Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: திருமணத்திற்காக காத்திருக்கும் இந்த ராசியினருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.. (04.03.2022)

தெய்வீக வாக்கு: திருமணத்திற்காக காத்திருக்கும் இந்த ராசியினருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.. (04.03.2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | இந்த நாளில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு, உங்கள் வழியிலேயே சென்று சாதிப்பீர்கள். மற்றவர்களை விட நீங்கள் முன்னேறிச் செல்வதை கண்கூடாக நீங்களே பார்ப்பீர்கள். அதற்கான பாராட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷம் :

கொண்டாட்டங்களும், ஆச்சரியங்களும் உங்களுக்கு காத்திருக்கின்றன. கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன, புதிய வணிகம் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்ற காலம் இது. விவாதங்களில் பெரிதாக ஈடுபடாமல், அமைதியாக இருந்து தீவிரமாக ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் கொஞ்சம் வேகமெடுக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பெரிய கிளாஸ்

ரிஷபம் :

கடந்த சில காலத்தில் உணர்ச்சிபூர்வமாக மன ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால், இப்போது நீங்கள் சமநிலையில் உணர்வீர்கள். கடந்த காலத்தில் உள்ள பாரம்பரியம் இப்போது தடையாக வரலாம். நீங்கள் ஒரு முதியவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பலவண்ணத்தில் இருக்கும் கலைப்பொருள்

மிதுனம் :

திடீரென்று திட்டத்தை மாற்றுவது உங்கள் நாளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவீர்கள். அது உங்களுக்கு புதிய நபர்களை அறிமுகப்படுத்தும். புதிய அறிமுகம் நீண்ட காலம் உங்களுடன் பயணம் செய்யும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி நாணயம்

கடகம் :

நீங்கள் புதிதாக ஏதேனும் ஒன்றைத் தொடங்கும் பொழுது படபடப்பாக உணர்வீர்கள். ஆனால் நீங்கள் தைரியமாக முன்னேறி செல்லலாம். உங்கள் மனதில் இருக்கும் குழப்பத்துக்கு உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நேரம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – லிமிடெட் எடிஷன் ஆர்ட்டிகிள்

Also Read : பஞ்ச பூத சிவ தலங்களின் சிறப்புகள்...

சிம்மம் :

இந்த நாளில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு, உங்கள் வழியிலேயே சென்று சாதிப்பீர்கள். மற்றவர்களை விட நீங்கள் முன்னேறிச் செல்வதை கண்கூடாக நீங்களே பார்ப்பீர்கள். அதற்கான பாராட்டும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இப்போது செய்யும் எல்லா விஷயங்களுக்கும் வெகு விரைவிலேயே வெகுமதிகள் காத்திருக்கின்றன.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பஞ்சு

கன்னி :

இன்று காலை மெதுவாக செல்லும், ஆனால் போகப்போக நாள் வேகமெடுக்கும். நீங்கள் வழக்கமான வேளையில் அழுத்தத்தை உணர்வீர்கள். மனதுக்கு கொஞ்சம் அமைதி கொடுத்து, நேரம் எடுத்து தீர்வு வழங்க வேண்டும். பல விஷயங்களை நீங்கள் ஆய்வு செய்வதை விட்டு, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்டிரா

துலாம் :

கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் நன்றாக முதிர்ச்சி அடைந்துள்ளீர்கள். ஒரு சூழலை நீங்கள் மைக்ரோஸ்கோப் கண்கள் வழியாக பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு திறன் அதிகரித்துள்ளது. உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பு உள்ளது, அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். உங்களை சார்ந்து இருக்கும் நெருக்கமான நபருக்கு பிரச்சனை இருக்கக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அருகில் இருக்கும் சலூன்

Also Read : திங்கள் கிழமைகளில் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்...

விருச்சிகம் :

நீங்கள் யாருக்கு உறுதிமொழி அளித்துள்ளீர்களோ, அதன்படி நடப்பது உங்களின் முதல் கடமை. நீங்கள் அப்படி செய்யாமல் இருப்பது உங்கள் இருவருக்கிடையில் பிரச்சனைகளை அதிகரிக்கும். சொத்து சம்மந்தப்பட்ட வேலையில் இருந்தால், உங்களுக்கு நல்ல நேரம் காத்திருக்கின்றது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – எமரால்டு

தனுசு :

பல வாய்ப்புகளை அளிக்கும் இது ஒரு டைனமிக் தினம். அவை இப்போது சிறியதாக இருக்கலாம், ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முடிவெடுக்காமல் இருக்கும் விஷயங்களுக்கு நீங்கள் உடனடி முடிவெடுக்க வேண்டும். உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளை நீங்கள் தவிர்க்கக் கூடாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க எம்பிராய்டரி

மகரம் :

சிறப்பாக இன்று எதுவும் இல்லையென்றாலும், இந்த நாள் நன்மையாக இருக்கும். நீங்கள் எதிர்காலத் திட்டம், நண்பர்கள் உடன் அல்லது உங்களை ஊக்கப்படுத்த இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். அம்மாவின் உடல் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உப்பு நீர் குளியல் தொட்டி

Also Read : சிவபெருமானின் மிக உயரமான சிலைகள் எங்கெங்கு உள்ளது தெரியுமா?

கும்பம் :

நீங்கள் கனவுலகில் சஞ்சரித்து, முக்கியமான நபரை மிஸ் செய்வதாக உணர்வீர்கள். ஆனால், உண்மை வேறு, அதை உணர வேண்டும். உங்களுக்காக மிக சுவாரஸ்யமான வாய்ப்பு காத்திருக்கின்றது. திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சிமென்ட் பை

மீனம் :

உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தினால், காயப்பட்டு விடுவீர்களோ என்று பயப்படுகிறீர்கள். அதை நீங்கள் எழுதி வெளிப்படுத்தலாம். உங்கள் ரகசியங்களை அறிந்த நெருங்கிய நண்பரை நீங்கள் நம்பலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீர் நிலை
Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி