குடும்ப ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதியாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டிய நேரம் இது. கடந்த கால கருத்து வேற்றுமைகளுக்கு இப்போது தீர்வு கிடைக்கலாம். வழக்கமான பணிகளில் புதிய வீரியத்துடன் செயல்பட வேண்டியிருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வைரம்
ரிஷபம்:
புதிய நாள் ஒவ்வொன்றிலும் புதிய சவால் காத்திருக்கும். குடும்ப பிரச்சினைகளை இப்போதைக்கு தள்ளிப்போட விரும்புவீர்கள். இன்றைக்கு சிறப்பு வாய்ந்த ஒருவரை நீங்கள் சந்திக்கக் கூடும். கடந்த கால செயல்களை நினைத்து வருந்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செம்பருத்தி பூ
மிதுனம்:
உங்கள் நிலையறிந்த சிலரது ஆலோசனைகளை தவிர்க்கவும். மற்றவர்களுடன் எந்தவொரு ஆலோசனையை செய்வதற்கு முன்பாகவும் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பணியிடங்களில் கவனம் தேவை. தாயின் உடல் நலனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மூடுதிரை
கடகம்:
உங்கள் பயணம் தடைபட்டது என்றால், அதை வரம் என நினைத்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் சிலர் தகவல் தெரிவிக்காமல் வரலாம். அலுவலகப் பணி சிரமம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உடல் நலனுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்
சிம்மம்:
உங்களுக்கு நெருக்கமான சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசக் கூடும். அதை மனதில் எடுத்துக் கொள்ளாதீர்கள். மாபெரும் நிதி வாய்ப்பு ஒன்று உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். சரும பிரச்சினைகளை கவனிக்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை
கன்னி;
உங்கள் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்க இருப்பதற்கான அறிகுறிகள் தென்படும். நீண்ட காலமாக உங்களிடம் திருப்பிக் கொடுக்காத ஒன்றை உங்கள் நண்பர் இப்போது கொடுக்கக் கூடும். இந்த மாத இறுதியில் பயணம் ஒன்று அமையும். அது மனதிற்கு நிம்மதியை தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்
துலாம்:
பல்வேறு விஷயங்களை வைத்து மனதில் குழப்பம் கொண்டிருப்பீர்கள். ஆனால், தீர்வு இருக்காது. உங்களுக்காக அல்லது குடும்பத்தினருக்காக நேரம் செலவிடுவதில் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று புதிய சிந்தனை உதிக்கக் கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நவரத்தின கல்
விருச்சிகம்;
ஏற்கனவே கை விட்டுப் போன வாய்ப்பு திரும்பக் கிடைக்கும். உங்கள் உடனடி இலக்கை செயல்படுத்துவதற்கான புதிய பலம் உங்களைச் சேரும். கடந்த 2 நாட்களாக மனதை வாட்டிய விஷயத்திற்கு தீர்வு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரகத கல்
தனுசு:
உங்களிடம் போலியாக நடிக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருக்கவும். உங்கள் முதுக்கு பின்னால் அவர்கள் குறை சொல்லக் கூடும். உங்கள் கடந்த கால முயற்சிகளுக்காக அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல மாணிக்க கல்
மகரம்;
உங்கள் மனதில் புதிய இலக்குகள் குறித்த சிந்தனை உருவாகும். நீங்கள் நேர்மையாக இருப்பது பிறருக்கு பிடித்திருக்கும். கடந்த கால செயல்பாட்டிற்கான அங்கீகாரம் கிடைக்கலாம். அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க மாஸ்க்
கும்பம்:
உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் வெற்றி அடைவதற்கான அறிகுறி தென்படுகிறது. அதை நீங்கள் செயல்படுத்தலாம். நீங்கள் இழந்த ஒன்று குறித்த செய்தி உங்களைத் தேடி வரும். அது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் தகடு
மீனம்;
உங்கள் நம்பிக்கைக்கு மாறான விஷயத்தை இன்றைக்கு நீங்கள் செய்யக் கூடும். சக ஊழியர் ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உடல் புத்துணர்ச்சிக்கான ஒன்றை திட்டமிடுகிறீர்கள் என்றால், அதை செயல்படுத்தும் நேரம் இது. ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாசனை மலர் இதழ்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.