Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் அலுவலகத்தில் பாராட்டுகளை பெறுவார்கள்... (மார்ச் 21, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் அலுவலகத்தில் பாராட்டுகளை பெறுவார்கள்... (மார்ச் 21, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | ஒரு முடிவை எடுத்தாலோ அல்லது உறுதி செய்தாலோ அதைத் தடுத்து நிறுத்த முயர்ச்சி செய்ய வேண்டாம்.

மேஷம்

உங்களின் அலுவலக ரீதியான விஷயங்களை சரிபார்த்து உங்கள் ஆவணங்களை சரி செய்ய வேண்டிய நாள் இது. நீங்கள் பல விஷயங்களை ஒத்திவைத்திருக்கலாம், ஆனால் அவற்றை விரைவில் நிறைவேற்ற வேண்டி வரும். கடந்த காலத்தில் உங்களுடன் தொடர்பில் இருந்தவர் மீண்டும் உங்களிடம் உதவி கேட்க முயற்சி செய்யலாம். உடல் உபாதைகளிலிருந்து விடுபட, மாற்று சிகிச்சை உதவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஹெட்ஃபோன்

ரிஷபம்

இன்று தற்செயலாக பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால் அவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே யூகித்திருப்பீர்கள். உங்கள் உடன்பிறந்தவர்கள் சொல்வதை மறுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக கொஞ்சம் ஒதுக்கி உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு கறுப்புக் கல்

மிதுனம்

நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு, நீங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் பலன் கிடைக்கும். நீங்கள் கடந்த காலங்களில் பிரச்சனைகளை சந்தித்திருந்தால், விரைவில் நீங்கள் அதற்கான தீர்வைப் பெறுவதற்கு ஒரு நல்ல ஆலோசகரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்விக்கு முயற்சிக்கும் மாணவர்கள் எதிர்பார்த்ததை விட சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பூட்டு & சாவி

கடகம்

நம்பகமான, அதே நேரத்தில் கடந்த காலத்தைச் சேர்ந்த நபர், ஆலோசனை கேட்டு உங்களை அணுகலாம். நீங்கள் ஒரு ஸ்டார்ட்-அப் பிசினஸில் ஈடுபட்டிருந்தால், உங்களுக்கு பண வரவு நம்பிக்கையை அளிக்கும். வரவிருக்கும் புதிய திட்டத்தில் பணியாற்ற நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நோட்புக்

சிம்மம்

உங்கள் தனிப்பட்ட விஷயங்களைக் கடந்து நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கான சாதகமான நாள். உங்கள் பெற்றோருடன் நீங்கள் நேரம் செலவிட வேண்டும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை தள்ளிவைக்காமல் நிறைவேற்ற வேண்டும். எப்போதோ இழந்த ஒன்று, இப்போது கிடைக்கலாம். வழக்கத்திற்கு மாறாக இன்று பரபரப்பான நாளாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி கொலுசு

கன்னி

உங்களுக்கு முக்கியமான மற்றும் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த சிறந்த நாள். நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெறுவீர்கள். நீங்கள் புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இருந்தால் அதையும் நிறைவேற்ற முயற்சிக்கலாம். ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க முயற்சிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அலங்கார ஃபிரேம்

துலாம்

கொண்டாட்டங்கள் விரைவில் தொடங்கலாம். எதிர்பார்க்காத, திட்டமிடாத வகையில் ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பை நீங்கள் காண்பீர்கள். அவசரப்பட்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம், அதனால் பாதிப்புகள் ஏற்படலாம். ஒரு மூத்த நபர் உங்களுக்குத் தேவைப்படும் நல்ல ஆலோசனையை வழங்கலாம். அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – திரைச்சீலை

விருச்சிகம்

நீங்கள் பிராக்டிலாக இருப்பது யாரையாவது பெரிதாகக் காயப்படுத்தலாம். உங்கள் கம்யூனிகேஷன் திறன்களை மேம்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்தவை அனைத்தும் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போகலாம். நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் ஒருவர் நீங்கள் செய்யும் வேலையை கவனிக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பேருந்து பணிமனை

தனுசு

இந்த தினம் நீங்கள் விரும்பியபடி சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று உங்கள் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். நீங்கள் நிதானமாக, அமர்ந்தே உங்கள் பணியை முடிக்க தேர்வு செய்யலாம். உங்கள் ஆற்றலை மேம்படுத்த இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். உடல் உபாதைகளில் அஜீரணத்தை ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – குருவி

மேலும் படிக்க... ராகு-கேது பெயர்ச்சி 2022 பரிகாரங்கள் : மிதுன ராசியினர் பெருமாள் கோவிலுக்கு செல்வது நல்லது...

மகரம்

மிகைப்படுத்தப்பட்ட ஒரு இலக்கை நோக்கி நீங்கள் ஒரு புதிய பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், சாதகமான பலன்களைத் தராது. நீங்கள் நெருக்கமாக இருக்கும் உறவினர், அன்புடன் உங்களை நினைத்துப்பார்ப்பார். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, வாங்கவும் விற்கவும் ஏற்ற நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டாம்பூச்சி

கும்பம்

ஒரு முடிவை எடுத்தாலோ அல்லது உறுதி செய்தாலோ அதைத் தடுத்து நிறுத்த முயர்ச்சி செய்ய வேண்டாம். வேலையில் இருக்கும் மூத்தவர்கள் உங்களுடைய பெர்ஃபார்மன்சைப் பாராட்டலாம். விரைவில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கக்கூடும். உங்கள் கம்யூனிகேஷன் திறன்கள் உங்களுக்கு உதவியுள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் ஸஃபையர்

மீனம்

முன் கூட்டியே திட்டமிட்டு, ஒரு பணியை நிறைவேற்ற தேவையான திறமையை உபயோகிக்க வேண்டிய நாள் இது. உங்கள் மேலதிகாரி உங்களுக்காக சில திட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருக்கலாம். நீங்கள் ஆர்வத்துடன் செய்யும் விஷயங்கள் உங்களை நோக்கி வரும். முதியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி வயர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Rasi Palan

அடுத்த செய்தி