Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினரின் நிதி நிலைமை உயரும்... (பிப்ரவரி 24,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினரின் நிதி நிலைமை உயரும்... (பிப்ரவரி 24,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மேஷம்:

நீங்கள் முடிவு செய்து வைத்திருக்கும் திட்டத்தை, செயல்படுத்துவதற்கான நேரம் இது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒன்று கூடி நேரத்தை செலவளிப்பீர்கள். உங்களுக்கு மிகவும் தேவையான இடைவேளையையும் பொழுதுபோக்கையும் இந்த சூழல் தரும். நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த புதிய பணி ஒரு வடிவம் பெறத் தொடங்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கற்பூரம்

ரிஷபம்:

உங்கள் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஆதரவு கொடுப்பீர்கள். உங்களைப் போற்றும் ஒருவர் உங்களுடன் சிறிது நேரம் செலவிட விரும்பலாம். வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த, உங்களது கடந்த காலத்தில் நடத்த சில கடினமான விஷயங்களை மன்னிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கற்பனை கதை

மிதுனம்:

சில விஷயங்கள் எப்படி திடீரென்று உருவாகத் தொடங்கின என்பது உங்களுக்கு மர்மமாக இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு ஏதோ ஒரு ஓட்டத்துடன் தொடரும். உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மனைவியுடன் சண்டையிட்டிருந்தால், அதை ஒரு நல்ல உரையாடல் மூலம் தீர்த்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை வழக்கத்தை விட சற்று அதிக தேவையுடன் செயல்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆலமரம்

கடகம்:

இப்போது எடுக்கும் சில முடிவுகள் சில நிதி ஆதாயங்களுக்கும் மன அமைதிக்கும் வழிவகுக்கும். நீங்கள் ஏதேனும் சட்ட ரீதியான விஷயங்களில் சிக்கியிருந்தால், அதில் நடக்கும் சிறிய மாற்றங்கள் சாதகமான முடிவுகளுக்கு வழிவகுக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மன குழப்பமும், நேரமில்லாமல் எதையும் அவசரமாக செய்ய வேண்டிய நாளாகவும் இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காகித பை

மேலும் படிக்க... இந்த ராசிக்காரர்கள் 2022-ல் சொந்த வீடு வாங்குவார்களாம்...

சிம்மம்:

இன்று நீங்கள் உங்களது உள்ளுணர்வை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். உங்கள் கோபம் சில சங்கடங்களுக்கு வழிவகுக்கும். விரைவில் அதைச் சரிசெய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நபரைப் பற்றி நீங்கள் பிரமிப்புடன் சிந்திப்பீர்கள். இன்று ஏதேனும் பயணத்தை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு படிகம்

கன்னி:

ஏற்கனவே வகுத்த திட்டத்தில் சில மாற்றங்கள் வரலாம். உங்கள் வேலையை வேறு ஆட்களுக்கு யாரோ ஒருவர் பரிந்துரைக்கலாம். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் ஏதாவது இருந்தால், அதை வெளிப்படுத்துவது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதினா

துலாம்:

வீட்டில் இருக்கும் போது வேலை சார்ந்த பிரச்சனைகளை தள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். இன்று வீட்டுப் பிரச்சினைகள் தலைதூக்கக்கூடும். நீங்கள் ஏதேனும் உறுதிமொழிகளை பிறருக்கு கொடுத்திருந்தால், அவை தாமதமாகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குருவி

விருச்சிகம்:

நீங்கள் வைத்திருக்கும் பொருட்கள் காணாமல் போய்விடுமோ என்ற பயத்தை விட்டுவிட வேண்டும். மாற்றப்பட்ட அணுகுமுறையில் நீங்கள் இன்று பணியாற்ற வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு நபருடன் உறவில் இருந்தால், எதிர்காலத்தை பாதிக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி அவர் உங்களுடன் விவாதிக்க விரும்புவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்ஃப்கார்ட்

தனுசு:

தேவையற்ற கோபம் எந்த நேரத்திலும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக நாள் தொடங்கும் போது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கோபப்படுவதை தவிர்த்து விடுங்கள். நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகளை நீங்கள் இன்று சந்திக்கலாம். வீட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் கிண்ணம்

மகரம்:

நீங்கள் இன்னும் வெளிப்படுத்த விரும்பாத ஒன்றைப் பற்றி உங்கள் சிறந்த நண்பர் ஆராய முயற்சிக்கலாம். ஆனால் அதை பற்றி நீங்கள் விவாதிப்பது நல்லது. குடும்பத்தில் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களுடன் நம்பிக்கை சார்ந்த சிக்கல்களை உருவாக்கலாம். முடிந்தால் சமூகக் கூட்டங்களைத் தவிர்த்து விடுங்கள். நீங்கள் உங்களுக்கான நேரத்தை செலவிட விரும்பலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெருகூட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்

கும்பம்:

உங்கள் வழக்கத்தை உங்களால் கடைப்பிடிக்க முடியாவிட்டால், உங்கள் நலனுக்காக அதை மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும். இன்று ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் இழக்கலாம். உங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நல்ல உரையாடல் உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பூக்கள் நிறைந்த மரம்

மீனம்:

அதிநவீனமாக இருப்பதற்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள். பணியிடத்தில் பிறருடன் ஒரு பிணைப்பு அவசியமாக இருக்க வேண்டும். திடீர் மதிய உணவு விருந்து கொஞ்சம் நிம்மதியைத் தரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி ஸ்பூன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி