இன்று ஒரு புதிய நபரின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருக்கலாம். உங்கள் தாயார் உங்களிடம் சில முக்கியமான விஷயத்தை பற்றி பேசலாம். அதை நீங்கள் தவிர்க்க கூடாது. தற்போது நடைபெற்று வரும் உங்களின் எதிர்கால திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ண கண்ணாடி
ரிஷபம்:
முக்கிய முடிவுகள் நிலுவையில் இருந்தால், அவை இப்போது நிறைவேறலாம். உங்கள் அச்சங்களை நிவர்த்தி செய்ய இது ஒரு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் உறுதிமொழியில் பின்தங்கியிருக்கலாம். நீங்கள் அளிக்கும் உறுதிமொழியை காப்பாற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா குவார்ட்ஸ்
மிதுனம்:
நீங்கள் ஒரு அமைதியான சூழலை விரும்புவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள குழப்பம் பணியில் உங்களை கவனம் செலுத்த விடாமல் தடுக்கும். நண்பர்களை சந்திக்கும் திட்டம் மேலும் தள்ளிப்போகலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மின்னஞ்சல்
கடகம்:
நீங்கள் இருக்கும் புதிய இடத்தை நீங்கள் அனுபவிக்கத் தொடங்கலாம். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சில தடைகள் இருக்கலாம். நீங்கள் காதல் உறவில் இருந்தால், உங்களில் சில விவாதங்கள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பாரம்பரிய தளம்
சிம்மம்:
உங்கள் எண்ணங்களை அடக்கி வைப்பது பின்னர் பல குழப்பங்களை ஏற்படுத்தலாம். எனவே தெளிவாக செயல்படுவது நல்லது. வேலையில் ஒரு திட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பை நீங்கள் பெறலாம். உங்களைச் சுற்றி உருவாகும் போட்டிக் கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய உணவகம்
கன்னி:
நண்பருடன் மேற்கொள்ளும் ஒரு உரையாடல் உங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்கள் தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பூங்கா
துலாம்:
உங்களில் இன்று நம்பிக்கை பிறக்கும். சில விஷயங்கள் உங்கள் நாளின் வேலைகளை தள்ளிவைக்கலாம். ஸ்மார்ட் வேலை யோசனைகள் ஒரு புதிய உள் சக்தியாக செயல்படும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்லோகன்
விருச்சிகம்:
உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளைப் பறிக்க யாரோ ஒருவர் முயற்சி செய்து வெற்றியும் பெறலாம். இன்று உங்கள் ஆற்றல் சற்று சிதறியதாக தெரிகிறது. ஒரு நெருங்கிய நண்பர் உங்களைப் புரிந்துகொண்டு உங்களுக்கு உதவி செய்யலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குடம்
தனுசு:
உங்கள் பணியிடத்தை பிடிக்க பலர் முயற்சி செய்யலாம். உங்கள் தற்போதைய வேலை மற்றும் எதிர்காலத்தையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்று லேசாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் வளராமல் இருக்க உதவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பளிங்கு அலமாரிகள்
மகரம்:
எதையாவது கண்டுபிடிக்க முயற்சித்தால், அதை நோக்கியே ஓடுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. நீங்கள் தேடும் ஒரு விஷயம் உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடம் கூட இருக்கலாம். இன்று ஒரு புதிய ஆர்வம் உங்களை கூடுதல் ஆக்கிரமிப்பில் வைத்திருக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கல் மோதிரம்
கும்பம்:
சில யூகங்களைச் வைத்து எதிர்காலத்திற்கான உங்கள் சொந்த திட்டங்களைக் கொண்டு வர வேண்டிய நாள். இருப்பினும் ஒரு உள்ளுணர்வு அணுகுமுறை தேவைப்படலாம். உங்களுக்கு இன்று ஒரு முதியவரின் அறிவுரை கிடைக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாதாம்
மீனம்:
உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் உங்களைப் பற்றி மேலும் அறிய விரும்பலாம். பழைய காதல் மீண்டும் உங்கள் மனதில் வரலாம். அவருடன் மீண்டும் இணையும் வாய்ப்பும் உள்ளது. ஒரு புத்துணர்ச்சியூட்டும் உல்லாசப் பயணம், இன்றைக்கு நிகழும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய பேனா
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.