியமான வேலைகளை உடனடியாக முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். புதிய திட்டங்கள் லாபகரமாக இருக்காது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழக்கூடை

கும்பம்

மெதுவாக செல்வது போலத் தோன்றும் இந்த நாள், மதியத்துக்கு மேல் வேகம் பிடிக்கும். உறவினருக்கு உங்கள் உதவி அவசரமாகத் தேவைப்படலாம். ஒரு சிறப்பு நிகழ்வுக்கு நீங்கள் ஏதேனும் திட்டமிட்டிருந்தால், அதை செயல்படுத்த சரியான நேரம் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடிக் கிண்ணம்

மீனம்

பழைய நினைவுகள் அலை மோதி, உங்களை உணர்ச்சி பூர்வமாக பாதிக்கலாம். நண்பர்களுடன் பயணம் செல்வது உற்சாகத்தை அளிக்கும். வேலையில் தெளிவாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழைய புகைப்படம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி