Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் அமைதி காப்பது நன்மை தரும்... (பிப்ரவரி06,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் அமைதி காப்பது நன்மை தரும்... (பிப்ரவரி06,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்.

மேஷம் : சோர்வாக உணர்வது, அக்கறையின்மை அல்லது ஊக்கமின்மை ஆகிய அனைத்துமே கடந்த காலத்துடன் தொடர்புடையது. உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறும். கடந்த காலத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்கள் நீங்கள் வளர்வதற்கு உதவியாக இருந்துள்ளது. உடனடியாக முக்கியத்துவம் அளிக்கும் விஷயத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமானவர் அல்லது உங்கள் ஆத்ம தோழன் தனிப்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ளலாம். நீங்கள் எதையேனும் கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : பெண்டுலம்

ரிஷபம் :  நீங்கள் பல முறை தனியாக போராட வேண்டியிருக்கும். தற்போது நீங்கள் அமைதியாக, சுற்றி இருப்பவற்றின் மீது கவனமாக வேண்டும். அது தான் ஒரே தீர்வு. உங்கள் குழந்தையுடன் நேரம் செலவிடுவது உங்களுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். இடம் மாற்றம் உங்களுக்கு ஏற்படக்கூடும். நீங்கள் அதற்கு மன ரீதியாக தயாராகி இருக்க மாட்டீர்கள். ஒரு பழைய தோழர் உங்களுக்குப் பிடித்த பொருளை பரிசாக வழங்குவார். வெளியிடங்களில் நேரம் செலவழிப்பது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : பஃபே உணவு

மிதுனம் :  குடும்பச் சுற்றுலா அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் உங்களை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கலாம். எனவே, நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் உங்கள் யோசனையைப் பகிரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தால், அதைச் செய்வதற்கான சரியான நேரம் இதுதான். பயணம் செய்வதை விட வீட்டில் இருப்பதே உங்களுக்கு விருப்பமாக இருக்கும். உங்கள் தகவல் தொடர்பில் கிரியேட்டிவ்வாக இருந்தால் உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : ஒரு ஆடம்பரமான தோட்டம்

கடகம் :  கவனச்சிதறல் ஒரு பிரச்சினையாக இருந்தால், அதற்கான தீர்வு கிடைத்துவிடும். நீங்க செய்ய வேண்டிய வேலை எக்கச்சக்கமாக காணப்படும். அதுவே உங்களுக்கு சோர்வை அளிக்கும். ஆனாலும் புதிய வாய்ப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்வது நல்ல பலன்களை அளிக்கும். சில நேரங்களில் உங்களை மற்றவர்கள் தூண்டிவிட்டாலும் நீங்கள் அமைதி காப்பது நன்மையைத் தரும். உங்களுடைய வேலையிடத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை வைத்து விளையாடுவதை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை மட்டும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமிடையே எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : மஞ்சள் ரோஜாக்கள்

சிம்மம் :  நீங்கள் வெளிநாட்டுக்கு செல்ல திட்டம் இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு வெகு விரைவில் கிடைத்துவிடும். உங்கள் திருமண வாழ்வில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் மனரீதியாக மிகவும் சிறப்பாக உணர்வீர்கள் மற்றும் உங்கள் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளை நன்றாக புரிந்து கொள்வீர்கள். இதனாலேயே நீங்கள் மற்றவர்களை சார்ந்திருப்பதை குறைத்து கொள்வீர்கள். இந்த தெளிவு உங்கள் திறனை அதிகரித்து உங்கள் சுயதிருப்தியை அடைவதற்கு உதவியாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : தங்க கடிகாரம்

கன்னி :  எதார்த்தமாக இருப்பது உங்களுடைய ஆளுமைத் தன்மையின் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவராக மாறியுள்ளீர்கள். மட்டுமின்றி உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது, குறிப்பாக பெரிய முடிவுகளை நீங்கள் சுயமாகத்தான் எடுக்க வேண்டும். ஒரு சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் நீங்கள் நீண்ட காலமாக குழப்பத்தில் இருப்பீர்கள். அதற்கான விடைகளும் புரிந்துணர்வும் உங்களுக்கு விரைவில் ஏற்படும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயத்தில் முடிவெடுப்பார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : கறுப்புக் கல்

துலாம் :  வாழ்வில் ஒரு சில விஷயங்கள் மீது நீங்கள் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். எனவே அதன்மீது நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முக்கியமான விவாதத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்படும் சம்பவம் நடக்கலாம். உங்களுக்கு மிகவும் சுவாரசியமான ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கு முன் அது உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை பற்றிய புரிதல் வேண்டும். அது மட்டுமின்றி உங்களுக்கு தேவையான ஓய்வையும் எடுத்துக்கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : வெள்ளி நாணயம்

விருச்சிகம் : உங்கள் சகோதரர் அல்லது சகோதரியுடன் ஏற்படும் ஒரு சண்டையில் உங்களுக்கு தோல்வி ஏற்படலாம். எல்லா இடத்திலுமே ஒரு போட்டியாளராக கடுமையாக உங்களை முன்னிலை படுத்த வேண்டாம். இதற்கு முன்பு இருந்ததை விட உங்களை நீங்கள் எளிதாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டதாக அல்லது உங்களை மோசமாக நடத்துகிறார்கள் நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். சட்டரீதியான விஷயங்களில் உங்கள் சீனியர் உங்களுக்கு உதவும் வாய்ப்பு இருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : ஒரு ஏரி

தனுசு : நீண்ட காலமாக வரிசையில் இருந்த உங்களுக்கு, வாய்ப்பு கிடைத்துவிட்டது. முக்கியமான விஷயங்கள் மீது நீங்கள் தற்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது நிதி நிலைமை மேம்பட்டு நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் ஏற்பட்டிருக்கலாம், அது தற்போது குறைந்து விடும். உங்கள் கணவன் அல்லது மனைவியின் குடும்பத்தாருக்கு உங்களின் உதவி தற்போது தேவைப்படும் சூழல் காணப்படுகிறது. நீங்கள் பயணம் அல்லது ஓய்வு எடுப்பதற்கு இது உகந்த நேரம் இல்லை. உங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – லாம்ப் போஸ்ட்

மகரம் : உங்களுக்கு கிடைக்கும்போது ஒரு புதிய உறவு உங்கள் உண்மையான சோல்மேட் ஆக இருக்கலாம். உங்கள் வாழ்வில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை நீங்கள் இப்போது உணர்வீர்கள். நீங்கள் பயணிக்கும் பொழுது நீங்க செய்ய வேண்டிய வேலை இருந்தால் அதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இதற்கு முன்பு மறுத்த வாய்ப்பு ஒன்று உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். முதலீடு செய்தது நல்ல லாபத்தை ஈட்டித்தரும். உங்கள் நெருங்கிய நண்பரின் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம் எனவே நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒரு வணிக வாய்ப்பு தற்போது கிடைக்கும். உங்கள் அழைப்புக்காக ஒருவர் பல நாட்களாக காத்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : கிறுக்கல் ஓவியம்

கும்பம் : புதிய சுற்றுப்புறத்தை, புதிய மக்களுடன் பழக அல்லது ஒரு சூழலை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுடைய கவனம் ஒரு முக்கியமான விஷயத்திற்கு தேவை. நீண்ட நாட்களாக நீங்கள் செய்யாமல் வைத்திருக்கும் விஷயங்களை தற்போது உடனடியாக கவனித்து நிறைவேற்ற வேண்டும். உங்கள் நெருங்கிய நண்பர் உங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அது மட்டுமின்றி உங்கள் நெருங்கிய நண்பர் உடன் ஏற்பட்ட மோசமான அனுபவம் உங்களை பாதிக்கக்கூடும். உங்களுடைய பலவீனங்கள் எதையுமே நீங்கள் வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். ஆனால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : பேப்பர் வெயிட்

மீனம் : கடந்த காலத்தில் நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் நீங்கள் தீர்வு காணவேண்டும் அல்லது மறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதை நினைத்து உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். வேலையைப் பொறுத்தவரை உங்கள் தலைமையிடம் நீங்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் மீது க்ரஷ் இருக்கும் ஒரு நபர் உங்களை நீண்ட நாட்களாக பின் தொடரலாம். பொதுவாகவே நீங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் இருக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் உங்களைப் பற்றி தவறாக பேசும் சூழ்நிலை காணப்படுகிறது. நீங்கள் யாரையும் அவ்வளவு எளிதாக நம்ப மாட்டீர்கள். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் : தெளிவான படிகம்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி