Home /News /spiritual /

தெய்வீக பலன்: இந்த ராசியினருக்கு இன்று மன உளைச்சல், குழப்பம் ஏற்படும்... (ஏப்ரல் 13, 2022)

தெய்வீக பலன்: இந்த ராசியினருக்கு இன்று மன உளைச்சல், குழப்பம் ஏற்படும்... (ஏப்ரல் 13, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | உங்களது நிதி நிலைமை சீராக இருக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்பதில்லை. கடன் கேட்டு வருபவரிடம் உஷாராக இருங்கள்...

மேஷம்:

உங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை, உணர்ச்சி பாதிப்பு மற்றும் நம்பிக்கை சிக்கல்கள் ஆகியவற்றை நீங்கள் உணர்ந்து அவற்றை கண்காணிக்க வேண்டும். சூழலுக்கு ஏற்ப மனதை நிர்வகிக்க வேண்டும். பணியிடத்தில் வேலைகள் சற்று அதிகமாக இருக்கும் என்பதால் சோர்வாக காணப்படுவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோஜா குவார்ட்ஸ்

ரிஷபம்:

இன்று நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செய்து முடிக்கும் திறனை கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் தேவையில்லாத மன உளைச்சல், குழப்பம் போன்றவை ஏற்படலாம். எந்த விஷயத்திலாவது அல்லது யாரையாவது பற்றி எந்த ஒரு உறுதியான முடிவுக்கும் இன்று வந்து வீடாதீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புஷ்பராகம்

மிதுனம்:

இன்று அதிர்ஷ்டம் உங்களை தேடி வரலாம். அந்த வாய்ப்பு இதுநாள் வரை நீங்கள் கண்டுகொண்டிருந்த கனவை நோக்கி செல்வதற்கான ஒரு ஆரம்ப படியாக இருக்கலாம். எனவே உங்களை தொடர்பு கொள்வோரிடம் எளிமையாக மற்றும் நிதானமாக பேசுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பைரைட் கிரிஸ்டல்

கடகம்:

நீங்கள் இன்று நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும் இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் கணவன்/மனைவி உங்களுக்கு ஆதரவாக இருந்து சில பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார்கள். வரவிருக்கும் விடுமுறை நாட்களில் வெளியே செல்வதற்கான திட்டத்தை இன்று வகுப்பீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல நிற கிரிஸ்டல்

சிம்மம்:

இத்தனை நாள் உங்கள் அலுவலகம் அல்லது பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் இன்று முதல் படிப்படியாக குறையும். சில துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் குடும்பத்திற்கு உங்களின் ஆதரவு பெரிய அளவில் இன்று தேவைப்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தெளிவான குவார்ட்ஸ்

கன்னி:

உங்கள் தினசரி வழக்கத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்திருந்த மாற்றங்களை செய்ய இன்று உங்களுக்கு நல்ல நாள். இன்று உங்களை புதிய மற்றும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அது உங்கள் பணியிடத்தில் உங்களை புதிய பரிமாணத்தில் காட்டும். மற்றவர் விஷயங்களில் எப்போதும் விலகியே இருப்பது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரகத கல்

துலாம்:

உங்கள் பதவி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த யாராவது முயற்சி செய்யலாம். எனவே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளியாட்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. ஒரு சில மாற்றங்களை ஏற்று கொள்ளவும் தயாராக இருங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு விலைமதிப்பற்ற கல்

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து வேலைக்கு அழைப்பு வரலாம். இருக்கும் வேலையை தவிர வேறு ஒரு மூலத்திலிருந்து வருமானம் ஈட்ட வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செவ்வந்திக்கல்

தனுசு:

உங்களுக்கு என்ன தேவை என்பதற்கான முன்னுரிமைகளில் இன்று தெளிவாக இருங்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இன்று முடிவடையலாம். நீங்கள் ஒரு ஆத்ம துணையை தேடி கொண்டிருந்தால், விரைவில் இன்று உங்களை தேடி அவரை வரலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சங்கு

மகரம்:

உங்களது நிதி நிலைமை சீராக இருக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்பதில்லை. கடன் கேட்டு வருபவரிடம் உஷாராக இருங்கள். திடீர் வாய்ப்புகள் உங்களை உயரே கொண்டு செல்ல கூடும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஜேட் தாவரம்

கும்பம்:

இன்றைய நாள் உங்களுக்கு சற்று கடினமாக மற்றும் எரிச்சலூட்டுவதாக அமையலாம். பணிசுமைகள் காரணமாக சோர்வாக உணரலாம். சிறிது நேர ஓய்வு இன்று உங்களுக்கு மிகவும் அவசியம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு உப்பு விளக்கு

மீனம்:

வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டருந்தால் வெற்றிகரமாக அமையும். நீங்கள் ஒரு புகழ்பெற்ற பள்ளியில் குழந்தைகளை சேர்க்க எடுக்கும் முயற்சி சற்று பின்னடைவை சந்திக்கலாம். உங்கள் தேவைகளை நீங்கள் குறைத்து கொள்ள வேண்டியிருக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மார்பிள் டேபிள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி