Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினர் கொடுத்த வாக்குறுதியை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள் (பிப்ரவரி 18, 2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினர் கொடுத்த வாக்குறுதியை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள் (பிப்ரவரி 18, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | உங்கள் உள் உள்ளுணர்வு அடுத்த கட்டத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். யாரோ ஒரு வாடிக்கையாளர் உங்களை ஒரு நண்பரைப் போல் நம்பத் தொடங்கலாம்.

மேஷம்: இன்றைய நாளின் தொடக்கம் சிறிது போராட்டமாக இருக்கும். ஆனால் படிப்படியாக சூழ்நிலை மாறும். நடந்துகொண்டிருக்கும் வேலைக்காக உங்கள் முழு உழைப்பையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளை பலகை

ரிஷபம்:  முடிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட பணிகளை எடுத்து சரியான நேரத்தில் முடிப்பீர்கள். இது உங்களுக்கே ஆச்சர்யத்தை கொடுக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில வாதங்கள் சில நேரம் உங்களை திசை திருப்பலாம். எனவே இப்போதைக்கு நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு புறாக்கள்

மிதுனம்:  உங்கள் நாளின் நேரத்தை சரியாக செலவிடுவது அவசியம் என்பதை உணர வேண்டும். ஏனெனில் இன்று பெரும்பாலான பொறுப்புகள் மற்றும் காலக்கெடு வைக்கப்பட்ட பணிகளை முடிப்பதற்கு வசதியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த பாடல்

கடகம்:  உங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறை பணியிடத்தில் உதவக்கூடும். சில சக ஊழியர்கள் உங்கள் அன்றாட வழக்கத்தில் இடையூறுகளை உருவாக்கலாம். ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு குறுகிய பயணம் இப்போது நிறைவேறலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு

Also Read : Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18)

சிம்மம்: உங்களின் இன்றைய நாள் வழக்கத்தை விட உறுதியான மற்றும் அதிக அதிகாரம் பெற்றதாக உணர்வீர்கள். உங்கள் திட்டங்களை தைரியமாக முன்வைக்க இது ஒரு நல்ல நாளாக இருக்கலாம். ஒவ்வொரு விவரத்தையும் முன்கூட்டியே விவாதித்து தெரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்கல் அடையாளம்

கன்னி: உங்கள் உள் உள்ளுணர்வு அடுத்த கட்டத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். யாரோ ஒரு வாடிக்கையாளர் உங்களை ஒரு நண்பரைப் போல் நம்பத் தொடங்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டிஜிட்டல் அடையாளம்

துலாம்: உங்களின் சில தவறான புரிதல்கள் இன்று நீங்கும். உங்கள் வழக்கமான வேலையுடன் இன்றைய தினம் உங்களுக்கு பிஸியாக இருக்கும். சூழ்நிலை சிக்கல்கள் காரணமாக, நீங்கள் திட்டமிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பலகை

Also Read : நவகிரகங்களும் அதற்குரிய நவதானிய தானங்களும்...

விருச்சிகம்: உங்கள் வீட்டுப்பாடத்தை நன்றாகச் செய்ய நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். இன்று எதிலும் தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம். மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மழை பொழிவு

தனுசு: வழக்கத்தை விட இது ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். ரியல் எஸ்டேட் விவகாரங்களில் யாராவது உங்கள் உதவியை நாடலாம். இன்று ஒரு நீண்ட நடை உங்கள் மனதை தெளிவுபடுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நேர் கோடு

மகரம்: உங்கள் நீண்ட தூர நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். வேலை மற்றும் வேடிக்கையான நேரங்களின் கலவையாக இன்றைய நாள் இருக்கும். உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். கோலிக் பிரச்சினைகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

Also Read : தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா? நல்ல சகுனமா?

கும்பம்: உங்களுக்கு உண்மையான ஒருவரை நீங்கள் இன்று கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. வீட்டிலும் பணியிடத்திலும் பொருட்களை ஒழுங்கமைக்க நீங்கள் நேரத்தைக் செலவிடுவீர்கள். இன்று நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம். தியானம் செய்வது உதவலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் அச்சு

மீனம்: உங்களைச் சுற்றி வதந்தி பரப்புபவர்கள் இருப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மன அழுத்தத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் வந்து காப்பாற்றுவார்கள். தினசரி உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர பெட்டி
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி