Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இந்த மாத இறுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்... (ஜனவரி 16, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இந்த மாத இறுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்... (ஜனவரி 16, 2022)

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய ராசி பலன்

  மேஷம் 

  அதிக சோர்வு, மனக்குழப்பம் என்று இருக்கும் போது, நீங்கள் மிகவும் விரும்பிச் செய்யும் செயலில் ஈடுபடலாம். ஒரே மாதிரியான வாழ்க்கை முறை உங்களுக்கு சோர்வை அளிக்கலாம். ஆனால், இந்த நிலைமை விரைவில் மாறிவிடும். பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் இன்னும் ஒரு வாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் இருக்கலாம். உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – திறந்திருக்கும் கதவு

  ரிஷபம் 

  உங்களைத் தேடி வரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். உங்களின் தகவல் தொடர்பு முறை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சாதகமாகி வருகிறது. உங்களைப் பற்றி நீங்களே ஒரு சில ஆழமான எல்லைகளை வகுத்துள்ளீர்கள், அது உங்களை சில நேரத்தில் காயப்படுத்தக்கூடும். உங்கள் குழந்தைகள் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவார்கள். வீட்டு விஷயங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்துவது மன நலத்தை மேம்படுத்தும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஜா இதழ்

  மிதுனம் 

  உங்கள் வீட்டை புதிதாக அலங்கரிப்பதில் உங்கள் நேரமும், கவனமும் முழுதாக செலவிடப்படும். கூடுதல் வருமானம் வருவதற்கு ஒரு புதிய வழி கிடைக்கும். ஆனால், அதற்கு கணிசமான நேரம் மற்றும் உழைப்பு தேவைப்படும். பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ள உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். கடந்த கால நெகட்டிவ் எனர்ஜி எல்லாம் பின்னுக்குத் தள்ளி, பாசிட்டிவ் எனர்ஜியாக மாறுவீர்கள். வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நேரம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புத்தர் சிலை

  கடகம்

  எதுவும் செய்யாமல், காத்திருக்க வேண்டிய நேரமிது. ஆனால், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி திட்டம் போட்டு வைக்கவும். பழைய முறைகளை பின்பற்ற வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை வேறு யாரேனும் பெற முயற்சி செய்வார்கள். ஆனால், அதே நேரத்தில் அலுவலகத்தில் மாறும் சூழலுக்கு ஏற்றவாறு நீங்களும் மாறிக்கொள்ள வேண்டும். வீடு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு போர்ட்ரைட்

  சிம்மம்

  புதிய வேலையை நோக்கி புதிய பயணம் தொடங்கும். தீவிரமான முயற்சி உங்களுக்கு சாதகமாகும். உங்கள் நெட்வொர்க்கை பலப்படுத்த உங்கள் இயல்புத் தன்மையைப் பயன்படுத்துங்கள். உங்கள் கவர்ச்சிகரமான ஆளுமையால், மற்றவர்கள் உங்களை நோக்கி ஈர்க்கபடுவர்கள். வீட்டில் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கலாம். திட்டமிடப்படாத சந்திப்பு உங்களுக்கு தேவையான உற்சாகத்தைக் கொடுக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இனிப்புப் பெட்டி

  கன்னி

  உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்களிடம் நட்பு வளரும். தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும். காலையில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் முன்பகல் நேரத்தில் அல்லது மாலையில் செய்யலாம். உறவுகள் மற்றும் வேலையை எப்போதும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பெயர் டாக்

  துலாம்

  நீங்கள் மற்றவர்களை விட வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், நீங்கள் எதிர்பார்த்து போல சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படத் தாமதமாகும். இது தற்காலிகமானது தான். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களும் முன்னேற்றங்களும் விரைவில் ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கான பதவி உயர்வு விரைவில் கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வாக்கிங் ஸ்டிக்

  விருச்சிகம்

  நல்ல மனம் கொண்டவர்களுக்கு நன்மைகளே நடக்கும். இது வரை உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல விஷயங்களையே செய்து வந்துள்ளீர்கள். அதுவே உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். புதிய வீடு அல்லது நிலம் வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தால், அதை நிறைவேற்ற சரியான நேரம் இது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரப்பெட்டி

  தனுசு

  அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கிறது. உங்கள் நணபர்களுடன் ஷாப்பிங் சென்று இந்த நாளை உற்சாகமாக மாற்றாமால். தோட்டத்தை சீர்படுத்துவது உங்களுக்கு நல்ல ஹாபியாக இருக்கும். அதுவே உங்களுக்கு உபரி வருமானத்தையும் கொடுக்கும். வேலையில் கொஞ்சம் தடங்கல் ஏற்படலாம். வேறு நகரத்துக்கு நீங்கள் பயணம் செய்வது பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இளஞ்சிவப்பு நிற பூக்கள்

  மகரம்

  குடும்பத்துடன் ஏதேனும் விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றினால் அதை செயல்படுத்தலாம். இந்த மாத இறுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரை பொது வெளியில் வைத்து விமர்சிக்க வேண்டாம். உங்கள் ஆற்றலை மேம்படுத்தி, எல்லா வேலைகளையும் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புத்தம் புதிய நாணயம்

  கும்பம்

  உங்கள் உதவி தேவைப்படும் ஒரு நண்பருக்கு ஆதரவாக இருங்கள். பழைய பழக்கவழக்கங்கள் மீண்டும் தோன்றலாம். ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அது பாதியிலேயே நிற்கலாம். திருமணம் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் நீண்ட நாட்கள் மரியாதையாக பார்க்கும் நபரை தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பார்ட்னர்ஷிப் லாபமாக மாறும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மீன் தொட்டி

  மீனம்

  நீங்கள் செய்த வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போவது உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்வு மற்றும் அலுவலகம் சில நேரங்களில் அதிக சோர்வை ஏற்படுத்தலாம். பழைய நண்பர்களுடன் இணைவது, உங்கள் தனிமைக்கு மருந்தாக இருக்கும். பயணத்திட்டங்களை தள்ளிப்போட நேரிடும். ஆன்லைன் ஃபிராடுகளில் ஏமாறாமல் கவனமாக இருக்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆரஞ்சு நிற தட்டுகள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Oracle Speaks

  அடுத்த செய்தி