Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய தினம் பாசிட்டிவ் அதிர்வலைகளை தரும்... (17.03.2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய தினம் பாசிட்டிவ் அதிர்வலைகளை தரும்... (17.03.2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | இன்று உங்கள் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க விரிவான திட்டங்களை முயற்சி செய்வீர்கள், ஆனால் அவை மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது...

மேஷம்:

புதிதாக ஒன்றை தொடங்க இன்றை தினம் சிறப்பானதாகும். அது ஒரு புதிய முயற்சியாகவோ, அசைன்மெண்ட்டாகவோ இருக்கலாம். அதற்கு முன்னதாக நீங்கள் முறையாக தயாராகியுள்ளதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். சுய மதிப்பீட்டை விட உங்களுடைய திறன் பன்மடங்கு அதிகமானது. வீட்டில் புனிதமான இடத்தை உருவாக்க முயற்சியுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி படம்

ரிஷபம் :

இன்று, அடிப்படைகளை கடைபிடிப்பது பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் பயிற்சி செய்து வரும் அடிப்படைகளை நீங்கள் முயற்சி செய்து கடைப்பிடிக்க வேண்டும்.அதன் மூலம் நீங்கள் முன்னேற்றம் அடையவும், மனதில் தெளிவு பெறவும் முடியும். முக்கிய முடிவுகள் எடுப்பதை சிறிது காலத்திற்கு தள்ளவைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் -வெள்ளி மெழுவர்த்தி

மிதுனம்:

நீங்கள் யாருடனாவது பார்ட்னர் ஷிப் வைத்துக்கொள்ள விரும்பினால், அதற்கு தற்போது நேரம் மிகச்சரியாக உள்ளது. முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களை பொதுவெளிகளில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் வேலையில் தேவையில்லாமல் அதிக அழுத்தம் கொடுத்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரத்தின கல்

கடகம்:

உங்களை மூடி மறைத்த உணர்ச்சிகள் இப்போது விலகியுள்ளதால், பிறர் உங்களுடைய உண்மையை அறிந்து கொள்ள முடியும். ஓவர் எமோஷன் உங்களை பிறரைச் சார்ந்திருக்க செய்துள்ளது. அது இனி தேவையில்லை. இனி உங்களுடைய சுதந்திரமான பாதையை தேர்வு செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் கல்

சிம்மம்:

கடந்த சில காலமாக நீங்கள் சந்திக்காத நபரிடம் இருந்து எதிர்பாராத வரவேற்பு கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். இந்த ராசிக்காரர்களில் சிலர் வெளிநாட்டில் விடுமுறைக்கு திட்டமிட்டு இருக்கலாம். சமையல் இப்போதைக்கு உங்களுக்கான நல்ல மன சிகிச்சையாக இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி

கன்னி :

உங்களுடன் உறவில் இருந்த ஒருவர் தற்போது வேறு இடத்திற்குச் சென்றிருந்தால் மிகவும் எமோஷனாலாக உணர்வீர்கள். ஆனால் கவலை வேண்டாம் இருவருக்குமிடையிலான பாசம் தனித்துவமானது. அதனை எப்போதும் பிரிக்க இயலாதது. பணத்தை கையாள்பவர் என்றால், கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அது வேறு ஒருவரால நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உங்கள் பயனுள்ள தொடர்பை வேறொருவருக்கு வழங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை

துலாம் :

உங்கள் தலைமைப் பண்பு அதிகரித்து வருகிறது, அதை வெளிப்படுத்தியதற்காக நீங்கள் பாராட்டுக்களையும் பெறலாம். வேலையில் விவரமும், பர்பெக்‌ஷனும் கொண்டுள்ளதால் உங்களுடைய பணியமர்த்திற்கான மதிப்பை பெறலாம். இன்றைய தினம் தூரத்திலிருந்தோ அல்லது வீட்டிலிருந்து வரும் ஒரு நல்ல செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இன்டோர் பிளாண்ட்

விருச்சிகம் :

இதற்கு முன்னதாக உங்களுடைய வேலையை எதிர்த்து வந்தவர்கள், தற்போது மாற வாய்ப்புள்ளது. நீங்கள் முன்நிறுத்தும் விஷயத்தை பிறர் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதில் கவனம் தேவை. பண ஆதாயம் தொடரும். நீங்கள் விரைவில் ஒரு புதிய சொத்தை வாங்கலாம். உங்களின் வேலை முறைக்கு முன்பு இரண்டு பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அது உங்களுக்காக மாற வேண்டும். மக்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள் என்பதற்கு எதிராக நீங்கள் எதை முன்னிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்பதில் ஒரு குறிப்பிட்ட சீரமைப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அறை

தனுசு:

இவ்வளவு குறைந்த நேரத்தில் உங்கள் மனத்திறன் மற்றும் சுறுசுறுப்பால் நீங்கள் உருவாக்கிய தாக்கம், கைதட்டலுக்கு உரியது. நீங்கள் ஒரு புதிய வணிக யோசனையை நினைத்தால், அது உங்களுக்கு சாதகமாக மிக விரைவில் செயல்படும், கூட்டாக கூட தொழில் தொடங்க முயற்சிக்கலாம். வீட்டில் அமைதி என்பது சவாலானதாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உயரத்தின் மீது ஏறுபவர்

மகரம்:

இன்றைய தினம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு அதிர்வுகளையும் கொண்டுள்ளது. நெருக்கமான ஒருவர் உங்களுடன் ஆதாயத்தை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம், எனவே அப்படிப்பட்ட நபர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. விரைவில் ஒரு ரோடு ட்ரிப் செல்ல வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாம்பூச்சி

கும்பம் :

இன்று உங்கள் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க விரிவான திட்டங்களை முயற்சி செய்வீர்கள், ஆனால் அவை மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. சற்றே ஓய்வெடுத்துவிட்டு, சரியான நேரத்திற்காக காத்திருங்கள். மனைவியிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும் இப்போது உங்களுக்கு பொருத்தமானதாகத் தெரியாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கேன்வாஸ்

மீனம்:

கடந்த கால செயல்கள் குறித்து தற்போது வரை உங்களுக்கு நிறைய குற்ற உணர்வு உள்ளது. அதனை உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவரும் நினைவூட்டுவார். அதனை சரி செய்து கொள்ள விரைவில் காலம் உங்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு இறகுகள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி