சில விஷயங்களை கைவிடுவது என்பது சவாலான காரியம் தான். வணிகத்தில் புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள். போட்டிகளை புறந்தள்ளிவிட்டு தற்போதைய வாய்ப்புகளில் கவனம் செலுத்தலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி
ரிஷபம்:
உங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பணி திறன் மீண்டும் குறைந்தால் அதை சீனியர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். பணி சார்ந்த சவால்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேனீ
மிதுனம்:
நீங்கள் கடினமாக உழைத்தாலும் உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம், விவாதங்களில் கவனம் தேவை. சக ஊழியர் ஒருவர் உங்கள் நற்பெயரை பொதுவில் கெடுக்க முயற்சிக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெண்கல வாலட்
கடகம்:
உங்களை சந்திக்கும் நபர்கள் உங்களுக்கான நேர்மறை சிந்தனைகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள். யதார்த்தம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மீதான நம்பிக்கையை மறு ஆய்வு செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டம்ளர்
சிம்மம்:
உங்களுக்கான தனி திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். குழு மனப்பான்மை மற்றும் திறமை ஆகியவை முக்கியம். பண வரவு குறித்த விஷயங்களை ரகசியமாக கையாள வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நடைபயிற்சி ஸ்டிக்
கன்னி:
சில சமயம் இரண்டு நபர்கள் சந்தித்துக் கொள்ளும்போது சர்ச்சை வெடிக்கும். அதை புறந்தள்ளுங்கள். எதிர்பாராத விதமாக சிறப்பான நபர் ஒருவரை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள். குறுகிய பயணம் நடைபெற இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு கிறிஸ்டல்
துலாம்:
சில விஷயங்களை உங்களால் சரியான சமயத்தில் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதை ஒத்தி வைக்கவும். உங்களுடன் நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க குடும்பத்தினர் விரும்புகின்றனர்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேக்கு மர பர்னிச்சர்
விருச்சிகம்:
பணியிடத்தில் உங்களுக்கு கிடைக்காமல் நிலுவையில் உள்ள புரோமோஷன் வாய்ப்பு இப்போது கிடைக்க இருக்கிறது. ஒரு கெட் டு கெதர் நிகழ்வு நடைபெற உள்ளது. உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதாக அது அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூங்கில் செடி
தனுசு:
எந்தவொரு விஷயத்திற்கும் கோபம் தீர்வாகாது. ஆகவே, பிரச்சினையை கிடப்பில் போடவும். சூதாட்டம் போன்ற ரிஸ்க் வாய்ந்த நிகழ்வுகளில் தலையிட வேண்டாம். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்
மகரம்:
குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல் நலம் குறித்து கவலை கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத சிக்கலை சமாளிக்க சிலரது உதவி அல்லது கடன் என்பது பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளைம்பர்
கும்பம் :
நீங்கள் எதிர்பார்க்கும் அதே மரியாதை உங்களுக்கு கிடைக்காது. குறுகிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வீட்டுக்கு வெளியே நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவீர்கள். இதன் மூலம் ஸ்ட்ரெஸ் நீங்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலக்கல்
மீனம்:
நீங்கள் நிலுவையில் வைத்துள்ள சில வேலைகள் இன்றைக்கு வரிசை கட்டி நிற்கும். ஆகவே மிகுந்த ஸ்ட்ரெஸ் ஏற்படும். வீட்டில் நிறைய உதவி கிடைக்கும். இந்த சமயத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.