Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினர் புதிய சவாலை சந்திக்க நேரிடும்... (மார்ச் 25,2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினர் புதிய சவாலை சந்திக்க நேரிடும்... (மார்ச் 25,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீங்கள் ஒரு முக்கியமான பதிலுக்காக காத்திருந்தால், காலம் செல்ல செல்ல நாட்கள் பலன் தராமல் போய்விடும்.

மேஷம்

நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் சரியான முறையில் தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களில் சிலருக்கு வீட்டு ஞாபகமாக இருந்தால், வீட்டிற்குத் திரும்புவதற்குத் திட்டமிடலாம். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு இப்போது நடக்கும், ஆனால் வேறு வடிவத்தில் நிகழும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வீட்டில் வளர்க்கப்படும் செடி

ரிஷபம்

இன்று நீங்கள் மிகவும் நெகிழ்வாகவும் இணக்கமாகவும் உணரலாம். உங்கள் வாழ்க்கைத்துணை உணர்ச்சிபூர்வமாக சோர்வாக இருக்கலாம். இன்று நீங்கள் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய கவனச்சிதறல்கள் ஏற்படக்கூடும் என்பதால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதில் இருந்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உப்பு விளக்கு

மிதுனம்

உங்களின் சமீபத்திய பயணம் புதிய வணிக யோசனைகளைத் தரும். உங்கள் பழைய முக்கியமான விஷயங்களுடன் நெட்வொர்க்கிங்கைத் தொடங்கலாம். திடீரென்று எழும் ஒரு புதிய சவால் உங்களை பிஸியாக வைத்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கோபால்ட் நீல பெட்டி

கடகம்

உங்களின் முந்தைய வேலை இப்போது மற்றவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். நீங்கள் சில திறன்களையும் மேம்படுத்த வேண்டியிருக்கலாம். வீட்டில் கூடுதல் இடத்தை உருவாக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதை இப்போது செயல்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மயில்

சிம்மம்

நன்கொடை அல்லது பிறருக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு உங்கள் பாதையில் வரக்கூடும். வீட்டில் தகராறு இருந்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தனிப்பட்ட விஷயத்தைத் திட்டமிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிரிக்கெட் போட்டி

கன்னி

நீங்கள் பிராக்டிக்கலாக இருப்பது என்பது குறைகளையும் கொண்டுள்ளது. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்கள் அணுகுமுறையால் பின்னுக்குத் தள்ளப்படலாம். செய்யக்கூடியதாகத் தோன்றும் பணிப் பட்டியலை உருவாக்க இது ஒரு நல்ல நாள் மற்றும் ஆற்றல்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் விரும்புபவற்றை சாதிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – விரும்பும் படம்

துலாம்

தேவையற்ற பயத்திலிருந்து விடுபடுவது இன்றைய மிகப்பெரிய சாதனையாக இருக்கும். நீண்ட நாட்களாக ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு கவலையாக இருக்கலாம். நீங்கள் தவிர்க்கும் ஒருவரை சந்திக்க வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு உள்ளது. அரிப்பு அல்லது தோல் ஒவ்வாமை உங்களை எரிச்சலடையச் செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான கிறிஸ்டல்

விருச்சிகம்

உங்களைப் பற்றி சில வதந்திகள் பரவி வருகின்றன, அவற்றைப் பற்றி உங்களுக்கும் தெரிய வரும். முன்னர் எந்த ஆர்வமும் தோன்றாத ஒரு புதிய திட்டம் திடீரென்று கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். உங்களுடன் தீவிரமாக விவாதிக்க வேண்டும் என்று உங்கள் பெற்றோர் முடிவு செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சணல் பை

தனுசு

பழைய உறவைப் பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், இன்று நீங்கள் பேச முயற்ச்க்கலாம். வழக்கமாக மந்தமாகத் காணப்படும் நீங்கள், புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய ரொட்டீனைப் பின்பற்றலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய கலை

மகரம்

ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்குவதைப் போல் எல்லோரும் உணர மாட்டார்கள், அதே போல நீங்களும் இன்று அமைதியாக இருக்க விரும்பலாம். முக்கியமான ஒன்றை மறுபரிசீலனை செய்யும் மனநிலையில் நீங்கள் இருப்பீர்கள். உங்களுடைய பொதுவான கண்ணோட்டங்களை மாற்றும் நாள் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வண்ணமயமான ஸ்கார்ஃப்

கும்பம்

நீங்கள் நிதானமாக இருப்பது போல் உணர்கிறீர்கள், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஒரு நல்ல நாள். ஒரு நண்பருடன் குறிப்பிட்ட விஷயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் செயல்படலாம். யாரிடமாவது கடன் கேட்பது நல்ல யோசனையல்ல. அதிகமாக சாப்பிடுவதிலிருந்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கெட்டில்

மீனம்

நீங்கள் ஒரு முக்கியமான பதிலுக்காக காத்திருந்தால், காலம் செல்ல செல்ல நாட்கள் பலன் தராமல் போய்விடும். மாறிவரும் சூழ்நிலையிலிருந்து நீங்கள் விரும்புவதை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். எதிர்பாராத தொலைபேசி அழைப்பு உங்கள் நாளை அழகாக்கும். நீங்கள் விரும்பிய முடிவுக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒத்திசைக்கப்பட்ட எண் தட்டு
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி