Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும்... (பிப்ரவரி 14, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும்... (பிப்ரவரி 14, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | உங்களின் கேள்விக்கு புத்தகத்திலோ அல்லது எங்கோ எழுதப்பட்டிருக்கும் வார்த்தையிலோ பதில் கிடைக்கும்.

மேஷம்

கடந்த காலத்தில் நடந்தவற்றையெல்லாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஆனாலும், நீங்கள் அதை மறந்து புதிய தொடக்கத்தை மேற்கொள்வது உதவியாக இருக்கும். புதிய எண்ணங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றையெல்லாம் செயல்படுத்தி, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வேலை செய்யலாம். அப்படி செய்யும் பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் விரைவில் கிடைக்கும். நீங்கள் இழந்தது நிறைய இருந்தாலும் அதெல்லாம் உங்கள் வாழ்க்கையின் பாடம் எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து செல்லுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – செங்கல் அடுக்கு

ரிஷபம் 

இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆனால் அது அவ்வளவு வலுவாக உங்கள் இதயத்தை பாதிக்காது. நீங்கள் அடிக்கடி ஒருவரைப் பற்றி நினைத்தாலும், அந்த எண்ணம் அவ்வளவு வகுவானதாக இருக்காது. நீங்கள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து அவரை மறக்க வேண்டுமென நினைப்பீர்கள். உங்கள் உள் மனது என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தொலைந்த பொருள் ஒன்று கிடைப்பது

மிதுனம்

உங்களின் முக பாவனைகள் உங்கள் உணர்வுகளை வெளிக்காட்டிவிடும். நீங்கள் மனதில் எதையெல்லாம் நினைத்து உருகிகிறீர்களோ மற்ற நபர் அதைத் தெரிந்து கொள்வது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. எனவே நீங்கள் அவ்வாறு வெளிப்படுத்தாமல் சமமான நிலையில் இருப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்று முழுவதுமாக ஈடுபடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு அப்ஸ்டிராக்ட் ஆர்ட்

கடகம்

நீங்கள் அதிகமாக விரும்பும் மற்றும் மதிக்கும் ஒரு நபரிடமிருந்து உங்களுக்கு சமீபத்தில் கிடைத்த செய்தியைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், யோசிக்காமல் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும் ,ஆனால் மாலை நேரம் அதற்கு ஈடு செய்யும் வகையில் அமைந்துவிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாட்டின் துணி

சிம்மம்

நீங்க ஸ்பெஷல் நினைக்கும் நபரிடம் இருந்து எந்த செய்தியும் உங்களுக்கு வரவில்லை என்பது உங்களை எரிச்சல் ஆனால் நீங்கள் அவருக்கான இடைவெளியை கொடுப்பது நன்மையைத்தான் தரும் நீங்கள் யாரிடமாவது ப்ரபோஸ் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தால் அது நல்ல விதமாக முடியும் நாளின் பிற்பகுதியில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் செலவிடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்ட்ரேட்டஜி கேம்

கன்னி

பழைய நினைவுகள் மற்றும் நீங்கள் அறிந்த முகங்கள் உங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். நீங்கள் அவர்களுடன் மீண்டும் உறவை தொடரலாம் அல்லது மொத்தமாக அவர்களைத் தவிர்த்து விடலாம். இரண்டில் எதைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களால் முடிவு எடுக்க முடியாது. நண்பர்களுடன் எதிர்பாராத ஒரு கெட்டுகெதர் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சோப் டிஷ்

துலாம்

நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த நீங்கள் மிகவும் பிரயத்தனப்படுகிறீர்கள். அதே நேரத்தில் நீங்கள் வெற்றிகரமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது, நீங்கள் எதில் சிக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதைப் பற்றி தெரிந்த ஒருவர் உங்களை அணுகலாம். எனவே உங்களுடைய பிரச்சினைகளை மனதில் இருப்பவற்றை நீங்கள் அவரிடம் வெளிப்படையாக சொல்வது உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சுவரொட்டி

விருச்சிகம்

சமீப காலமாக உங்களுக்குக் கிடைப்பதை விட அதிகமாக நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை தவிர்த்து சின்ன சின்ன விஷயங்கள் மீது கவனம் செலுத்துவது போல பிரச்சனைகள் தோன்றும். அதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வரைபடம்

தனுசு

இன்று ஓரளவுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் அதே நேரத்தில் கவலையும், மன அழுத்தத்தையும் உணர்வீர்கள். நீங்கள் எதேனும் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது அந்த விஷயம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமையாமல் போகலாம். சூழ்நிலைகள் மாறிக்கொண்டிருப்பதால் நீங்கள் பொறுமையுடன் இருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குருவி

மகரம்

நக்கல் நையாண்டி செய்வதில் தேர்ந்தவரான நீங்கள் இன்று மிக சிறப்பாக செயல்படுவீர்கள், ஆனால் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்பதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் புரட்சிகரமானதாக தோன்றலாம். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே நீங்களும் செய்யுங்கள். சட்ட ரீதியான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடிப் பெட்டி

கும்பம்

உங்களை யாரேனும் இன்று பலவீனமாக உணரச் செய்தால், நீங்கள் உங்களின் உண்மையான, வலுவான குணங்களை வெளிக்காட்டத் தயாராகுங்கள். உங்களின் நெருக்கமான மற்றும் ஸ்பெஷலான நபருடன் நீங்கள் நேரம் செலவிட இன்று சிறந்த நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாம்பிள் பெட்டி

மீனம்

உங்களின் கேள்விக்கு புத்தகத்திலோ அல்லது எங்கோ எழுதப்பட்டிருக்கும் வார்த்தையிலோ பதில் கிடைக்கும். அதிகப்படியாக எந்த விதத்திலும் உங்கள் மனதை ஈடுபடுத்த வேண்டாம். வீட்டுப் பிரச்சனைகள் மீது உங்கள் கவனம் அதிகமாகத் தேவைப்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கேலரி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி