Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ரசியினருக்கு இன்று பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும்... (மார்ச் 20, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ரசியினருக்கு இன்று பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும்... (மார்ச் 20, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | ஒரு சொந்த நிறுவனத்தை தொடங்க வேண்டும் அல்லது புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும்...

  மேஷம்:

  வழக்கத்திற்கான மாறான ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பினால், அதனை நீங்கள் முன்னெடுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம். விளையாட்டு மீதான உங்களுடைய தீவிர ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட நலன்களுடன் இணைந்து உங்கள் வேலைத் திட்டங்களை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. உங்களை தனது டீமில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருவர் தீவிர முயற்சி செய்யலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முகமூடி

  ரிஷபம்:

  உங்களுடைய திறன் என்னவென்று நன்றாக தெரிந்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டிப்பிடிக்க காத்திருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து வேலைக்கு தேர்வாகிவிட்டதாக அழைப்பு வர வாய்ப்புள்ளது. நீண்ட சாதனைகள் புரிய பெற்றோரின் ஆசீர்வாதம் உறுதுணையாக இருக்கும். உங்கள் கனவுகளை நனவாக்க கூடிய ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்புள்ளது. கவர்ச்சிகரமான புதிய திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆழ்துளை கிணறு

  மிதுனம்:

  ஒரு சொந்த நிறுவனத்தை தொடங்க வேண்டும் அல்லது புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவுடன் தீவிரமாக முயற்சித்து வருகிறீர்கள். இந்த வணிகம் தொடர்பான உங்களின் அனைத்து எதிர்காலத் திட்டங்களையும் மதிப்பாய்வு செய்வது நல்லது. இதற்கு இணையாக, வேறு ஏதாவது வந்தால், அதை முழுமையாக நிராகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். போதுமான சேமிப்பு கைவசம் இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளையாட்டு மாதிரி

  கடகம்:

  உங்களுடைய உள்ளுணர்வும், மனதின் தெளிவும் எந்த அளவிற்கு உள்ளது என்பது இப்போது புரிந்திருக்கும். அது நீங்கள் செல்ல வேண்டிய பாதையை உங்களுக்கு காட்டும். இந்த ராசிக்காரர்களில் சிலர் கார்ப்ரேட் உலகில் குறிப்பிட்ட அடையாளத்தை உருவாக்கலாம். முயற்சி திருவினையாக்கும் என்பதால், முயல்வதை விடாதீர்கள், அது ஒருநாள் உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று தரும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பீங்கான் குவளை

  சிம்மம்:

  பொது இடங்களில் பர்ஷனல் பேசுவதை தவிர்க்கவும். இன்றைய தினம் உங்களிடம் கலவையான உணர்ச்சி தென்படும், அதனால் விரைவான மற்றும் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். ஏதாவது ஒரு விஷயம் குழப்பமாக இருந்தால் அதை விட்டுவிடுவது நல்லது. ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிறம்

  கன்னி:

  நீங்கள் திட்டமிட்டாத, எதிர்பார்க்காத ஒரு சுவாரஸ்யமான செய்தி காத்திருக்கிறது. அனைவரது கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். வக்கீல் தொழிலில் இருப்பவர்கள், சவாலான நாட்களை எதிர்நோக்கக்கூடும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்மார்ட் வாட்ச்

  துலாம்:

  போட்டியிடுவது தவறில்லை, அதற்காக சதி செய்வது கூடாது. உங்கள் பரிவர்த்தனைகளில் நீங்கள் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நெருக்கமான ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் மற்றும் ஆலோசனைக்காக உங்களிடம் வரக்கூடும். உடல்நலம் குறித்து சற்றே கவலை ஏற்படலாம். ஆனால் அது தற்காலிமானது, காலப்போக்கில் சரியாகிவிடும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குஷன்

  விருச்சிகம் :

  உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக ஆதாயம் வந்து சேரலாம். அதே சமயம் நீங்கள் மக்கள் மீதான நம்பிக்கை குறித்த சிக்கலை கொண்டிருக்கலாம். சீனியர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். மனைவி உங்களுடைய மிகப்பெரிய விமர்சகராகவும், உந்துதலாகவும் இருப்பார். ஒரு சொத்தை விற்பது தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எம்பிராய்டரி வேலைப்பாடு

  தனுசு :

  ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் திறமை இல்லை என எல்லாவற்றிலும் குறை காணும் சந்தர்ப்பம் வரக்கூடும். ஆனால் உண்மையில் உங்களிடம் ஒரு குறையும் கிடையாது, பதற்றமடையாமல் உங்களுக்கான நேரத்திற்காக காத்திருந்தால் பிரகாசிக்கலாம். எதையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் நிராகரிக்காதீர்கள். எதிர்காலத்தில் இன்னும் தைரியமான முடிவுகளை எடுக்கப்போவதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில்

  மகரம்:

  கடந்த காலத்தில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் மீண்டும், மீண்டும் நினைவில் தோன்றி தொல்லை கொடுக்கலாம். ஆனால் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே அதைப் பற்றி கவலைக் கொள்ளாதீர்கள். புதிய விஷயங்கள் சிறப்பான அனுபவங்களை கொடுக்கும். ஹையர் ரேங்கிங்கில் புரோமோஷன் பெற வாய்ப்புள்ளது. வெளிப்படை தன்மை உங்களுக்கான நட்பு வட்டத்தை பெரிதாக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரபலம்

  கும்பம்:

  நெருக்கடி காலத்தில் தனித்துவிடப்படுவீர்கள் என்ற எண்ணம் உண்மையானது அல்ல. காலம் எப்போதும் ஒரே மாதிரியானது கிடையாது, அது மாறிக்கொண்டே இருக்க கூடியது. உங்களின் கடந்த கால தவறுகளை நீங்கள் திரும்பிப் பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் அவை உங்கள் மனப்பான்மையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து காண்பிக்கப்படலாம். உங்களுடைய பட்டியலில் ஒரு ஆன்மீக பயணம் அல்லது முன்கூட்டியே திட்டமிட்ட பயணம் இடம் பெறலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பேன்சி கார்

  மீனம்:

  திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு, வரன் விஷயத்தில் பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் நீங்கள் விரும்புவதை விரும்புவார், தான் அதிர்ஷ்டசாலி இல்லை வருந்தலாம். பொறாமையின் விஷத்தை அவ்வப்போது உமிழ்வார்கள் என்பதால், அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சில நேரங்களில் எதிர்மறையான மனநிலை உங்களை வாழ்க்கையில் சில அடிகள் பின்னோக்கிச் செல்ல வைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ட்ரீ ஆஃப் லைப்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Oracle Speaks

  அடுத்த செய்தி