Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணவரவு நன்றாக இருக்கும்... ( பிப்ரவரி 13,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணவரவு நன்றாக இருக்கும்... ( பிப்ரவரி 13,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | முக்கியமான ஒருவருடன் சந்திப்பை மேற்கொள்கிறீர்கள் என்றால், அவர்களின் சவுகரியத்தை மதிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் செயல்படுத்த முடியாத யோசனைகளைப் பற்றி பேசுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

மேஷம்:

நீங்கள் ஏதேனும் ஒரு பணி சார்ந்த விவாதங்களில் ஈடுபடும் பட்சத்திலும், உங்களது கருத்துக்கள் மிக பழமையானதாக இருந்தாலும் அவை பிறரின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் மாற்றமில்லை. உங்களது எளிமையான அணுகுமுறை பணிகளை விரைவில் முடிக்க உதவும். சிக்கலான விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். நீங்கள் சில முக்கிய நபர்களைச் சந்தித்து அவர்களோடு பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தைரியத்தை உருவாக்கி கொள்ளுங்கள். தொலைதூரத்தில் உள்ள ஒருவர் உங்களுக்கு பரிசு வழங்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உட்புறத்தில் வைக்கக்கூடிய செடி

ரிஷபம்:

மற்றவர்களின் நோக்கத்தில் பயணிப்பது என்பது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இன்று சிரத்தை எடுத்து நடத்தி முடிக்க வேண்டும். நீங்கள் எளிதில் பிறரை நம்பிவிடுவீர்கள். ஒரு விஷயத்திற்கு மாற்று யோசனையுடன் செயல்பட வேண்டிய திட்டத்தை வகுக்கவும். திடீர் பயணங்களை விரைவில் மேற்கொள்ளலாம். நீங்கள் புறக்கணிக்க முயற்சிக்கும் ஒருவர் உங்களிடம் அறிவிக்காமலேயே வருகை தரலாம். உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பூக்களின் கொத்து

மிதுனம்:

உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மற்றவர்களிடையே உருவாக்குவீர்கள். உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இப்போது உங்களை அணுகலாம். உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை பல வழிகளில் உங்களுக்கு உதவிபுரியும். உங்கள் கடந்தகால சாதனைகள் உங்களின் உள்ளார்ந்த திறனை உங்களுக்கு மீண்டும் வெளிப்படுத்தும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அவை நல்ல வளர்ச்சியை நோக்கி நகர்வதை காணலாம். உங்கள் தற்போதைய உறவில் புத்துணர்ச்சியை கொண்டுவர முயற்சிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குவளை

கடகம்:

உங்கள் ஐம்புலன்களை அடக்கி ஆள வேண்டிய நாள் இது. மேலும் உங்கள் மனஅமைதி சிதையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால நாட்களை சிறப்பாக திட்டமிட புதிய யோசனைகள் வரும். நீங்கள் இப்போது உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட குடும்ப அழுத்தம் இப்போது தீர்க்கப்படலாம். பிறரிடம் கடன் கேட்பதை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இளஞ்சிவப்பு மலர்

சிம்மம்:

பொது இடங்களில் தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்க்கவும். உங்களை அறியாமல் சில விஷயங்களில் ஈடுபடுவதை நீங்கள் உணர்வீர்கள். கலவையான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு நாளாக இன்று இருக்கும். உங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள். நீங்கள் உணர்ச்சி ரீதியாகவும் இன்று பாதிக்கப்படலாம். அவசர முடிவுகளை எடுக்காமல் இருங்கள். நீங்கள் குழப்பமான சூழலில் சிக்கினால், ஆழ்ந்த சுவாச பயிற்சியில் ஈடுபடுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்த வாசனை திரவியம்

கன்னி:

நீங்கள் மனதில் ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட துவங்குவீர்கள். ஆனால் அதை செயல்படுத்த கடினமாக இருக்கும். எளிய தினசரி பணிகள் இன்று உங்களை முழுவதுமாக ஆக்கிரமிக்கலாம். கடந்த காலத்தில் நீங்கள் செய்தவற்றின் பலனைப் பெறுவீர்கள். பல விஷயங்களைப் பற்றி யோசிப்பது குழப்பம் மற்றும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளை பலகை

துலாம்:

யாராவது உங்களுடன் வேண்டுமென்றே சண்டையிட வருவார்கள். உங்கள் உணர்வுகளில், நீங்கள் முயற்சி செய்து அதை எதிர்க்க வேண்டும். உங்களது மனோபாவம் ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால் நாளின் இரண்டாவது பாதியில் அதை அமைதிப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள். மற்றவர்கள் உங்களை வேலை மற்றும் மன அழுத்தத்தில் பங்கெடுக்க முயற்சி செய்வார்கள். உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் இருக்கலாம். எல்லாவற்றையும் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கடந்தகால உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் அச்சு

விருச்சிகம்:

முக்கியமான ஒருவருடன் சந்திப்பை மேற்கொள்கிறீர்கள் என்றால், அவர்களின் சவுகரியத்தை மதிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் செயல்படுத்த முடியாத யோசனைகளைப் பற்றி பேசுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில நிதி நெருக்கடிகளை சந்திக்கலாம். ஆனால் நீங்கள் அதை விரைவில் சமாளிப்பீர்கள். மூத்தவர்கள் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை வெளிப்படுத்துவார்கள். மேலும் அவர்களைத் தாழ்த்தாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஒரு பெண் உதவிக்காக உங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம். பெற்றோர்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுவார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்தினை எதிர்பார்ப்பார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்குகளின் சரம்

தனுசு:

ஏதாவது ஒரு விஷயம் நடக்கும் என்று நீங்கள் நினைப்பதோடு, அது உண்மையாகிவிடுமோ என்று பயப்படுவீர்கள். இதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, அதற்கு அதிக கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். உங்கள் ஆற்றல்கள் ஒரு ஒழுக்கமான நாளைக் குறிக்கின்றன. உங்கள் தினசரி வழக்கத்தை நீங்கள் மிக நெருக்கமாக பின்பற்றுவீர்கள். உங்கள் நண்பர்கள் இருவர் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம் ஆனால் நீங்கள் சந்திக்க விரும்ப மாடீர்கள். உங்கள் கூட்டாளரை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஹேங்கர்

மகரம்:

பிரபஞ்சம் தற்போது உங்கள் தேவை மற்றும் ஆசைகளின் அடிப்படையில் மறுசீரமைக்க முயற்சிக்கிறது. ஒரு சிறிய பிரச்சினையில் ஒரு சிறிய சண்டை அல்லது கருத்து வேறுபாடு வரலாம். உங்கள் மனைவி உங்களுடன் ஒத்துப்போகாமல் இருப்பார்கள். ஆன்மீக பயணம் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சன்டான்

கும்பம்:

வழக்கமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தலாம். பழைய முதலாளி சில வேலைகளுக்காக உங்களைத் தொடர்பு கொள்வார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய நிதி முன்னேற்றம் சில காலத்திற்கு நிலையானதாக இருக்கலாம். பொழுதுபோக்கிற்கு நேரத்தை செலவிட வேண்டிய நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண் பானை

மீனம்:

நீங்கள் எவ்வளவு தாழ்மையுடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அன்பை பெறுவீர்கள். நீங்கள் இதைப் பின்பற்றினால், எந்த எதிர்ப்பும் இல்லாமல் விஷயங்கள் எளிதாக நடப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த வாரம் உங்கள் தாயார் மகிழ்ச்சியின் முதன்மையான ஆதாரமாக இருப்பார்கள். இப்போதைக்கு உங்கள் வேலைக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற பொறுப்புகளில் கலந்து கொள்ளலாம். பணவரவு நன்றாக இருக்கும், மன அழுத்தம் குறையும். முடிந்தால் நீல நிறத்தைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அஞ்சல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி