Home /News /spiritual /

Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஜூலை 17, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர்

Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஜூலை 17, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர்

இன்றைய ராசி பலன் ஜூலை 17, 2022

இன்றைய ராசி பலன் ஜூலை 17, 2022

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  மேஷம்:

  இன்று ஒரு புதிய வேலை வாய்ப்புக்கான ஆலோசனை உங்களது நெருங்கிய குடும்ப நண்பரிடமிருந்து வரலாம். பல கவனச்சிதறல்கள் இருந்தாலும் உங்களுக்கென்று இன்று ஒதுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்துவது நல்லது. ஏனென்றால் சில புதிய நபர்கள் உங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கி அது உங்களை சிறிது தொந்தரவு செய்ய நேரலாம். ஒரு சிறிய பயணம் உங்கள் மனதுக்கு அமைதியை கொடுக்கலாம்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

  ரிஷபம்:

  மேம்பட்ட படிப்புகளை எடுக்க திட்டமிட்டால் இன்று சில சோதனைகளை எதிர்கொள்ளலாம். ஒரு மானியம் அல்லது உதவி உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் உறவுகளை நினைத்து கவலை கொள்ளலாம், ஆனால் அது ஒரு தற்காலிக உணர்வாக இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நியான் சைன்

  மிதுனம்:

  இன்று நீங்கள் திட்டமிட்ட வெற்றியை பெற ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். கடினமாக உழைத்தாலும் இன்று ஒரு பார்ட்னர்ஷிப் உங்கள் கவலைகளை பெரிய அளவில் நீக்கும். உங்கள் மனம் இன்று தெளிந்த நீரோடை போல இருக்கும். திருமா திட்டங்கள் தொடர்பான விஷயங்கள் இன்று சாதகமாக முடியலாம்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வரவேற்பறை

  கடகம்:

  காலக்கெடு நிர்ணயித்து நீங்கள் இன்று செய்யும் வேலை உங்களை எளிதில் சோர்வடையச் செய்யலாம். நீங்கள் ஒரு சட்ட வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், உங்கள் எவிடென்ஸ் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும். உங்கள் உறவுக்காக கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த சிறிய நடவடிக்கைகள், துன்பத்தில் இருந்து உங்களை மீட்க உதவும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பழமையான கலைபடைப்புகள்

  சிம்மம்:

  விரைவாக செய்யப்படும் அனைத்து செலக்ஷன்களும் மோசமான விளைவை கொடுக்காது என்பதை நீங்கள் இன்று புரிந்து கொள்வீர்கள். இன்று உங்கள் நாள் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் உள்ளுணர்வு சொல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நாள் எப்படி போகிறதோ அப்படியே அதன் போக்கிலேயே சென்று விடுங்கள். இன்று நீங்கள் முன்னோக்கி நேர்கோட்டில் நடக்க வேண்டிய நாள் ஆகும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சில்வர் காயின்

  கன்னி:

  உங்கள் திறமையை உங்கள் உடன்பிறந்தவர் அல்லது உங்கள் நெருங்கிய நண்பர் சிறப்பாக பயன்படுத்தலாம். உங்கள் ஆர்வத்துடன் ஒத்து போவதற்கான புதிய வாய்ப்பை நீங்கள் தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த வாய்ப்பு உங்களுக்கு நெருக்கமானவரிடம் இருப்பதாய் இன்று காணலாம். அப்படி கண்டால் தயக்கமின்றி வாய்ப்பு கேளுங்கள். மேலும் இன்று நீங்கள் சுய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரகத கல்

  துலாம்:

  கடந்த காலத்தின் சில வலுவான நினைவுகள் உங்களது இன்றைய நாளை ஆக்கிரமிக்கலாம். முன்பு நீங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் கவனமாக இருக்க முயற்சி செய்யவும். இன்று உங்கள் வாழ்வில் வரும் நிதி முன்னேற்றங்கள் உங்களை மீண்டும் வலுவான பாதைக்கு அழைத்து செல்லும். சில விஷயங்களை உரியவர்களிடமே கேட்டு தெளிவுபடுத்தி கொள்வது வீண் சச்சரவுகளை தவிர்க்க உதவும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு நீல நிற கார்

  விருச்சிகம்:

  உங்களைச் சுற்றியுள்ள சிலரை நீங்கள் தொந்தரவு செய்யலாம். உங்கள் நோக்கம் சரியாக இருந்தாலும், தொடர்பு கொள்ளும் முறையில் மாற்றம் தேவை என்பதை உணருங்கள். கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உங்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு

  தனுசு:

  இன்று உங்கள் மனம் நிலையாக இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கலாம். தொழில்துறையை சேர்ந்த சீனியர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம், அவருடைய ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் காதல் உறவில் இருந்தால் உங்கள் பார்ட்னருடன் நேரம் செலவிடுவது மற்றும் மனம்விட்டு பேசுவது முக்கியம்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இன்டோர் தாவரம்

  மகரம்:

  நீங்கள் ஒரு நபரை பின்தொடரத் திட்டமிட்டால் அல்லது முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தால், அதற்கான கடின முயற்சி இன்று தேவைப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் உங்கள் வேலையை மிகவும் திறமையான முறை மூலம் நிறைவேற்றுவதற்கான விருப்பங்களை இன்று பார்ப்பீர்கள். இன்று நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள் மற்றும் உங்கள் மனைவி சொல்லும் ஆலோசனைகளை காது கொடுத்து கேளுங்கள்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்

  கும்பம்:

  உங்கள் மனதில் இருப்பதை மற்றவருக்குத் தெரியப்படுத்துவது இன்று முக்கியம். புதிய வேலையைத் தேடினால், சுவாரஸ்யமான வாய்ப்புகள் இப்போது உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கலாம். மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் தயக்கங்கள் மற்றும் அச்சங்களுக்கு இன்று நீங்கள் முடிவு காண கூடும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் கல்

  மீனம்:

  இன்று உங்கள் ஆற்றல் குறைந்தது போல நீங்கள் உணரலாம். நீங்கள் சாதிக்க விரும்புவது இன்று உங்கள் செயல்களுடன் ஒத்து போகாமல் இருக்கலாம். எனவே ஒருவரின் கவனத்தை ஈர்க்க விரும்பினால் நீங்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். புதிய திறன்களை கற்று கொள்வதில் ஆர்வம் ஏற்படும். அதை விட்டுவிடாமல் அப்படியே தொடர்ந்தால் அது இறுதியில் சிறந்த வணிக யோசனையாக உங்களிடம் உருவெடுக்கும்.

  உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கப் ஹோல்டர்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Oracle Speaks, Rasi Palan

  அடுத்த செய்தி