ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சர்பிரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்... (ஏப்ரல் 16, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சர்பிரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்... (ஏப்ரல் 16, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | உங்கள் வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

நீங்கள் விரும்பினால் இந்த நாள் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் விரும்பவில்லை என்றால் இன்றைய நாள் சாதாரணமானதாக மற்றும் சலிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மணி பிளான்ட்

ரிஷபம்:

உங்களுக்கு மிகவும் நெருக்கமான யாரோ ஒருவருக்கு இன்று உங்கள் ஆதரவு தேவைப்படலாம். சிலருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய நபர்கள் இன்று உங்களுக்கு அறிமுகமாக கூடும். அவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சிவப்பு நிற அலங்கார பொருட்கள்

மிதுனம்:

இன்று உங்களுக்கு குழப்பமான மனநிலை இருக்க கூடும். உங்களது எண்ண ஓட்டத்தில் இடையூறு ஏற்படலாம். எனவே நீங்கள் அமைதியாக மற்றும் நிதனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். குறிப்பாக ஆடை வணிகத்தில் உள்ளவர்கள் தேவை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாளாக இன்று அமையலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சாஃப்ட்டான பொம்மை

கடகம்:

இன்றைய நாள் உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்களுக்கு நம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் எந்த பழக்கத்திற்காவது அடிமையாக இருந்தால், அதை கைவிட நீங்கள் இன்று எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இல்லத்தரசிகளுக்கு இன்று வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிக்னல்

சிம்மம்:

உங்களுக்கு வேண்டியவர்கள் சொல்லும் ஆலோசனைகளை காது கொடுத்து கேளுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். இன்று நீங்கள் பயணிக்கும் போது காதல் ஆர்வமுள்ள ஒருவரை சந்திக்க நேரிடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - உங்களுக்கு மிகவும் பிடித்த பைக்

கன்னி:

இனி நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று யோசித்து வைத்துள்ள விஷயங்கள் ஏராளம். ஆனால் அவற்றை 100 சதவீதம் இன்னும் செயல்படுத்தவில்லை என்றால் இன்று அதற்கான நாளாக இருக்கும். உங்களது கடந்த கால வேலை அல்லது முயற்சிக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இறகு

துலாம்:

உங்களது நிலையான கருத்துக்களில் மற்றவர்களுக்கு உடன்பாடு ஏற்படாமல் இருக்கலாம். எனினும் நீங்கள் அதில் விடாப்பிடியாக இருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன் உங்களுக்கு வந்து சென்ற ஒரு நல்ல வாய்ப்பு இன்று உங்களை தேடி மீண்டும் வர கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கரோக்கி

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு ஆட்டம், பாட்டம் மற்றும் கொண்டாட்டமாக செல்வதற்கான வாப்புகள் அதிகம் உள்ளன. நாளின் இரண்டாம் பாதியானது முதல் பாதியை விட பொழுதுபோக்காக இருக்கும். அதிகாலை முதல் மதியம் வரை சில சலிப்பூட்டும் தருணங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய புத்தகம்

தனுசு:

உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் சிலர் தலையிட கூடும். அதனால் அவர்கள் மீது நீங்கள் வெறுப்பை காட்ட நேரிடலாம். டீனேஜ் வயதில் உள்ளவர்கள் ஒரு குழப்பமான நேம் அலல்து மனநிலையை எதிர்கொள்ள கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பியானோ

மகரம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களுக்கு மிகவும் உற்சாகமான நாளாக அமையும். உங்களை சுற்றியுள்ள முக்கியமான விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை காண்பீர்கள். வாழ்வில் முன்னேற ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க சிறந்த நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சதுர பெட்டி

கும்பம்:

புதியதை ஏற்று கொள்ள நீங்கள் தயாரான மனநிலையில் காணப்பட்டாலும் உங்கள் மனம் அமைதியற்றது என்பதால் குழப்பத்தில் இருப்பீர்கள். எனினும் உங்கள் மனதிலுள்ள அச்சங்களை நீக்கிவிட்டு முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில் நிலை நிறுத்த வேண்டிய நாள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிஃப்ட் பாக்ஸ்

மீனம்:

உங்கள் வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் ஒரு சில மாற்றங்களை ஏற்று கொண்டால் உங்களுக்கான புதிய வாய்ப்பு கதவு திறக்கும் என்ற நிலை ஏற்படும். எனவே நிதானமாக முடிவெடுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மணி கூண்டு

First published:

Tags: Oracle Speaks