Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று வராத பணம் வந்து சேரும்... (ஏப்ரல் 17, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று வராத பணம் வந்து சேரும்... (ஏப்ரல் 17, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | மனதில் என்ன வருத்தம் இருந்தாலும் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர் அல்லது உங்களை காதலிப்பவர் உடனனான பிரச்சினைகளுக்கு அமர்ந்து பேசி தீர்வு காணவும்...

மேஷம்:

உங்கள் பணியை விரிவாக்கம் செய்வதற்கான புதிய வாய்ப்புகள் தென்படுவதைப் போல தெரிகிறது. நீங்களும் கூட அதை பயன்படுத்தி கொள்வீர்கள். உங்கள் பெற்றோரை மையமாக வைத்து நீங்கள் எதிர்கொண்டு வந்த பிரச்சனைக்கு வெகு விரைவில் தீர்வு கிடைக்க இருக்கிறது. விரைவில் நிம்மதியை நீங்கள் உணர்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டேட்டூ

ரிஷபம்:

உங்கள் வாழ்க்கையில் சிலர் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்துவிட்டாலே உங்களுக்கு பிரச்சினை உருவாகியிருக்கும். ஆனால், சூழல் இப்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இப்போது நீங்கள் விரும்பியதை செய்யலாம். நீங்கள் வணிகம் செய்பவர் என்றால் முதலீடு சார்ந்த சிறு பிரச்சினை வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

மிதுனம்:

மாற்றம் என்பது உடனடியாக நிகழுவதில்லை. நீங்கள் முன்பு செய்து கொண்டிருந்த காரியம் ஒன்றுக்கு இப்போது பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் உற்பத்தி துறையைச் சேர்ந்தவர் என்றால், உங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கு கடன் கிடைக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நைட்டிங்கேல் பறவை

கடகம்:

மதம் சார்ந்த இடத்துக்கு நீங்கள் பயணம் செய்ய நேரிடலாம் அல்லது சாமியார் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கும். சின்னச்சின்ன வாதங்கள் தான் பெரும் சண்டைக்கு வழிவகுக்கும். ஆகவே, அதுபோன்ற வாதங்களை தவிர்க்கவும். குழந்தைகள் மூலமாக உங்களைச் சுற்றி சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கயிறு

சிம்மம்:

உங்களுக்கான அதிர்ஷடம் மேலோங்கி இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் வீட்டில் சின்ன, சின்ன பிரச்சினைகள் நீடிக்கலாம். இருவேறு விஷயங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை புரிந்து கொள்ளும் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கண்ணில் தென்படுவது எல்லாம் உண்மை அல்ல. எதார்த்தத்தை புரிந்து கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க நிற கேட்

கன்னி:

எது ஒன்றும் உங்கள் செயலை பொறுத்து அமைய உள்ளது. வாய்ப்பு ஒன்று ஏற்கனவே உங்களை தேடி வந்துள்ளது. அதை நீங்கள் தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல அது இல்லை என்றாலும், முழு ஈடுபாட்டுடன் நீங்கள் அதை ஏற்க வேண்டும். பொது இடங்களில் பணத்தை கையாள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் வயர்

துலாம்:

உங்கள் முயற்சி பயன் தரும். நல்லதொரு காரியத்தை நோக்கி முழுமையாக கவனம் செலுத்துனீர்கள் என்றால், மற்றதெல்லாம் தானாகவே நடக்கும். சக மக்கள் மீது நீங்கள் பல சந்தேகங்களை கொண்டிருப்பதால், அதன் எதிர்மறை எண்ணங்கள் காரணமாக பணி தடை படுகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் டம்ளர்

விருச்சிகம்:

நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படக் கூடியவர் என்பதால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் விரும்பியதை செய்து முடிக்க வேண்டும். அதேசமயம், அதிகம் பேசாமல், உங்களுக்கான செயலில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பச்சை நிற மரகத கல்

தனுசு:

சக மக்கள் மிகுந்த அக்கறை கொள்வதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உண்மையான நோக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். சில விஷயங்கள் குறித்து உங்களுக்கு அனுபவம் இருந்தாலும், தனிநபர்களின் சுதந்திரத்தில் அது தலையிடும்போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

மகரம்:

மக்களின் நம்பிக்கையை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலை மீது மூத்த அதிகாரி அதிருப்தி கொண்டு, எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இரண்டு அல்லது 3 வாய்ப்புகள் உங்கள் கையில் இருந்தாலும் அது இப்போதைக்கு சாத்தியம் ஆகாது. இன்னும் சிறிது காலம் காத்திருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை மெழுகுவர்த்தி

கும்பம்:

மன நலன் மற்றும் உடல் நலன் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. பல்வேறு விஷயங்கள் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதனால், எதிலும் நீங்கள் கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். கவலைகளை குறைத்துக் கொண்டு தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு கல்

மீனம்:

மனதில் என்ன வருத்தம் இருந்தாலும் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர் அல்லது உங்களை காதலிப்பவர் உடனனான பிரச்சினைகளுக்கு அமர்ந்து பேசி தீர்வு காணவும். நீங்கள் இருவருமே சின்ன சின்ன விஷயங்களை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு இருந்தால் பிரிவு அதிகரிக்கும். மூத்தவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு தலைப்பாகை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி