Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு குடும்பத்தினர் முழு ஆதரவாக இருப்பர்... (ஏப்ரல் 14, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு குடும்பத்தினர் முழு ஆதரவாக இருப்பர்... (ஏப்ரல் 14, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு நீங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் பொருளாதார சூழலில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்...

மேஷம்:

நீங்கள் எதோ ஒன்று குறித்து ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அந்த யோசனையை விடுத்து, செயலாற்ற வேண்டிய நேரம் இது. உங்கள் மன தைரியம் சரியாக இருப்பதால், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கான புதிய பணி ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக் கல்

ரிஷபம்:

நீங்கள் கவலைப்படுவதால் இழந்தது திரும்பக் கிடைக்கப் போவதில்லை. தற்போது நல்ல நேரம் கூடி வருகிறது. ஆகவே, அனைத்தும் நல்லபடியாக நடக்கும். உலகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, உங்கள் பாதையில் நீங்கள் சென்று கொண்டிருக்கலாம். வெகு அருகாமையில் வெளிச்சம் தென்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படரும் கொடி

மிதுனம்:

வீட்டை மேம்படுத்துவது, புதுப்பிப்பது, குடிபெயர்ந்து செல்வது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம். உங்களை அறிந்த ஒருவர் நல்ல வாய்ப்பு ஒன்றை உங்களுக்கு பரிந்துரை செய்யக் கூடும். வழக்கறிஞர்களின் பணியில் சிறிய சறுக்கல் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து

கடகம்:

உங்களுக்கு ஒத்து வராத ஒன்றை மீண்டும், மீண்டும் முயற்சி செய்து நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள். உங்கள் பாதையை மாற்றிக் கொள்வதுடன், உங்கள் ஆழ்மனது என்ன சொல்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். நெருங்கிய நண்பனுக்கு தக்க சமயத்தில் உங்கள் உதவி தேவைப்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வைரம்

சிம்மம்:

நீங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கலில் இருந்து விலகி, நடுநிலையில் உள்ள பாதையை தேர்வு செய்ய வேண்டும். கல்வித்துறையில் பணியாற்றும் நபர்களுக்கு உரிய பாராட்டு அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்க இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டம்

கன்னி:

இதுநாள் வரையில் நீங்கள் அடைய முடியாமல் இருந்த இலக்கை நோக்கி புதிய ஊக்கம் கிடைக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பு இன்றைய நாளில் அமையலாம். வெளிநபர் ஒருவர் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். பிறரிடம் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு

துலாம்:

குறுகிய காலத்தில் ஏதோ ஒன்று குறித்து முடிவு செய்வது சற்று சிக்கலான விஷயம் தான். இருப்பினும், முக்கிய முடிவு எடுக்க போதுமான அவகாசம் உங்களுக்கு கிடைக்கும். மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட வாய்ப்பு ஒன்று உங்களை தேடி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்கு

விருச்சிகம்:

சாதாரண விஷயத்தை மிக பெரியதாக கருதி, அதை நோக்கி நமது நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தோம் என்பதை உணரும் நேரம் இது. உங்கள் விருப்பப் பட்டியலை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். வேறொரு ஊரில் இருந்து சமீபத்தில் குடியேறிய ஒருவர் உங்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெல்வெட் துணி

தனுசு:

உங்கள் முகத்தில் நிலவும் அச்சத்தை போக்கி, பெரும் விஷயத்தை நோக்கி காலடி எடுத்து வைக்கும் நேரம் இது. குடும்பத்தினர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருந்து, பிரச்சினைகளை தீர்க்க உதவுவார்கள். உங்கள் நம்பிக்கைக்கு உரிய நபரை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

மகரம்:

உங்களைச் சுற்றியுள்ள சூழல் மிக வேகமாக மாறி வருகிறது. ஆகவே, அதற்கு தகுந்தாற்போல உங்கள் மன ஆற்றலை அதிகரிக்க வேண்டும். ஆனால், இது தற்காலிகமானது என்பதையும், வெகு விரைவில் நல்ல காலம் வரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தந்தம்

கும்பம்:

சில நினைவுகள் எப்போதுமே விலை மதிப்புமிக்கவை. அதை எப்போதும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். வாழ்க்கை வேகமாக நகருகிறது. இருப்பினும், உங்கள் கவலைகள், நம்பிக்கை உரிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான நபரை யோசித்து தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்கெட்ச்

மீனம்:

வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு நீங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் பொருளாதார சூழலில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். வர்த்தகத்தில் புதிய நபர் கூட்டு சேர முன்வரலாம். அதை கட்டாயம் பரிசீலனை செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கடிகாரம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி